For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பழங்களைக் கொண்டு ஜூஸ் தயாரிக்கும் போது சேர்க்கக்கூடாத பொருட்கள்!

இங்கு பழங்களைக் கொண்டு ஜூஸ் தயாரிக்கும் போது சேர்க்கக்கூடாத பொருட்கள் பட்டியலிடப்பட்டுள்ளன.

|

பலரும் பழங்களை விட பழச்சாறுகளை விரும்பி குடிப்பார்கள். ஆனால் அப்படி பழங்களைக் கொண்டு ஜூஸ் தயாரிக்கும் போது, அந்த ஜூஸின் சுவையை அதிகரிக்க சேர்க்கப்படும் சில ஃப்ளேவர்கள், கலோரிகளின் அளவை அதிகரித்து, அந்த ஜூஸினால் நன்மைகள் கிடைப்பதற்கு பதிலாக தீமைகளை கிடைக்கச் செய்கின்றன.

எனவே மும்பையைச் சேர்ந்த ஊட்டச்சத்து நிபுணர் தீப்ஷிகா, பழங்களைக் கொண்டு ஜூஸ் தயாரிக்கும் போது சேர்க்கக்கூடாத சில பொருட்களைப் பட்டியலிட்டார். இங்கு அந்த பட்டியல் கொடுக்கப்பட்டுள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஐஸ் க்ரீம்

ஐஸ் க்ரீம்

ஜூஸ் தயாரிக்கும் போது அத்துடன் 2 ஸ்கூப் ஐஸ் க்ரீம்மை சேர்க்கும் போது, அது ஜூஸின் சுவையை அதிகரிக்கலாம். ஆனால் இது ஆரோக்கியமானது அல்ல. எனவே ஜூஸ் தயாரிக்கும் போது, ஐஸ் க்ரீம்களைச் சேர்ப்பதைத் தவிர்த்திடுங்கள்.

ப்ளேவர்டு தயிர்

ப்ளேவர்டு தயிர்

சிலர் பழச்சாறுகளைத் தயாரிக்கும் போது, சில ஃப்ளேவர்டு தயிர்களை சேர்ப்பார்கள். ஆனால் ப்ளேவர்டு தயிர்களில் கெமிக்கல்கள் இருப்பதால், அது உடல் ஆரோக்கியத்தை தான் பாதிக்கும். வேண்டுமானால், வெறும் தயிரை சேர்த்து பழங்களைக் கொண்டு ஸ்மூத்திகளை தயாரித்துக் குடிக்கலாம்.

சர்க்கரை

சர்க்கரை

ஜூஸ் தயாரிக்கும் போது இனிப்பு சுவைக்காக சர்க்கரையை சேர்ப்பது வழக்கம். ஆனால் இருப்பதிலேயே சர்க்கரை தான் மிகவும் மோசமான உணவுப் பொருள். இதை ஜூஸ் உடன் மட்டுமின்றி, வேறு எந்த ஒரு உணவுப் பொருளுடன் சேர்த்து சாப்பிட்டாலும், உடல் ஆரோக்கியம் தான் பாழாகும். வேண்டுமானால் இனிப்பு சுவைக்கு தேன், வெல்லம் போன்றவற்றை சேர்த்துக் கொள்ளலாம்.

புரோட்டீன் பவுடர்

புரோட்டீன் பவுடர்

புரோட்டீன் பவுடரை பால் அல்லது நீருடன் கலந்து குடிக்க வேண்டுமே தவிர, பழச்சாறுகளுடன் கலந்து குடித்தால், எவ்வித நன்மையும் கிடைக்காது. சத்துக்களைப் பெற்று நன்மைகள் கிடைக்கத் தான் ஜூஸ் குடிப்போம். ஆனால் எவ்வித பலனும் கிடைக்காது என்று தெரிந்த பின், எதற்கு புரோட்டீன் பவுடரை சேர்த்து குடிக்க வேண்டும். எனவே எக்காரணம் கொண்டும் பழச்சாறுகளுடன் புரோட்டீன் பவுடரை சேர்க்காதீர்கள்.

நீர்

நீர்

இது பொதுவாக பலரும் செய்யும் ஒரு தவறாகும். பழச்சாறுகளைத் தயாரிக்கும் போது, அதன் அளவை அதிகரிக்க நீரை சேர்த்தால், அந்த ஜூஸில் உள்ள சத்துக்களின் அளவு தான் குறையும். எனவே நீர் சேர்த்து ஜூஸ் தயாரிப்பதை விட, நீர் சேர்க்காமல் குடிப்பதே சிறந்தது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Things You Should Not Add To Fruit Juices

Here are some things that you should not add to fruit juices. Read on to know more...
Story first published: Wednesday, February 15, 2017, 9:55 [IST]
Desktop Bottom Promotion