தினமும் கட்டாயம் 8 டம்ளர் நீரைக் குடிக்க வேண்டுமா என்ன?

உடலில் நீர்ச்சத்தை நடுநிலையாக வைத்திருக்க, தினமும் குறிப்பிட்ட அளவு நீரைக் குடிக்க வேண்டியது அவசியம். ஆனால் 8 டம்ளர் நீரைக் கட்டாயம் குடிக்க வேண்டுமா என்பதற்கான விடை இக்கட்டுரையில் உள்ளது.

Posted By:
Subscribe to Boldsky

இதுவரை நாம் ஆரோக்கியம் குறித்த கட்டுரைகள் பலவற்றைப் படித்திருப்போம். அதில் ஆரோக்கியமாக இருப்பதற்கு தினமும் குறைந்தது 8 டம்ளர் நீரைக் குடிக்க வேண்டியது அவசியம் என்று குறிப்பிட்டிருப்பதையும் படித்திருப்போம். இதைப் படிக்கும் போது, நம்மில் பலருக்கும் கட்டாயம் 8 டம்ளர் நீரைக் குடித்தாக வேண்டுமா என்ற கேள்வி எழுந்திருக்கும்.

Is Drinking 8 Glasses Of Water A Day Actually Necessary?

அத்தகையவர்களது கேள்விக்கான பதில் இக்கட்டுரையில் கிடைக்கும். பொதுவாக மனித உடலானது 65% நீரால் ஆனது. எனவே உடலில் நீர்ச்சத்தை நடுநிலையாக வைத்திருக்க, தினமும் குறிப்பிட்ட அளவு நீரைக் குடிக்க வேண்டியது அவசியம். ஆனால் பலரது கேள்வி, 8 டம்ளர் நீரைக் குடிக்க வேண்டுமென்ற விதிமுறையைப் பின்பற்ற வேண்டுமா என்பது தான். இதுக்குறித்து தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
2002 ஆய்வு

2002 ஆய்வு

2002 ஆம் ஆண்டு 8 டம்ளர் நீரை தினமும் பருகி வந்தவர்களின் உடலில் ஏதேனும் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதா என்பது குறித்த ஆய்வு ஒன்று மேற்கொள்ளப்பட்டது.

இரு குழுக்கள்

இரு குழுக்கள்

இந்த ஆய்வில் பங்கு கொண்டவர்கள் இரு குழுக்களாகப் பிரிக்கப்பட்டனர். அதில் ஒரு குழுவினர் தினமும் 8 டம்ளர் நீரையும், மற்றொரு குழுவினர் தாகம் எடுக்கும் போது மட்டும் தேவையான அளவு நீரைக் குடிக்குமாறும் ஆய்வாளர்கள் செய்தனர்.

சில மாதங்கள் கழித்து....

சில மாதங்கள் கழித்து....

சில மாதங்களுக்குப் பின், இரண்டு குழுவினரின் உடலில் ஏதேனும் மாற்றம் தெரிகிறதா என்று ஆய்வாளர்கள் ஆராய்ந்தனர்.

முடிவு

முடிவு

இந்த ஆய்வில் 8 டம்ளர் நீரைக் குடித்து வந்தோரது ஆரோக்கியத்திலும், தாகம் எடுக்கும் போது மட்டும் நீரைக் குடித்து வந்தோரது ஆரோக்கியத்திலும், அவ்வளவு பெரிய மாற்றம் ஏற்பட்டிருப்பது தெரியவில்லை. சொல்லப்போனால் ஒரே மாதிரி தான் இருந்தது.

குறிப்பு

குறிப்பு

எனவே தினமும் 8 டம்ளர் நீரைக் கட்டாயம் குடிக்க வேண்டும் என்ற முட்டாள்தனமான விதிமுறையை கைவிட்டு, தாகம் எடுக்கும் போது தேவையான அளவு நீரைக் குடித்து ஆரோக்கியமாக வாழுங்கள்.

போதிய நீர் குடிக்காவிட்டால் சந்திக்கும் விளைவுகள்

போதிய நீர் குடிக்காவிட்டால் சந்திக்கும் விளைவுகள்

ஒருவர் தினமும் போதிய அளவில் நீரைக் குடிக்காமல் இருந்தால், அதனால் உடல் வறட்சியடைந்து, மிகுந்த சோர்வு, தலைவலி, தலைச்சுற்றல், உடல் வலி, உறுப்பு செயலிழப்பு மற்றும் மரணத்தைக் கூட உண்டாக்கும். எனவே கவனமாக இருங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Is Drinking 8 Glasses Of Water A Day Actually Necessary?

Let us look at some of the facts which can tell us if drinking 8 glasses of water a day is really necessary for staying healthy.
Please Wait while comments are loading...
Subscribe Newsletter