For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு கிறிஸ்துமஸ் குடில் வைக்க போறீங்களா? அப்ப இந்த மாதிரி ட்ரை பண்ணுங்க...

By Maha
|

கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு பல்வேறு வீடுகளில் குடில்கள் வைக்கும் பழக்கம் இருக்கும். அப்படி நீங்கள் உங்கள் வீட்டில் கிறிஸ்துமஸ் குடில் வைப்பதாக இருந்தால், அதனை மிகவும் அழகாக அலங்கரித்தால், வீட்டிற்கு வரும் விருந்தினர்களிடம் நல்ல பெயர் வாங்கலாம். மேலும் நிறைய மக்கள் ஒவ்வொரு கிறிஸ்துமஸ் பண்டிகைக்கும் ஒவ்வொரு மாதிரியான குடில் வைக்க விரும்புவார்கள்.

ஆகவே அத்தகையவர்களுக்காக தமிழ் போல்ட் ஸ்கை அருமையான பல ஐடியாக்களை பட்டியலிட்டுள்ளது. அவற்றைப் படித்து, அவற்றில் பிடித்ததை செய்து மகிழுங்கள். மேலும் இந்த பட்டியல் நிச்சயம் உங்களுக்கு ஒரு நல்ல ஐடியாவைக் கொடுக்கும் வகையில் இருக்கும்.

அதுமட்டுமின்றி இந்த பட்டியலில் சிம்பிள் முதல் ஆரம்பரம் வரை பல கிறிஸ்துமஸ் குடில்களின் டிசைன்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றைப் பார்ப்போமா!!!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தாமரை குடில்

தாமரை குடில்

இந்த வருடம் வித்தியாசமான முறையில் குடிலை செய்ய நினைத்தால், படத்தில் காட்டப்பட்டவாறு தாமரை கிறிஸ்துமஸ் குடிலை முயற்சி செய்யுங்கள். இது நிச்சயம் வித்தியாசமானதாக இருக்கும்.

பல்புகள்

பல்புகள்

சாதாரணமாக வேண்டுமானால், தரையில் புற்களை பரப்பி, குடில் அமைத்து, அதில் பலவண்ண பல்புகளை பயன்படுத்தி அலங்கரிக்கலாம்.

செடிகளுக்கு நடுவே

செடிகளுக்கு நடுவே

வீட்டில் நிறைய தொட்டிச் செடிகள் இருந்தால், அவற்றை ஒன்றாக வைத்து, அதன் மேல் குடில் போன்று அமைக்கலாம். இது உண்மையில் வித்தியாசமாக இருக்கும்.

மண்

மண்

எளிமையான முறையில் குடில் அமைக்க நினைத்தால், மண் கொண்டு செய்யலாம்.

வைக்கோல்

வைக்கோல்

இன்னும் வித்தியாசமாக செய்ய நினைத்தால், வைக்கோல் பரப்பி, தென்னங்கீற்றை கூரையாக வைத்து குடில் அமைக்கலாம்.

களிமண்

களிமண்

இருப்பதிலேயே மிகவும் சூப்பரான ஒரு வழி என்றால், அது களிமண் பயன்படுத்தி குடில் அமைப்பது தான். இப்படி செய்வதால், அதிகம் செலவு ஆகாமல் இருப்பதோடு, இயற்கையான தோற்றத்தையும் கொடுக்கும்.

காகித குடில்

காகித குடில்

குடில் அமைக்க இடம் இல்லாவிட்டால், உங்களுக்கு ஓவியத்தில் ஆர்வம் இருந்தால், சார்ட் பேப்பரில் அழகாக குடில் இருப்பது போன்று ஓவியம் வரைந்து வைத்து, அதில் குட்டியான பலவண்ண பல்புகளால் அலங்கரிக்கலாம்.

ஐஸ் க்ரீம் குச்சி

ஐஸ் க்ரீம் குச்சி

இன்னும் வித்தியாசமாக செய்ய நினைத்தால், ஐஸ் க்ரீம் குச்சிகளைப் பயன்படுத்தி குடில் அமைக்கலாம்.

வைக்கோல் மற்றும் குச்சி

வைக்கோல் மற்றும் குச்சி

இந்த முறையில் வைக்கோல் மற்றும் குச்சி இருந்தால் போதும். இதனைக் கொண்டு அருமையான முறையில் கிறிஸ்துமஸ் குடில் அமைக்கலாம்.

மரக்குடில்

மரக்குடில்

லேட்டஸ்ட் ட்ரெண்ட் என்றால், அது மரக்குடில் தான். அதற்கு மரத்துண்டுகளால் குடில் அமைத்து, அதில் புற்கள், வைக்கோல் மற்றும் பல்புகளை கொண்டு அலங்கரிக்க வேண்டும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Decorate Christmas Crib For Your Home

Here are some of the best ways to decorate Christmas crib for you to try out this Winter. Keeping in mind the budget, these crib decoration ideas are not that high rated in the market for you to own as well!
Story first published: Monday, December 23, 2013, 19:26 [IST]
Desktop Bottom Promotion