கட்டுப்பாடின்றி சிறு நீர் அடிக்கடி கழித்துவிடுகிறீர்களா? காரணங்கள் இவைதான்!!

சிறு நீரகம் அடிக்கடி கட்டுப்பாடில்லாமல் அடிக்கடி கழித்து விடுகிறீர்களா? அதற்கு இங்கே சொல்லப்பட்டிருக்கும் காரணங்களில் ஏதாவது ஒன்று உங்களுக்கு இருக்கலாம். கட்டுரையை முழுவதும் படியுங்கள்.

Subscribe to Boldsky

ஆண்களை விட பெண்களுக்கு இந்த பாதிப்பு அதிகம். சிறு நீர் அடக்க முடியாமல் அப்படியே கழித்து விடும் தரம்சங்கடங்கள் பலருக்கும் நிகழ்ந்திருக்கும் இதற்கு யூரினரி இன்காட்டினன்ஸ் என்று பெயர்.


இரு வகையான சிறு நீர் வெளியேற்றம் :

இருவகையில் உங்கள் சிறு நீரை கட்டுப்படுத்த முடியாமல் போகலாம். ஒன்று உங்கள் சிறு நீர்ப்பையில் உள்ள மொத்த சிறு நீரையும் கழிக்கும் வகையில் டாய்லெட்டில் இருப்பது.

இன்னொன்று உங்கள் சிறு நீர்ப்பை சிறிது நிறைந்தாலே ஏதாவது அழுத்தத்தால் உடனடியாக வெளியேறுவது . இதில் முதல் வகை சாதரணமானது. இரண்டாவது வகை பாதிப்பு ஏதாவது இருந்தால்தான் அவ்வாறு உண்டாகும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

பலவீனமான இடுப்பு எலும்புகள் :

உங்களது சிறு நீர் குழாய் மிக இறுக்கமான பிடிமானத்தோடு இடுப்பெலும்பு பகுதியில் அமைந்திருக்கும். இடுப்பெலும்பு பலவீனம்டையும் போது சிறு நீர் குழாய் தளர்வ்டைந்து உடனடியாக சிறுநீரை வெளியேற்றும் அபாயம் உண்டாகிறது.

சிறு நீர்ப்பையின் குறைவான கொள்ளளவு :

சிறு நீர்ப்பை அளவில் சிறிதாக இருக்கும்போது குறைந்த அளவே சிறு நீர் தேக்க முடியும். இதனால் குழந்தைகள் போக அடிக்கடி சிறு நீர் நம்மை மீறி கழிந்திவிடும்.

உடல் பருமன் :

உடல் பருமனுக்கும் சிறு நீர் அடக்க முடியாமல் ரிஉப்பதற்கும் தொடர்புகள் உண்டு. 20- 70% உடல் பருமனான மக்கள் சிறு நீரை கட்டுப்படுத்த முடியாமல் அவதிப்படுகிறார்கள் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

டயட் :

அடிக்கடி கார்பனேட்டட் குளிர்பானங்கள், காஃபி ஆகிய்வற்றை குடிக்கும்போது அவை சிறு நீர்ப்பையில் எரிச்சலூட்டும் இதனாலும் அடிக்கடி சிறுநீர் கட்டுப்படுத்த முடியாமல் போகும் வாய்ப்புகள் உண்டு.

பிரசவத்திற்கு பின் :

நிறைய பெண்களுக்கு பிரசவத்திற்கு பின் கர்ப்பப்பை கீழிறங்கிய நிலையில் இருக்கும். இதனால் சிறு நீர்ப்பைக்கு அதிக அழுத்தம் உண்டாகி சிறு நீர் கட்டுப்படுத்த முடியாமல் வெளியேறும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

சிறந்த ஹெல்த் இன்சூரன்ஸ் எதுவென, ஒப்பிட்டு பார்த்து தேர்வு செய்யுங்கள்!

English summary

5 reasons why you keep peeing your pants

5 reasons why you keep peeing your pants
Please Wait while comments are loading...
Subscribe Newsletter