For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

க்ரீன் டீயுடன் பால் சேர்த்து குடிக்கலாமா?

இங்கு க்ரீன் டீயுடன் பால் சேர்த்து குடிக்கலாமா என்பது குறித்து கொடுக்கப்பட்டுள்ளது.

|

தண்ணீருக்கு அடுத்தப்படியாக பெரும்பாலானோர் பருகும் ஓர் பானம் தான் டீ. டீயில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் வைட்டமின்கள் ஏராளமான அளவில் உள்ளது. இதனால் டீ உடலுக்கு பல ஆரோக்கிய நன்மைகளை வாரி வழங்குகிறது.

ஆனால் தற்போது மக்கள் மத்தியில் பிரபலமாக இருக்கும் க்ரீன் டீயுடன் பால் சேர்த்து குடிக்கலாமா என்ற கேள்வி பலருக்கும் எழும். ஆய்வுகளில் க்ரீன் டீயுடன் எருமை மற்றும் மாட்டு பால் சேர்த்து குடிக்கும் போது, அதிலிருந்து பெறப்படும் சத்துக்களின் அளவு குறைவதாக கூறப்படுகிறது.

இருப்பினும் க்ரீன் டீயுடன் பாதாம் பால், சோயா பால் அல்லது தேங்காய் பால் சேர்த்து குடிக்கலாம் என்பது தெரியுமா? இங்கு அதுக்குறித்த சில உண்மைகள் மற்றும் நன்மைகள் கொடுக்கப்பட்டுள்ளன.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
உண்மை #1

உண்மை #1

க்ரீன் டீயுடன் பாதாம் பால் சேர்த்து குடித்தால், பக்கவாதம், இதய பிரச்சனைகள், உடல் பருமன் போன்றவற்றின் அபாயம் குறைவதோடு, இரத்த சர்க்கரை அளவும் கட்டுப்படும். பாதாம் பாலில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் மோனோ-அன்சாச்சுரேட்டட் ஃபேட்டி அமிலங்கள் போன்றவை உள்ளதால், இது தமனிகளில் அடைப்புக்கள் ஏற்படுவதைத் தடுக்கும்.

உண்மை #2

உண்மை #2

பாதாம் பால் மூளைக்கு மிகவும் நல்லது. பாதாம் பாலில் உள்ள L கார்டினைன் மற்றும் ரிபோஃப்ளேவின் போன்றவை நரம்பியல் நடவடிக்கைக்கு நல்லது.

உண்மை #3

உண்மை #3

பாதாம் பாலை க்ரீன் டீயுடன் சேர்ப்பதால் கிடைக்கும் மற்றொரு நன்மை, அதில் உள்ள காமா-டோகோஃபெரால் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் போன்று செயல்பட்டு, குறிப்பிட்ட வகையான புற்றுநோய்களைத் தடுக்கும்.

உண்மை #4

உண்மை #4

பாதாம் பாலில் உள்ள பாஸ்பரஸ் மற்றும் மக்னீசியம் எலும்புகளுக்கு மிகவும் நல்லது.

உண்மை #5

உண்மை #5

சோயா பாலைக் கூட க்ரீன் டீயுடன் சேர்க்கலாம். அப்படி சேர்ப்பதால், அதில் உள்ள மோனோ-அன்சாச்சுரேட்டட் மற்றும் பாலி-அன்சாச்சுரேட்டட் கொழுப்பு அமிலங்கள், இரத்த கொலஸ்ட்ரால் அளவைக் கட்டுப்படுத்தும்.

உண்மை #6

உண்மை #6

சோயா பாலில் உள்ள பைட்டோ-ஈஸ்ட்ரோஜென் கால்சியம் உறிஞ்சும் தன்மையை அதிகரிக்கும் மற்றும் புரோஸ்டேட் புற்றுநோயின் அபாயத்தைத் தடுக்கும்.

உண்மை #7

உண்மை #7

க்ரீன் டீயில் தேங்காய் பாலை சேர்ப்பதால், அதில் உள்ள லாரிக் அமிலம், இரத்த அழுத்தத்தைக் குறைக்கும் மற்றும் இரத்த நாளங்களில் உள்ள ப்ளேக்குகளின் உருவாக்கத்தைக் குறைக்கும்.

உண்மை #8

உண்மை #8

தேங்காய் பால் உடலின் ஆற்றலை அதிகரிக்கும். மேலும் இதில் எலக்ட்ரோலைட்டுகுள் மற்றும் நல்ல கொழுப்புக்கள் உள்ளதால், இது செரிமானத்திற்கும் நல்லது.

குறிப்பு

குறிப்பு

க்ரீன் டீயுடன் பால் சேர்த்து சுவைக்க விரும்பினால், பாதாம் பால், தேங்காய் பால் அல்லது சோயா பாலை சேர்த்துக் குடியுங்கள். இருப்பினும் க்ரீன் டீ அல்லது ப்ளாக் டீ என்று வரும் போது, அத்துடன் பால் சேர்க்காமல் குடிப்பதே இன்னும் சிறந்தது என்பதை மறவாதீர்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Is It Okay To Add Milk To Green Tea?

Some studies say that adding milk to tea may diminish its health benefits a bit. Does it mean you need to consume green tea without milk? Read on to find out!
Story first published: Saturday, May 20, 2017, 14:02 [IST]
Desktop Bottom Promotion