அஜீரண பிரச்சனையில் இருந்து உடனடியாக விடுபட வேண்டுமா? அப்ப இத ஒரு டம்ளர் குடிங்க...

இங்கு அஜீரண பிரச்சனையில் இருந்து உடனடி நிவாரணம் தரும் ஜூஸ் குறித்து கொடுக்கப்பட்டுள்ளது.

Posted By:
Subscribe to Boldsky

தற்போது அஜீரணப் பிரச்சனையால் ஏராளமான மக்கள் அவஸ்தைப்படுகின்றனர். ஒருவருக்கு அஜீரண கோளாறுகள் ஏற்படுவதற்கு மோசமான உணவுப் பழக்கங்கள், உடல் பருமன், அசிடிட்டி, வயிற்று அல்சர், மலச்சிக்கல், குறிப்பிட்ட மருந்துகள் போன்றவை காரணங்களாக அமைகின்றன.

What Happens When You Drink Muskmelon Juice With Lemon Juice?

அஜீரண கோளாறுகள் தீவிரமாக இருந்தால், அடிவயிற்றில் வலி, வயிற்று உப்புசம், வாய்வுத் தொல்லை, ஏப்பம், குமட்டல், வாந்தி போன்ற அறிகுறிகள் தென்படும். இப்போது அஜீரண பிரச்சனையில் இருந்து உடனடி நிவாரணம் தரும் ஒரு ஜூஸ் குறித்து கொடுக்கப்பட்டுள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தேவையான பொருட்கள்:

தேவையான பொருட்கள்:

முலாம் பழ ஜூஸ் - 1 டம்ளர்
எலுமிச்சை சாறு - 2 டேபிள் ஸ்பூன்

முலாம் பழம்

முலாம் பழம்

முலாம் பழத்தில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் வைட்டமின் சி போன்றவை உள்ளது. இது அதிகப்படியான அமில உற்பத்தியால் செரிமான கோளாறுகள் ஏற்படுவதைக் குறைக்கும். மேலும் முலாம் பழம் குளிர்ச்சித்தன்மை மிக்கதால், இது வயிற்று பிரச்சனைகளைப் போக்குவதில் சிறந்த பழமும் கூட.

எலுமிச்சை சாறு

எலுமிச்சை சாறு

எலுமிச்சையில் உள்ள வைட்டமின் சி மற்றும் லெமோனேன், அஜீரண கோளாறுகளை உண்டாக்கும் அதிகப்படியான அமிலச் சுரப்பைக் குறைக்க உதவி புரியும்.

ஜூஸ் தயாரிக்கும் முறை:

ஜூஸ் தயாரிக்கும் முறை:

முலாம் பழ ஜூஸ் உடன் எலுமிச்சை சாற்றினை சேர்த்து நன்கு கலந்து கொண்டால், ஜூஸ் தயார்.

குடிக்கும் முறை:

குடிக்கும் முறை:

அடிக்கடி அஜீரணப் பிரச்சனையால் அவஸ்தைப்படுபவர்கள், இந்த ஜூஸை தினமும் உணவு உட்கொண்ட பின் குடிக்க வேண்டும். இப்படி தொடர்ந்து 3 மாதங்கள் பின்பற்றினால், அஜீரண பிரச்சனையில் இருந்து முழுமையாக விடுபடலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

What Happens When You Drink Muskmelon Juice With Lemon Juice?

Learn how the mixture of muskmelon juice and lemon juice can treat indigestion, here.
Please Wait while comments are loading...
Subscribe Newsletter