கண்களில் உண்டாகும் வீக்கத்திற்கு காரணம் என்ன என்று தெரியுமா?

கண்ணின் அனைத்து பாகங்களும் ஒன்றாக இணைந்து ஒரு குழுவைப் போன்று இயங்கி,நமக்குப் பார்வை அளிக்கிறது. கண்களில் ஏன் வீக்கம் உண்டாகிறது என பார்க்கலாம்

By: Peveena Murugesan
Subscribe to Boldsky

கண்கள் என்பது ஒளியை உணர்வதற்கு உதவும் ஒரு உறுப்பு ஆகும்.கண்கள் சுற்றுப்புறத்தில் உள்ள ஒளி (அ) இருளை,காட்சிகளை கண்டு உணரக் கூடியது.இரு கண்களும் ஒரே நேர்கோட்டில் அமைந்து ஒரே முப்பரிமாணத்தை காண உதவுகின்றன.

கண்ணின் அனைத்து பாகங்களும் ஒன்றாக இணைந்து ஒரு குழுவைப் போன்று இயங்கி,நமக்குப் பார்வை அளிக்கிறது.கண்களின் பார்வைக் கூர்மையை செல்களே தீர்மானிக்கின்றன.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கண்களில் வீக்கம்:

கண்களில் வீக்கம்:

கண்களில் வீக்கம் என்பது கண்களின் கருவிழிகளை சுற்றி உள்ள வெண்மை நிறப் பகுதி வழக்கத்திற்கு மாறாக பெரியதாக காணப்படும்.

இதை மருத்துவ ரீதியில் ப்ரொப்டோசிஸ் அ எக்ஸோப்தால்மஸ் (இயல்புக்கு மீறி கண்விழி பிதுங்கி இருத்தல்).

கண் பார்வை பாதிக்கும் :

கண் பார்வை பாதிக்கும் :

கண்களில் உள்ள தசை மற்றும் திசுக்களில் ஏற்படும் வீக்கத்தால் கண்கள் அதன் துளைகளில் இருந்து வெளியே நீட்டிக் கொண்டிருக்கும்.

இது மிகவும் அபாயமானது.ஏனெனில் இது விழி வெண் படலத்தை வெளிப்படுத்துகிறது மற்றும் கண்களை ஈரமாக வைக்காமல் வறட்சியுற செய்கிறது.

அதுமட்டுமின்றி பாதிப்பு அதிகமாக இருப்பின் அது பார்வை நரம்பை அதிக அழுத்தத்திற்கு உள்ளாக்கி பார்வை இழப்பை ஏற்படுத்தும்.இது ஒரே ஒரு கண்ணில் இருப்பின் மிகவும் அபாயகரமானது.

தைராய்டு சுரப்பி :

தைராய்டு சுரப்பி :

கண்களின் வீக்கத்திற்கு தூண்டுதல்களை ஏற்படுத்துகிறது மற்றும் கிரேவ்ஸ் என்அப்படும் கண்களின் வீக்கத்திற்கு முக்கிய காரணம். கிரேவ்ஸ் தைராய்டு சுரப்பியை அதிகமாக தூண்டி விடுகிறது.ஹைபர் தைராய்டையும் ஏற்படுத்தும்.

கிரேவ்ஸ் நோய்க்கான அறிகுறிகள்:

கிரேவ்ஸ் நோய்க்கான அறிகுறிகள்:

1.எடை இழப்பு.
2.பசி அதிகரிப்பு.
3.கவலை,அமைதியின்மை,நடுக்கம்,எரிச்சல்,தூக்கமின்மை.
4.அதிக வியர்வை.
5.மார்பு வலி,படபடப்பு.
6.மூச்சு திணறல்,சுவாசிப்பதில் கடினம்.
7.ஒழுங்கற்ற மாதவிடாய் .
8.தைராய்டு.
9.கண்களில் வீக்கம்.
10.பார்வை கோளாறுகள்.கண்களின் வீக்கத்திற்கு இன்ன பிற காரணங்கள்:

1.கண்களுக்கு பின்னால் ரத்தப்போக்கு உண்டாக்கும் காயம்.
2.வாஸ்குலர்.
3.நரம்பு புற்றுநோய்.
4.தொற்று.

சிகிச்சை முறைகள் :

சிகிச்சை முறைகள் :

சொட்டு மருந்து, சன் கிளாஸ் அணிவது, கதிர்வீச்சு மூலம் கட்டிகளுக்கு சிகிச்சை செய்தல், சேதமடைந்த ரத்த நாளங்களுக்கு சிகிச்சை அளித்தல்.

 கிரேவ்ஸ் மூலம் கண்களில் வீக்கம் ஏற்பட்டால் அளிக்கும் சிகிச்சை முறை :

கிரேவ்ஸ் மூலம் கண்களில் வீக்கம் ஏற்பட்டால் அளிக்கும் சிகிச்சை முறை :

தைராய்டு எதிர்ப்பு மருந்து, தைராய்டு சுரப்பி நீக்கம், ஹார்மோன்கள் மாற்று சிகிச்சை, தைராய்டு சுரப்பி செயல்பாட்டை குறைக்க கதிர்வீச்சு மூலம் சிகிச்சை இவ்வாறு இந்த நோய்க்கு சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

10 things that may cause for bulging eyes

10 things that may cause for bulging eyes
Please Wait while comments are loading...
Subscribe Newsletter