For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

குளியலறையை ஸ்டைலாக மாற்றுவதற்கு தேவையான பொருட்கள்!!!

By Super
|

வீட்டை கட்டும் போது ஒவ்வொரு அறையையும் பார்த்து பார்த்து கட்டுவோம். ஒவ்வொன்றையும் அலங்கரிக்க தனி சிரத்தையே எடுத்துக் கொள்வோம். ஆனால் பலர் குளியலறையை வடிவமைப்பதற்கும், அலங்கரிப்பதற்கும் அந்த சிரத்தையை எடுப்பதில்லை. குளியலறை தானே என்று அதற்கு முக்கியத்துவம் கொடுப்பதை நிறுத்தக்கூடாது. வீட்டில் உள்ள மற்ற அறைகள் போல, அதுவும் முக்கியம் வாய்ந்த ஒரு அறை தான். பலர் அதற்கு உரிய முக்கியத்துவத்தை கொடுத்து கட்டாவிட்டாலும், மற்ற அறைகளைப் போல குளியலறையும் முக்கியமான அறையாகும்.

நல்லா யோசிச்சு பாருங்க, காலையில் எழுந்தவுடன் நாம் முதலில் செய்வது என்ன? தூக்கம் களைந்து புத்துணர்ச்சி பெறுவதற்கு நேராக குளியலறைக்கு செல்வது தானே! அதுவும் நம்மில் பலர் தூக்கம் சொருகும் கண்களுடனேயே தான் உள்ளே நுழைவோம். அதனால் அதனை பார்த்து பக்குவமாக வடிவமைத்தால், எந்த ஒரு தொந்தரவும் இன்றி நேரத்தை நிம்மதியாக செலவிடும் இடமாக அது மாறும். அது எப்படி சாத்தியமாகும் என்று தோன்றுகிறதா? பெரிதாக ஒன்றும் இல்லை. குளியலறைக்கு தேவையான போதுமான பொருட்களே அதற்கு போதுமானது. ஆம், எந்த ஒரு அறையானாலும் சரி, அதற்குரிய பொருட்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தால் போதும், அது விரும்பிய இடமாக இருக்கும்.

பொதுவாக தேவையான பொருட்களை வைக்காமல் எந்த ஒரு குளியலறையும் நிறைவு பெறுவதில்லை. அதுவும் இன்றைய சந்தையில் பல வகையான பொருட்கள் கொட்டி கிடக்கின்றன. ஆனால் அதனை வாங்கச் செல்லும் முன், சில விஷயங்களை நாம் மனதில் வைத்துக் கொள்ள வேண்டும். வீட்டில் உள்ள மற்ற அலங்காரப் பொருட்கள், வண்ணச் பூச்சு போன்றவைகளுடன் நீங்கள் வாங்கும் பொருட்கள் ஒத்துப் போகின்றதா என்பதை சரி பார்த்துக் கொள்ள வேண்டும். மேலும் பட்ஜெட்டிற்குள் பொருட்களை தேர்ந்தெடுக்க வேண்டும். அனைத்தையும் விட முக்கியமானது பாதுகாப்பு. எனவே வாங்கும் பொருட்கள் பாதுகாப்பாக இருப்பது மிகவும் முக்கியமான ஒன்று.

சரி, இப்போது குளியலறையை ஸ்டைலாக அலங்கரிக்க தேவையான சில முக்கியமான பொருட்களைப் பற்றிப் பார்க்கலாமா...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கண்ணாடி

கண்ணாடி

கண்ணாடி இல்லாமல் ஒரு குளியலறையா? உண்மை தான். கண்ணாடி என்பது குளியலறையின் முக்கியமான அங்கம் என்று கூட சொல்லலாம். கண்ணாடி இருந்தால் போதும், அது சின்ன குளியலறையாக இருந்தாலும் கூட, அதற்கு ஒரு நிறைவை தரும். அதுவும் கண்ணாடி ஸ்டைலாக இருந்து விட்டால் போதும், குளியலறை சொகுசு அறையை போல் காட்சி அளித்து, அவ்வகை உணர்வையே ஏற்படுத்தும். கண்ணாடியின் அளவை ஒவ்வொருத்தரின் விருப்பத்தை பொறுத்து தேர்ந்தெடுக்கலாம். ஆனாலும் கூட பலர் பெரிய அளவிலான கண்ணாடியையே விரும்புகின்றனர். இருப்பினும் கண்ணாடியை சுத்தமாக வைத்துக் கொள்ள மறந்து விடாதீர்கள். அப்போது தான் முகத்தை தெளிவாக பார்த்துக் கொள்ள முடியும்.

