For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உணவில் மிளகுத் தூளை அளவுக்கு அதிகமாக சேர்ப்பதால் சந்திக்கும் பிரச்சனைகள் பற்றித் தெரியுமா?

இங்கு மிளகை உணவில் அதிகம் சேர்ப்பதால் சந்திக்கும் பக்கவிளைவுகள் பட்டியலிடப்பட்டுள்ளன.

|

இந்தியாவில் உள்ள ஒவ்வொரு வீட்டு சமையலறையிலும் இருக்கும் ஒரு பொருள் தான் மிளகு. மேலும் இது மேற்கத்திய நாடுகளிலும் பயன்படுத்தப்படும் ஓர் பிரபலமான மசாலாப் பொருள். இந்த மிளகில் ஏராளமான நன்மைகள் அடங்கியுள்ளது என்று அனைவருக்குமே தெரியும்.

Warning! Black Pepper Can Cause These Serious Side Effects

இது உணவில் கார சுவையைக் கொடுப்பதோடு, தனித்துவமான ப்ளேவரைக் கொண்டுள்ளதால், உணவின் மணமும் சூப்பராக இருக்கும். மிளகில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகுள், நொதிகள், புரோட்டீன்கள், வைட்டமின்கள் போன்ற உடலின் அத்தியாவசிய செயல்பாட்டிற்கு தேவையான அனைத்து சத்துக்களும் உள்ளது.

என்ன தான் ஆரோக்கியமான உணவுப் பொருளாக இருந்தாலும், ஒருவர் தங்கள் உணவில் மிளகை அளவுக்கு அதிகமாக சேர்த்தால், பல தீவிர உடல்நல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். இங்கு மிளகை உணவில் அதிகம் சேர்ப்பதால் சந்திக்கும் பக்கவிளைவுகள் பட்டியலிடப்பட்டுள்ளன.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
இரைப்பை உணவுக்குழாய் சிக்கல்கள்

இரைப்பை உணவுக்குழாய் சிக்கல்கள்

மிளகை அதிகமாக உணவில் சேர்த்தால், இரைப்பை உணவுக்குழாய் பிரச்சனைகளை சந்திக்க நேரிட்டு, எப்போதும் வயிறு அசௌகரியமாக இருக்கும்.

வயிற்று எரிச்சல்

வயிற்று எரிச்சல்

அளவுக்கு அதிகமாக மிளகை உணவில் சேர்ப்பதன் மூலம், வயிற்றில் எரிச்சல் மற்றும் அசௌகரியத்தை உணரக்கூடும். எனவே மிளகை அளவாக உணவில் சேர்த்து நன்மைப் பெறுங்கள்.

சுவாசப் பிரச்சனைகள்

சுவாசப் பிரச்சனைகள்

மிளகை அதிகம் சாப்பிட்டால், சுவாச பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும். குறிப்பாக இதனை அளவுக்கு அதிகமாக சேர்க்கும் போது, தொண்டையில் எரிச்சல், ஆஸ்துமா பிரச்சனைகள் மற்றும் இதர சுவாச பிரச்சனைகளை ஏற்படுத்தும்.

சரும வறட்சி

சரும வறட்சி

ஆய்வுகளின் படி, மிளகுத் தூளை ஒருவர் அதிகமாக உணவில் சேர்த்தால், அது சரும வறட்சியை அதிகரித்து, அசிங்கமாக தோல் உரிய ஆரம்பிக்கும். எனவே ஏற்கனவே வறட்சியான சருமம் கொண்டவர்களானால், மிளகை அதிகம் உணவில் சேர்ப்பதைத் தவிர்ப்பது நல்லது. மேலும் சென்சிடிவ் சருமம் உள்ளவர்களும், இதைத் தவிர்ப்பது நல்லது.

கர்ப்ப காலம்

கர்ப்ப காலம்

கர்ப்ப காலத்தில் பெண்களின் உடல் மிகவும் சென்சிடிவ்வாக இருக்கும். கர்ப்பிணிகள் எப்போதும் மிளகில் இருந்து சற்று விலகி இருப்பது நல்லது. இல்லாவிட்டால், அது மிகுந்த அசௌகரியத்தை உண்டாக்கம். ஒருவேளை காரமாக சாப்பிட ஆசை இருந்தால், மிளகை அளவாக, எப்போதாவது சிறிது சேர்த்துக் கொள்ளுங்கள். அளவுக்கு அதிகமாக கர்ப்பிணிகள் மிளகை உணவில் சேர்த்தால், கருச்சிதைவு ஏற்படும் வாய்ப்பு அதிகம் உள்ளது.

தாய்ப்பால் கொடுக்கும் போது...

தாய்ப்பால் கொடுக்கும் போது...

தாய்ப்பால் கொடுக்கும் பெண்களும் மிளகைத் தவிர்ப்பது நல்லது. ஏனெனில் மிளகை தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் அதிகம் சேர்த்துக் கொண்டால், அது தாய்ப்பாலின் சுவையை மாற்றுவதோடு, குழந்தைக்கு செரிமான பிரச்சனைகளையும் ஏற்படுத்தும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Warning! Black Pepper Can Cause These Serious Side Effects

Apart from the health benefits, black pepper has certain side effects as well when you consume too much of it. Read on to know more.
Story first published: Monday, February 13, 2017, 10:06 [IST]
Desktop Bottom Promotion