For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

யாரெல்லாம் க்ரீன் டீ குடிக்கக்கூடாதுன்னு தெரியுமா?

இங்கு யாரெல்லாம் க்ரீன் டீ குடிக்கக்கூடாது என்பது குறித்து கொடுக்கப்பட்டுள்ளது.

|

நம் அனைவருக்குமே க்ரீன் டீ ஆரோக்கியமான ஓர் பானம் என்பது தெரியும். குறிப்பாக உடல் எடையைக் குறைக்க நினைப்போர் தினமும் க்ரீன் டீயைக் குடித்து வந்தால், விரைவில் நல்ல பலனைக் காணலாம். தற்போது மார்கெட்டில் இந்த க்ரீன் டீ பல்வேறு ப்ளேவர்களில் விற்கப்படுகிறது.

These People Should Never Have Green Tea

க்ரீன் டீ என்ன தான் ஆரோக்கியமான பானமாக இருந்தாலும், குறிப்பிட்ட உடல்நல பிரச்சனைகளைக் கொண்டவர்கள் இந்த பானத்தைக் குடிக்கக்கூடாது. குறிப்பாக ஒரு நாளைக்கு 4 கப்பிற்கு மேல் க்ரீன் டீயைக் குடீத்தால், அது உடல் ஆரோக்கியதில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும்.

இக்கட்டுரையில் யாரெல்லாம் க்ரீன் டீயைக் குடிக்ககூடாது என்று கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து அவர்கள் இந்த பானத்தைக் குடிப்பதைத் தவிர்த்தால், நிலைமை மோசமாவதைத் தடுக்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சர்க்கரை நோயாளிகள்

சர்க்கரை நோயாளிகள்

சர்க்கரை நோயாளிகள் க்ரீன் டீயை அளவாக குடித்தாலும், அது ஆரோக்கியத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும். அதுவும் இந்த பானம் இரத்த சர்க்கரை அளவில் இடையூறை ஏற்படுத்தி, தலைச்சுற்றல், பதற்றம், நெஞ்செரிச்சல் போன்றவற்றை உண்டாக்கும். ஆகவே சர்க்கரை நோயாளிகள் க்ரீன் டீயைத் தவிர்ப்பது நல்லது.

கர்ப்பிணிகள்

கர்ப்பிணிகள்

கர்ப்பமாக இருந்தாலோ அல்லது கருத்தரிக்க நினைத்தாலோ, க்ரீன் டீயை அதிகம் குடிக்கக்கூடாது. இதில் உள்ள காப்ஃபைன் எளிதில் இரத்தத்தில் கலந்து கருவுடன் கலந்து, பெரும் பிரச்சனையை சந்திக்க வைத்துவிடும். எனவே கர்ப்பிணிகள் அல்லது கருத்தரிக்க நினைப்பவர்கள், க்ரீன் டீயைக் குடிக்கும் முன் மருத்துவரிடம் ஆலோசித்துக் கொள்ளுங்கள்.

உயர் இரத்த அழுத்தம்

உயர் இரத்த அழுத்தம்

க்ரீன் டீ அட்ரினலின் என்னும் ஹார்மோனின் சுரப்பை அதிகரித்து, இதய அழுத்தத்தை வேகமாக்கும். ஆகவே உயர் இரத்த அழுத்த பிரச்சனை உள்ளவர்களுக்கு க்ரீன் டீ நல்லதல்ல.

குழந்தைகள்

குழந்தைகள்

என்ன தான் க்ரீன் டீ ஆரோக்கியமான பானமாக இருந்தாலும், குழந்தைகளுக்கு இது நல்லதல்ல. இதில் உள்ள டானின்கள், புரோட்டீன் மற்றும் கொழுப்புக்களை உடல் உறிஞ்சுவதை தடுக்கும். மேலும் இதில் உள்ள காப்ஃபைன், அவர்களது உடலில் வறட்சியை ஏற்படுத்தும்.

இரத்த சோகை

இரத்த சோகை

இரத்த சோகை அல்லது இரும்புச்சத்து குறைபாடு உள்ளவர்கள் க்ரீன் டீ குடிப்பதைத் தவிர்க்க வேண்டும். 2001 ஆம் ஆண்டு வெளிவந்த அறிக்கையில், க்ரீன் டீயை அதிகம் குடிக்கும் போது, அது உணவில் உள்ள இரும்புச்சத்தை உறிஞ்சவிடாமல் தடுத்து, உடல் ஆரோக்கியத்தை மோசமாக்கும் என்பது தெரிய வந்தது.

தூக்கமின்மை

தூக்கமின்மை

க்ரீன் டீயை அதிகம் பருகினால், அது மூளையில் தூக்கத்தை தூண்டும் இரசாயனங்களைத் தடுத்து, தூக்கத்தைப் பெறவிடாமல் செய்யும். ஆகவே தூக்கமின்மை பிரச்சனை உள்ளவர்கள் க்ரீன் டீ குடிப்பதைத் தவிர்ப்பதே நல்லது.

ஒழுங்கற்ற இதய துடிப்பு

ஒழுங்கற்ற இதய துடிப்பு

க்ரீன் டீயில் உள்ள காப்ஃபைன், ஒழுங்கற்ற இதயத் துடிப்பை ஏற்படுத்தும். மேலும் இது ஓய்வின் போது, இதய தசைகளைச் சுருங்கத் தூண்டும். ஆகவே ஒழுங்கற்ற இதய துடிப்பு உள்ளவர்களும் இதைத் தவிர்க்க வேண்டும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

These People Should Never Have Green Tea

People with the following health condition should avoid taking green tea because of the negative effects it can have on their body. Read on to know more....
Story first published: Tuesday, May 23, 2017, 13:42 [IST]
Desktop Bottom Promotion