குழாய்

குழாய்

குளியலறையில் உள்ள குழாய்களின் முக்கிய வேலையே தண்ணீரை தொட்டிக்கு கொண்டு வருவதே ஆகும். அதனால் ஒவ்வொரு முறையும் கைப்பிடி குவளையை நிரப்பத் தேவையில்லாமல், கைகளை கழுவுதல், பற்களை துலக்குதல் போன்றவற்றில் சுலபமாக ஈடுபடலாம். இன்றைய சந்தையில் பல வடிவமைப்பில், பல அளவில், பல வகையான குழாய்கள் விற்கப்படுகின்றன. அதனால் திட்டமிட்டிருந்த குழாயை சுலபமாக தேர்ந்தெடுங்கள். அவ்வாறு குழாய்கள் வாங்கும் முன், தொட்டியின் நீளத்தையும் அகலத்தையும் மனதில் வைத்துக் கொள்ளுங்கள். ஒரு வேளை வீட்டில் குழந்தைகள் இருந்தால் சுலபமாக பயன்படுத்த கூடிய குழாய்களையே தேர்ந்தெடுங்கள்.

சின்க்

சின்க்

குளியலறையின் மற்றொரு முக்கிய அங்கமாக திகழ்கிறது சின்க். சரியான சின்க்கை தேர்ந்தெடுத்தால், அது குளியலறைக்கு ஒரு சொகுசு தோற்றத்தை அளிக்கும். அதுவே தவறான ஒன்றை தேர்ந்தெடுத்தால், குளியலறையின் அழகே கெட்டுப்போகும். இப்ப சொல்லுங்க எது வேணும்? சரியான தேர்வு என்று நாங்கள் குறிப்பிடுவது சரியான வண்ணம், அளவு போன்றவற்றையும் சேர்த்து தான். வண்ணம் சரியாக இருந்தால் தான் குளியலறையுடன் ஒத்துப் போகும். அளவை பொறுத்த வரை பெரிதாகவும் இருக்கக் கூடாது, சிறியதாகவும் இருக்கக் கூடாது. இரண்டுமே உங்களுக்கு அசௌகரியத்தை அளிக்கலாம். சுவற்றுடன் மாட்டும் படியான சின்க் அல்லது தனியாக தரையில் நிற்கும் சின்க்கை தேர்ந்தெடுக்கலாம். அது உங்கள் விருப்பத்தை பொறுத்தது. தனியாக தரையில் நிற்கும் தொட்டியில் பயன்கள் சற்று அதிகம். அதற்கு காரணம் அதனுடன் சேர்ந்து வரும் பெட்டிகள். இதனுள் குளியலறையில் நீங்கள் பயன்படுத்தும் சோப்பு, பேஸ்ட் போன்ற அனைத்து பொருட்களையும் அடுக்கி வைத்துக் கொள்ளலாம் அல்லவா? அதனால் அறையின் இடத்தை அடைக்காமல் இருக்கும்.

குளிக்க பயன்படுத்தும் சாதனங்களை வைக்க பிடிப்பான்கள்

குளிக்க பயன்படுத்தும் சாதனங்களை வைக்க பிடிப்பான்கள்

சோப்பு ட்ரே மற்றும் டூத் ப்ரஷ் பிடிப்பான்கள் போன்ற பொருட்களும் ஒரு குளியலறைக்கு அவசியமான ஒன்றாகும். அவைகள் சின்ன பொருட்களாக மற்றும் அத்தியாவசியம் இல்லாத பொருட்களாக தோன்றலாம். ஆனால் அவைகள் இல்லாமல் கண்டிப்பாக குளியலறை முழுமை பெறாது. அதுவும் இன்றைய கால கட்டத்தில் பல வகையான வண்ணங்கள் மற்றும் வடிவமைப்புடன் சந்தையில் பல வகையில் விற்கப்படுகிறது. ஆகவே சரியான பொருட்களை தேர்வு செய்து, அதனை சரியான இடத்தில் பொருத்தினால், அது குளியலறைக்கு கூடுதல் அழகை சேர்க்கும். ஆனால் குளியலறையில் உள்ள மற்ற பொருட்களுடன் இது ஒத்து போகிறதா என்பதை மட்டும் சரி பார்த்துக் கொள்ளுங்கள்.

