For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

எந்த காரணங்களுக்கு எல்லாம் வயிற்றின் இடது பக்கத்தில் வலிக்கும் என்று தெரியுமா?

இங்கு வயிற்றின் இடது பக்கத்தில் வலி ஏற்படுவதற்கான காரணங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன.

|

உங்களுக்கு அடிவயிற்றின் இடது பக்கத்தில் கடுமையான வலி ஏற்படுகிறதா? ஆம் என்றால், அதை சாதாரணமாக விட்டுவிடாமல், உடனே அதற்கான காரணத்தை மருத்துவரிடம் சென்று தெரிந்து கொள்ளுங்கள். ஏனெனில் இது குறிப்பிட்ட நோய்களுக்கான அறிகுறியாகும்.

Surprising Causes For Lower Left Abdominal Pain

ஆரம்பத்திலேயே அதைக் கவனித்து, சிகிச்சைப் பெற்று வந்தால், நிலைமை மோசமாவதைத் தடுக்கலாம். இங்கு தமிழ் போல்ட் ஸ்கை அடிவயிற்றின் இடது பக்கத்தில் எந்த பிரச்சனைகள் இருந்தால் வலியை சந்திக்க நேரிடும் என கொடுத்துள்ளது. அதைப் படித்து தெரிந்துக் கொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சிறுநீர் பாதை தொற்று

சிறுநீர் பாதை தொற்று

சிறுநீர் பாதையில் தொற்றுகள் இருந்தால், அடிவயிற்றின் இடது பக்கமாக வலியை சந்திக்க நேரிடும்.

சிறுநீர்ப்பை அழற்சி

சிறுநீர்ப்பை அழற்சி

அடிவயிற்றின் இடது பக்கத்தில் வலி ஏற்படுவதற்கு மற்றொரு காரணம் சிறுநீர்ப்பை அழற்சி ஆகும். இந்த நிலை ஒருவருக்கு இருந்தால், அடிவயிற்று வலியுடன், அடிக்கடி சிறுநீர் கழிக்கவும் நேரிடும்.

மலச்சிக்கல்

மலச்சிக்கல்

மலச்சிக்கலுடன், வயிற்றில் வாய்வு அதிகமாக தேங்கி அசௌகரியத்தை உணர்ந்தால், அடிவயிற்றின் இடது பக்கத்தில் வலி ஏற்படும்.

எரிச்சல் கொண்ட குடல் நோய்

எரிச்சல் கொண்ட குடல் நோய்

குடலில் அழற்சி இருந்து, அசாதாரண இடைவெளியில் மலச்சிக்கல் அல்லது வயிற்றுப் போக்கு ஏற்பட்டால், எரிச்சல் கொண்ட குடல் நோய் உள்ளது என்று அர்த்தம். இந்நோய் இருந்தால், அடிவயிற்றின் இடது பக்கத்தில் வலிக்கும்.

கிரோன் நோய்

கிரோன் நோய்

கிரோன் நோயின் முக்கிய அறிகுறியே அடிவயிற்றின் இடது பக்கத்தில் வலிப்பது தான். இது செரிமான பாதைகளில் ஏற்படும் ஒரு அழற்சி நோயாகும்.

சிறுநீரக கற்கள்

சிறுநீரக கற்கள்

சிறுநீரக கற்கள் இருந்தால், இடுப்பு மற்றும் அடிவயிற்றின் இடது பக்கத்தில் கடுமையான வலியை உணரக்கூடும்.

எக்டோபிக்/இடம் மாறிய கர்ப்பம்

எக்டோபிக்/இடம் மாறிய கர்ப்பம்

திருமணமாகி கருத்தரித்த பெண்களுக்கு அடிவயிற்றின் இடது பக்கத்தில் வலி ஏற்பட்டால், சிசு கருப்பையினுள் வளராமல், இடது பாலோப்பியன் குழாயினுள் வளர்கிறது என்று அர்த்தம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Surprising Causes For Lower Left Abdominal Pain

Have a look at some of the causes for pain in the lower left abdomen, here.
Story first published: Wednesday, February 15, 2017, 13:22 [IST]
Desktop Bottom Promotion