For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இனிமே, தாகம் எடுத்த இத ஒன்னு எடுத்து லபக்குன்னு வாயில போட்டுக்குங்க!

ஓஹோ பபுல்! வாட்டர் பாட்டில்களுக்கு மாற்றாக ஒரு புரட்சிமிகு கண்டுப்பிடிப்பு!

|

பிளாஸ்டிக் வாட்டர் பாட்டில்களால் சுற்றுப்புற சூழல் வெகுவாகவும், வலுவாகவும் பாதிக்கப்படுவது நாம் அறிந்தது தான். ஆனால், அலுமினியம், எவர்சில்வர் போன்ற பாட்டில்களில் தண்ணீர் எடுத்து செல்ல பல மாற்று இருந்தன.

ஆனால், மனிதர்களின் சோம்பேறித் தனத்தால், எல்லா இடங்களிலும் இது ஒத்து வராது என்ற காரணத்தால் வேறு மாற்றே இல்லை என சொல்லி பிளாஸ்டிக் வாட்டர் பாட்டில்கள், பிளாஸ்டிக் கவர் பாக்கெட்டுகளில் தண்ணீர் குடித்து அதை நிலத்தில் வீசி, நிலத்தையே மலடாக்கி, மக்கா குப்பைகள் நிறைத்து சீரழித்து வந்தோம்.

இப்போது லண்டனை சேர்ந்த ஒரு ஆய்வகம் இதற்கான சிறந்த மாற்றை கண்டுபிடித்துள்ளது. அது தான் ஓஹோ பபுல்!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
இம்பீரியல் கல்லூரி!

இம்பீரியல் கல்லூரி!

லண்டனில் உள்ள இம்பீரியல் எனும் கல்லூரி ஆய்வாளர்கள் தண்ணீர் பாட்டில்களுக்கு மாற்றாக தண்ணீர் பந்துகளை கண்டுபிடித்துள்ளனர். மேலும், இதற்கு ஓஹோ பபுல் என பெயரும் இட்டுள்ளனர்.

மெல்லிய சவ்வு!

மெல்லிய சவ்வு!

தண்ணீரை டிரான்ஸ்பரன்ட்டான மெல்லிய சவ்வு போன்ற தன்மை கொண்ட பந்தில் அடைத்துவிடுகின்றனர். இது பார்பதற்கு தண்ணீர் பந்து போல காட்சியளிக்கும்.

அழுத்தம்!

அழுத்தம்!

தாகம் எடுக்கும் போது அந்த சவ்வை நீக்கிவிட்டு நீங்கள் வாயில் போட்டுக் கொள்ள வேண்டும். வாயில் போட்டவுடன் நீங்கள் லேசான அழுத்தம் கொடுத்தால், அந்த பந்து உடைந்து தண்ணீர் வெளிப்படும்.

சோடியம் அல்ஜினேட்!

சோடியம் அல்ஜினேட்!

இந்த தயாரிக்க சோடியம் அல்ஜினேட் மற்றும் கால்சியம் குளோரைட் பயன்படுத்துகின்றனர். இவர் கடல் பாசியில் இருந்து எடுக்கப்படுகின்றன. இதனால், தண்ணீர் பந்தின் சவ்வை விழுங்கினாலும் எந்த பாதிப்பும் ஏற்படாது என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

செலவும் குறைவு!

செலவும் குறைவு!

மேலும், தண்ணீர் பிளாஸ்டிக் பாட்டில்கள் தயாரிக்கும் செலவை விட, இந்த தண்ணீர் பந்து தயாரிப்பு செலவு பன்மடங்கு குறைவு என்பதாலும், இந்த பந்தை அப்படியே விழுங்கினாலும் எந்த பாதிப்பு ஏற்படாது என்பதாலும், மக்களுக்கு இது பயனுள்ளதாக இருக்கும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

முதற்கட்டம்!

முதற்கட்டம்!

இது இன்னும் உலக சந்தையில் எங்கும் அறிமுகம் செய்யப்படவில்லை. இதை முதலில் விளையாட்டு மைதானங்களில் பயன்படுத்தி பாப்போம். பிறகு உலகம் முழுவதும் சந்தைப்படுதலாம் என திட்டமிட்டு வருகிறார்கள்.

எதிர்கால தேவை!

எதிர்கால தேவை!

ஏற்கனவே உலகம் மெல்ல, மெல்ல தன் தன்மையை இழந்து வருகிறது. பிளாஸ்டிக் இதற்கான முக்கிய காரணியாக இருக்கிறது. இந்த தண்ணீர் பந்து மக்களுக்கு மட்டுமின்றி, இயற்கையை காக்கவும் வழிவகுக்கும் என கூறுகின்றனர்.

கூல்டிரிங்ஸ்!

தண்ணீர் மட்டுமல்ல, இந்த தண்ணீர் பந்துகளில் கூல்டிரிங்ஸ் நிரப்பியும் விற்கலாம் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். என்ன கூறினாலும், பார்க்க வித்தியாசமாக இருக்கும் இதனால் நாள்ப்பட ஏதேனும் உடல்நலக் கோளாறு உண்டாகுமோ என்ற அச்சம் மக்கள் மத்தியில் இருக்கத்தான் செய்கிறது.

All Image Courtesy -Pasha.Corp

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

What is Oho Bubble aka Water Bubble? Things to Know About it!

What is Oho Bubble aka Water Bubble? Things to Know About it!
Story first published: Thursday, May 25, 2017, 10:01 [IST]
Desktop Bottom Promotion