For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மக்னீசியம் நல்ல தூக்கத்திற்கு உதவுகிறதா?

மக்னீசியம் எவ்வாறு தூக்கமின்மை பிரச்சனையை குணப்படுத்த உதவுகிறது என கொடுக்கப்பட்டுள்ளது.

By Lakshmi
|

நம்மில் பலர் தூக்கமின்மையால் அவதிப்படுவதை பார்க்கிறோம். இதனால் பல உடல்நலக் கோளாறுகள் உண்டாகின்றன.

இதற்கு நீங்கள் உங்கள் தூக்க முறையை மாற்ற வேண்டும் மேலும் காஃபின் உட்கொள்வதை தவிர்க வேண்டும்.

உங்களை தூங்க வைக்க மெக்னீசியம் உதவி செய்யும். மக்னீசியம் மற்றும் தூக்கத்திற்கு உள்ள தொடர்பு என்ன என்பதை தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மக்னீசியம் என்றால் என்ன?

மக்னீசியம் என்றால் என்ன?

மெக்னீசியம் என்பது ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கான அவசியமான ஒரு முக்கியமான கனிமமாகும். இது வீக்கத்தை உருவாக்கும் காரணிகளை எதிர்த்து போராடுகிறது. இரத்த அழுத்ததை குறைக்கிறது. மேலும் இது தூக்கத்தை தர வல்லது.

உங்கள் உடல் மற்றும் மூளை ரிலாக்ஸ் ஆக உதவுகிறது!

உங்கள் உடல் மற்றும் மூளை ரிலாக்ஸ் ஆக உதவுகிறது!

நல்ல தூக்கத்தின் போது தான் உடல் மற்றும் மூளை ஓய்வெடுக்கிறது.

இது மனித உடல்நலத்திற்கு மிக அவசியம் மற்றும் உங்கள் உடலில் 600 க்கும் மேற்பட்ட செல்லுலார் எதிர்வினைகளில் பயன்படுத்தப்படுகிறது.

மக்னீசியம் உடல் மற்றும் மனதை அமைதிப்படுத்துவதற்கான பொறுப்புடைய நரம்பியக்கடத்திகளை செயல்படுத்துகிறது.

மக்னீசிய பற்றாக்குறையால் ஏற்படும் விளைவுகள்!

மக்னீசிய பற்றாக்குறையால் ஏற்படும் விளைவுகள்!

இந்த கனிமத்தின் குறைந்த அளவானது சாதாரண தூக்கத்திற்காகவும், உயர்ந்த மற்றும் குறைந்த அளவிலான நிலை தூக்க சிக்கல்களை ஏற்படுத்தும் என ஆய்வுகள் கூறுகின்றன.

இந்த வகையான மக்களுக்கு மக்னீசிய குறைபாடு இருக்கலாம்!

இந்த வகையான மக்களுக்கு மக்னீசிய குறைபாடு இருக்கலாம்!

செரிமான நோய்கள் கொண்ட நபர்கள்: மக்னீசிய குறைபாடு உங்கள் உடலிலுள்ள வைட்டமின்கள் மற்றும் தாதுக்களை சரியாக உட்கொள்வதை தடுக்கிறது. இதன் விளைவாக செரிமானப் பிரச்சினை ஏற்படும்.

நீரிழிவு நோயாளிகள்: இன்சுலின் தடுப்பு மற்றும் நீரிழிவு நோய் அதிகமான மெக்னீசியம் இழப்புடன் தொடர்புடையது.

மது பழக்கம் கொண்டவர்கள்: இந்த தாதுப் பற்றாக்குறை பெரிதும் மது அருந்துபவர்களிடையே காணப்படுகிறது.

வயதான பெரியவர்கள்: வயதானவர்களில் பலர் இளம் வயதினரை விட தங்கள் உணவில் குறைந்த மெக்னீசியம் அதிகம் உள்ளனர். இது உணவு ஊறிஞ்சப்படுவதை தடுக்கிறது.

உடலில் போதுமான அளவு மெக்னீசியம் இல்லை என்றால், நீங்கள் தூக்கம் பிரச்சினைகளை அனுபவிக்க கூடும்.

இது தூக்கத்தை மேம்படுத்த உதவுகிறது!

இது தூக்கத்தை மேம்படுத்த உதவுகிறது!

மெக்னீசியம் நீங்கள் தூங்குவதற்கு மட்டுமல்ல, ஆழ்ந்த மற்றும் ஆரோக்கியமான தூக்கத்தையும் அடைய உதவுகிறது.

மெக்னீசியம் நரம்பு மண்டலத்தின் மீது செயல்பட்டு, ஆழமான, அமைதியான தூக்கத்திற்கு பங்களிக்கிறது. பல ஆய்வுகளில் இது உறுதியாகியுள்ளது.

இது கவலை மற்றும் மனச்சோர்வைத் தவிர்ப்பதற்கு உதவுகிறது!

இது கவலை மற்றும் மனச்சோர்வைத் தவிர்ப்பதற்கு உதவுகிறது!

கவலை மற்றும் மன அழுத்தம் ஆகிய இரண்டும் தூக்கத்தில் எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்தும். மேலும் மெக்னீசியம் மனநிலை குறைபாடுகளை தணிக்க உதவுகிறது.

மக்னீசியம் குறைபாடு ஏற்பட்டால் கவலை, மன அழுத்தம் மற்றும் மன குழப்பநிலை ஆகியவை இருக்கும். எனவே மக்னீசிய குறைபாட்டை சரி செய்ய வேண்டும்.

தூக்கதிற்காக மக்னீசியத்தை எவ்வாறு பயன்படுத்தலாம்?

தூக்கதிற்காக மக்னீசியத்தை எவ்வாறு பயன்படுத்தலாம்?

தூக்கத்தை மேம்படுத்த எவ்வளவு மெக்னீசியம் எடுத்துக்கொள்வது பற்றி குறிப்பிட்ட பரிந்துரைகள் எதுவும் இல்லை. இருப்பினும், உணவு மூலம் போதுமான அளவைப் பெற்றுக்கொள்ள முடியும்.

சப்ளிமெண்ட்ஸ் எடுத்துக் கொள்ளும் போது கருத்தில் கொள்ள வேண்டியவை:

சப்ளிமெண்ட்ஸ் எடுத்துக் கொள்ளும் போது கருத்தில் கொள்ள வேண்டியவை:

ஒரு நாளைக்கு 350 mg எடுத்துக்கொள்வது பாதுகாப்பனதாகும். நீங்கள் வேறு சில மருந்துகளை எடுத்துக்கொள்ளும் போது மெக்னீசியம் அதனுடன் இணைந்து எதிர் வினைகளை ஏற்படுத்தலாம். எனவே மருத்துவரின் ஆலோசனை அவசியம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Is Magnesium Helps You for Good Sleep?

Is Magnesium Helps You for Good Sleep?
Desktop Bottom Promotion