நீங்கள் அடிக்கடி பல்குத்தும் குச்சியை உபயோகப்படுத்துபவர்களா? உங்களுக்காத்தான் இந்த கட்டுரை!!

பற்களை பாதுகாக்க வேண்டுமென்றால் நீங்கள் அடிக்கடி பல் குச்சியை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். ஏன் என்று இங்கே விளக்கங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

Written By:
Subscribe to Boldsky

இந்த பழக்கம் ஹோட்டலில்தான் உங்களுக்கு தொற்றியிருக்கும். சாப்பிட்டு முடித்ததும் பல்குச்சியினால் பற்களை குத்துவது. அதன் பின் அதுவே பழக்கமாகி உணவு சாப்பிட்டதும் உடனே பல்குச்சியால் பற்களை குத்திக் கொள்பவர்கள் நிறைய உண்டு.

இதற்காகவே அவற்றை வாங்கியும் வைத்திருப்பவர்கள் இருக்கிறார்கள். எப்பவாவது என்றால் பரவாயில்லை. ஆனால் வாரம் ஒருமுறை அல்லது தினமும் பல்குச்சியால் பற்களை குத்துவது நல்லதில்லை என வல்லு நர்கள் கூறுகிறார்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பற்களின் அமைப்பில் பாதிப்பு :

பற்களின் அமைப்பில் பாதிப்பு :

பல்குச்சியால் உணவுதுகள்களை கொப்பளித்து வெளியேற்றுவதுதான் நல்லது. பல்குச்சியால் குத்தும்போது சிராய்ப்பு ஈறுகளிலும் பற்களின் இடுக்குகளில் உண்டாகும். இதனால் முதலில் பாதிக்ப்படுவது பற்களின் வேர்.

ஈறு சம்பந்தபட்ட நோய்கள் :

ஈறு சம்பந்தபட்ட நோய்கள் :

ஈறுகளில் ரத்தக் கசிவு, ஈறு பாதிப்பு ஆகியவைகள் உண்டாகும். அதனை அப்படியே விடும்போது மோசமான ஈறு நோய்களை தந்து விடும்.

 பற்களுக்கிடையே இடைவெளி :

பற்களுக்கிடையே இடைவெளி :

ஒரே இடத்தில் பல்குச்சியை கொண்டு அடிக்கடி குத்தும்போது பற்களுக்கிடையே இடைவெளி உண்டாகிவிடும். இவை பல் தோற்றத்தை விகாரமாக்கி விடும்.

எனாமல் பாதிப்பு :

எனாமல் பாதிப்பு :

பற்களில் பல்குச்சியை பயன்படுத்தும்போது அவற்றை கடிக்கத் தோன்றும். அவ்வாறு செய்யும் போது அவை பற்களின் எனாமலை போக்கச் செய்யும்

பற்களின் வேர் :

பற்களின் வேர் :

ஈறுகளின் பல்குச்சியானல் பாதிப்பு உண்டாகும் போது அது அதன் இடத்திலிருந்து விலகி உட்சென்று, பற்களின் வேரை பாதிக்கச் செய்யும்.

பற்களின் படலம் :

பற்களின் படலம் :

எனாமலைச் சுற்றிலும் ஒரு மெல்லிய படலம் அமைந்திருக்கும். அது நம் பற்களை பாதுகாக்கும். பல்குச்சி அந்த படலத்தை பாதிக்கும். இதனால் எளிதில் பல் சிதைவு உண்டாகும் வாய்ப்புகள் அதிகம்.

இதெல்லாம் எப்பவாவது பல்குச்சியை உபயோகப்படுத்தினால் உண்டாவது. ஆனால் அடிக்கடி உபயோகியப்படுத்தினால் இதன் விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Reasons here why you should not use a toothpick frequently

Reasons here why you should not use a toothpick frequently
Story first published: Friday, March 3, 2017, 9:00 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter