நம் உடல் ஆரோக்கியத்தை அழிக்கும் உணவுப் பொருட்கள்!

இங்கு உடல் ஆரோக்கியமாக இருக்க உணவில் சேர்க்கக் கூடாதவைகள் பட்டியலிடப்பட்டுள்ளன.

Subscribe to Boldsky

இன்றைய தலைமுறையினரின் உடல் ஆரோக்கியம் மோசமாக இருப்பதற்கு உண்ணும் உணவுகள் தான் முக்கிய காரணம். நாம் சாப்பிடும் அனைத்து உணவுகளுமே நல்லது என்று நினைக்க வேண்டாம். அதிலும் அன்றாடம் நாம் உணவில் சேர்க்கும் சில பொருட்கள், அந்த உணவை நஞ்சாக்கி, உடல் ஆரோக்கியத்தை மோசமாக பாதிக்கிறது.

Things You Must Eliminate From Your Diet For A Healthy 2017!

இங்கு நம் உடல் ஆரோக்கியத்தை அழிக்கும் சில உணவுப் பொருட்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. இந்த உணவுப் பொருட்களை உணவில் சேர்ப்பதைத் தவிர்த்தால், உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

எண்ணெயில் வறுத்த உணவுகள்

வறுத்த உணவுகளில் கலோரிகள் அதிகம் இருப்பதோடு, எண்ணெயை அளவுக்கு அதிகமாக சூடேற்றுவதால், அந்த எண்ணெயில் புற்றுநோயை உண்டாக்கும் கார்சினோஜென்கள் உருவாகி, புற்றுநோய் வரும் அபாயம் அதிகரிக்கும். ஆகவே அளவுக்கு அதிகமாக எண்ணெயில் பொரித்த உணவுகளைத் தவிர்த்திடுங்கள். மேலும் எண்ணெயில் வறுத்த உணவுகள் கொலஸ்ட்ரால் அளவு அதிகரிக்கும் மற்றும் நோயெதிர்ப்பு சக்தியைக் குறைக்கும்.

சர்க்கரை

சர்க்கரையில் ஊட்டச்சத்துக்கள் மிகவும் குறைவு. சர்க்கரை கலந்த உணவுப் பொருட்களை அதிகம் உட்கொள்ளும் போது, அது சர்க்கரை நோய் மற்றும் புற்றுநோயின் அபாயத்தை அதிகரிக்கும். சில நேரங்களில் சர்க்கரை ஒருவரை அடிமையாக்கியும் விடும் என்பது தெரியுமா? எனவே சர்க்கரையை உணவில் சேர்ப்பதைத் தவிர்த்திடுங்கள்.

செயற்கை சுவையூட்டி

சர்க்கரை தான் உடல் ஆரோக்கியத்தை பாதிக்கும் என, பலர் செயற்கை சுவையூட்டிகளைப் பயன்படுத்துவார்கள். ஆனால் இது இன்னும் அபாயமானது. செயற்கை சுவையூட்டி உடலின் மெட்டபாலிசத்தை பாதித்து, உடல் பருமனை அதிகரித்து, சர்க்கரை நோயின் அபாயத்தையும் அதிகரிக்கும். எனவே சர்க்கரை மற்றும் செயற்கை சுவையூட்டிக்கு பதிலாக சுத்தமான தேனைப் பயன்படுத்துங்கள்.

மைதா

நாம் விரும்பி சாப்பிடும் பெரும்பாலான உணவுகளில் மைதா உள்ளது. மைதா இந்திய உணவுப் பொருட்களில் ஒன்று தான். இருந்தாலும், இந்த மைதாவை அன்றாடம் சாப்பிடுவதைத் தவிர்த்திடுங்கள்.

ட்ரான்ஸ் கொழுப்புக்கள்

சீஸ், வெண்ணெய் போன்றவற்றில் ட்ரான்ஸ் கொழுப்புக்கள் அதிகம் உள்ளது. இந்த உணவுப் பொருட்களை உணவில் சேர்த்தால், அதில் உள்ள ட்ரான்ஸ் கொழுப்புக்கள் உடலில் ஆங்காங்கு தங்கி, உடல் பருமனை உண்டாக்கி வாழ்நாள் முழுவதும் அனுபவிக்கக்கூடிய நோய்களுக்கு வழிவகுத்துவிடும்.

சோடா பானங்கள்/பாக்கெட் பழச்சாறுகள்

நம்மில் பலர் வெளியே சுற்றும் போது தாகத்தைத் தணிப்பதற்காக சோடா பானங்கள் அல்லது பழச்சாறுகளை வாங்கிப் பருகுவோம். ஆனால் இதில் சர்க்கரையும், கார்பன்-டை-ஆக்ஸைடு தான் உள்ளது. மேலும் இவற்றில் எந்த ஒரு ஊட்டச்சத்துக்களும் இல்லை. ஆகவே உடனடியாக இம்மாதிரியான பானங்களைப் பருகுவதை தவிர்த்திடுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

சிறந்த ஹெல்த் இன்சூரன்ஸ் எதுவென, ஒப்பிட்டு பார்த்து தேர்வு செய்யுங்கள்!

English summary

Things You Must Eliminate From Your Diet For A Healthy 2017!

Here are some things you must eliminate from your diet for a healthy 2017. Read on to know more...
Please Wait while comments are loading...
Subscribe Newsletter