உடலில் இரத்த ஓட்டத்தை மேம்படுத்தும் யோகா நிலைகள்!

இங்கு உடலில் இரத்த ஓட்டத்தை மேம்படுத்தும் யோகா நிலைகள் கொடுக்கப்பட்டுள்ளன.

Subscribe to Boldsky

உடலுறுப்புக்கள் எவ்வித பிரச்சனையும் இல்லாமல் செயல்பட வேண்டுமானால், இரத்த ஓட்டம் சீராக இருக்க வேண்டும். ஒருவரது உடலில் இரத்த ஓட்டம் முறையாக இருந்தால், இதய நோய்கள், பக்கவாதம் மற்றும் இரத்தம் உறைதல் போன்றவற்றில் இருந்து விலகி இருக்கலாம்.

Yoga Poses To Improve Blood Circulation

உடலில் இரத்த ஓட்டம் மோசமாக இருந்தால், ஊட்டச்சத்துக்களை உடலால் சரியாக உறிஞ்ச முடியாமல் போகும். ஒருவரது உடலில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்க குறிப்பிட்ட யோகா நிலைகள் உதவும். இங்கு அந்த யோகா நிலைகள் கொடுக்கப்பட்டுள்ளன. அதை தினமும் செய்து வந்தால், உடலில் இரத்த ஓட்டம் நன்றாக இருக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

தடாசனம்

தடாசனம் நிலை நுரையீரலின் செயல்பாட்டை மேம்படுத்துவதோடு, வலிமையாக்கவும் செய்யும். கர்ப்பத்தின் ஆரம்ப காலத்தில் செய்வதற்கு இது சிறந்த ஆசனம். இந்த ஆசனத்தின் போதான மூச்சுப்பயிற்சியின் உதவியினால், உடலில் இரத்த ஓட்டம் சீராக இருக்கும்.

திரிகோணாசனம்

முக்கோண வடிவிலான இந்த யோகா நிலையினால் இரத்த ஓட்டம் மேம்படுவதோடு, ஆஸ்டியோபோரோசிஸ் மற்றும் மலச்சிக்கல் பிரச்சனைகள் தடுக்கப்படும். இந்த யோகாவை கர்ப்ப காலத்தில் மேற்கொண்டால், இரத்த ஓட்டம் சிறப்பாக இருக்கும்.

ஏக பாத ராஜகபோதாசனம்

இந்த யோகாசனம் சிறுநீரக சம்பந்தமான கோளாறுகளை சரிசெய்வதோடு, அடிமுதுகு வலி பிரச்சனையில் இருந்து விடுவிக்கும். மேலும் இந்த ஆசனம் உடல் உள்ளுறுப்புக்களில் இரத்த ஓட்டத்தைத் தூண்டும்.

சர்வங்காசனம்

இந்த ஆசனம் ஒட்டுமொத்த உடலையும் சீராக செயல்படச் செய்யும் மற்றும் சுவாச மண்டலத்தின் செயல்பாட்டையும் மேம்படுத்தும். அதோடு, இந்த ஆசனம் உடலில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும்.

உஷ்ட்ராசனம்

இந்த ஆசனம் முதுமையிலும் செய்வதற்கு ஏற்றது. இது உடலில் இரத்த ஓட்டத்தை ஊக்குவிக்கும். குறிப்பாக கருப்பையில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும் மற்றும் சுவாச பிரச்சனைகளை எதிர்த்துப் போராடும்.

ஷசங்காசனம்

இந்த ஆசனம் உடலின் மேலின் பகுதியை ஸ்ட்ரெட்ச் செய்வதால், மன இறுக்கத்தில் இருந்து விடுவிக்கும். மேலும் இந்த ஆசனம் உடலின் மேல் பகுதியில் இரத்த ஓட்டத்தை மேம்படுத்தும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

சிறந்த ஹெல்த் இன்சூரன்ஸ் எதுவென, ஒப்பிட்டு பார்த்து தேர்வு செய்யுங்கள்!

English summary

Yoga Poses To Improve Blood Circulation

Here are some yoga poses to improve blood circulation. Read on to know more...
Please Wait while comments are loading...
Subscribe Newsletter