பெட்டிகள்

பெட்டிகள்

சுவற்றை குடைந்து செய்யப்பட்டிருந்தாலும் சரி அல்லது கீல்களை பயன்படுத்தி சுவற்றில் மாட்டியிருந்தாலும் சரி, பொதுவாக சின்க்கிற்கு மேல் தான் பெட்டிகளை மாட்டுவோம். ஏனெனில் மருந்துகள் மற்றும் இதர குளியலறை சாதனங்களை வைக்க அதுவே சிறந்த இடமாக கருதப்படுகிறது. குளியறையின் அளவை பொறுத்து இவ்வகை பெட்டிகளின் முகப்பில் முகம் பார்க்கும் கண்ணாடியை கூட வைக்கலாம். இதனால் தனியாக ஒரு கண்ணாடியை பொறுத்த தேவையில்லை. இப்போதெல்லாம் நவீன மையத்துடன் பல பெட்டிகள் விற்கப்படுகிறது.

காகித சுருள்

காகித சுருள்

நம் நாட்டில் இது பல பேருக்கு தேவைப்படாத ஒன்றாக இருக்கலாம். ஆனால் பயன்படுத்துவோருக்கு இது மிகவும் அவசியமான ஒன்றாகும். யாருக்குமே கழிவறையில் அமரும் இடம் ஈரமாக இருந்தால் பிடிப்பதில்லை. அதே போல் கைகளையும் துடைக்க வேண்டும் அல்லவா? அப்படியானால் கண்டிப்பாக காகித சுருள் தேவைப்படும். காகித சுருள் வாங்கும் போது, மேல் உறையுடன் இருக்கக் கூடியதாக வாங்குங்கள். அதனால் அவை ஈரத்தில் நனையாமல் இருக்கும்.

குப்பை தொட்டி

குப்பை தொட்டி

குளியலறையில் குப்பை தொட்டி ஒரு முக்கியமான அங்கம் என்பதில் மாற்று கருத்து இருக்கப் போவதில்லை. உறைத் தாள்கள், உபயோகித்த டிஷ்யூ பேப்பர், கரைந்த எஞ்சியிருக்கும் சோப்பு, டூத் பேஸ்ட் போன்றவற்றை தரையில் போடாமல் இருக்க குப்பை தொட்டி வேண்டுமல்லவா? அதிலும் மூடி இருக்கும் குப்பைத் தொட்டியை வாங்குவதே சிறந்தது. அதனால் பூச்சிகள் மற்றும் ஈக்கள் அண்டாமல் இருக்கும். அதுவும் பெடல் வகை குப்பை தொட்டி வாங்கி கொண்டால், ஒவ்வொரு முறையும் மூடியை திறக்க குனியத் தேவையில்லை. காலை கொண்டு அழுத்தினால் போதும், மூடி தானாக திறந்து மூடிக் கொள்ளும்.

அழுக்கு துணிகளை போடும் பெட்டி

அழுக்கு துணிகளை போடும் பெட்டி

இது கண்டிப்பாக இருக்க வேண்டும் என்றில்லை. ஆனால் இருந்தால் எந்த ஒரு பாதிப்பும் இல்லை. அழுக்கு துணிகளை போடும் பெட்டி ஒன்று இருந்தால், குடும்பத்தில் உள்ள அனைவரும் தங்கள் துணிகளை ஒரு இடத்தில் கழற்றிப் போடுவார்கள். அதனால் துவைக்கும் துணிகளை வாங்க ஒவ்வொருத்தர் அறைக்கும் தனியாக செல்லாமல், ஒரே இடத்தில் அனைத்தையும் பெறலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Accessorise Your Bathroom In Style

No bathroom is complete without various bathroom accessories installed in it. And with the wide range available in the market today, you are indeed spoil it for choices. But when heading out shopping, it is necessary to pay attention to a few important factors.
Desktop Bottom Promotion