For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கர்ப்பத்தைத் தவிர வேறு எந்த காரணங்களால் மாதவிடாய் சுழற்சி தாமதமாகும் எனத் தெரியுமா?

இங்கு மாதவிடாய் சுழற்சி தாமதமாவதற்கான காரணங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

|

பெண்கள் மட்டுமே சந்திக்கும் ஓர் பிரச்சனை தான் மாதவிடாய் சுழற்சி. சில பெண்களுக்கு அந்த மாதவிடாய் சுழற்சி தாமதமாகும். ஒரு பெண்ணிற்கு மாதவிடாய் சுழற்சி தாமதமானால், அப்பெண்ணின் உடலில் ஏதோ பிரச்சனைகள் உள்ளதென்று அர்த்தம்.

Reasons (other than pregnancy) For Late Periods

இங்கு ஒரு பெண்ணிற்கு வேறு எந்த காரணங்களால் எல்லாம் மாதவிடாய் சுழற்சி தாமதமாகும் என கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து தெரிந்து, மாதவிடாய் சுழற்சி தாமதமாவதற்கான காரணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மன அழுத்தம்

மன அழுத்தம்

மாதவிடாய் சுழற்சிக்கான ஹார்மோன் மூளையில் உள்ள ஹைபோதலாமஸில் சுரக்கப்படும். ஆனால் மன அழுத்தத்தில் இருந்தால், அது மாதவிடாய் சுழற்சியைப் பாதிக்கும். ஆகவே தான் மன அழுத்தத்தில் இருக்கும் பெண்களுக்கு, மாதவிடாய் சுழற்சி தள்ளிப் போகிறது.

தைராய்டு கோளாறு

தைராய்டு கோளாறு

தைராய்டு சுரப்பியில் சுரக்கப்படும் ஹார்மோன்களில் ஏற்றத்தாழ்வுகள் ஏற்பட்டாலும், மாதவிடாய் சுழற்சி தள்ளிப் போகும். ஆகவே தைராய்டு பிரச்சனைக்கான அறிகுறிகள் தென்பட்டால், உடனே மருத்துவரை அணுகுங்கள்.

நாள்பட்ட நோய்கள்

நாள்பட்ட நோய்கள்

நாள்பட்ட நோய்கள் உடலில் இருந்தாலும், மாதவிடாய் சுழற்சி தள்ளிப் போகும். எனவே உடலில் ஏதேனும் பிரச்சனைகள் இருந்தால், அதை உடனே கண்டறிந்து சரிசெய்து கொள்ளுங்கள்.

பிறப்பு கட்டுப்பாட்டு மாத்திரைகள்

பிறப்பு கட்டுப்பாட்டு மாத்திரைகள்

மாதவிடாய் சுழற்சி தள்ளிப் போனாலோ அல்லது தவறினாலா, அதற்கு நீங்கள் எடுத்த பிறப்பு கட்டுப்பாட்டு மாத்திரைகள் கூட காரணமாக இருக்கலாம். எனவே இம்மாதிரியான மாத்திரைகள் எடுப்பதைத் தவிர்த்திடுங்கள்.

இறுதி மாதவிடாய்

இறுதி மாதவிடாய்

40 வயதிற்கு மேல் ஒவ்வொரு பெண்ணிற்கும் இறுதி மாதவிடாய் நெருங்கிக் கொண்டிருப்பதால், அக்காலத்தில் மாதவிடாய் சுழற்சி தள்ளிப் போகும்.

பிசிஓஎஸ்

பிசிஓஎஸ்

பிசிஓஎஸ் என்னும் நிலையால் பெண்களுக்கு மாதவிடாய் சுழற்சி அதிகம் தள்ளிப் போகும். மேலும் இப்பிரச்சனை இருக்கும் பெண்களுக்கு முகம், மார்பகம் போன்ற இடங்களில் முடி வளர்வதோடு, கருத்தரிப்பதில் பிரச்சனையும், எடையைக் குறைப்பதில் சிக்கலையும் உணரக்கூடும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Reasons (other than pregnancy) For Late Periods

There are a few other factors that you can blame for your missing or delayed periods.
Story first published: Wednesday, January 4, 2017, 17:35 [IST]
Desktop Bottom Promotion