உங்கள் உயரம் உங்கள் ஆரோக்கியத்தைப் பற்றி என்ன சொல்கிறது என்று தெரியுமா?

உயரத்தைக் கொண்டு ஒருவரது உடல் ஆரோக்கியத்தைப் பற்றி சொல்ல முடியும் என்பது தெரியுமா? அதிலும் எம்மாதிரியான நோய்கள் வரும் வாய்ப்புக்கள் அதிகம் உள்ளது என்பதை அறியலாம்.

Subscribe to Boldsky

ஒவ்வொருவருக்கும் உயரமாக இருக்க வேண்டுமென்ற ஆசை இருக்கும். ஆனால் மரபணுக்கள், வாழ்க்கைமுறை காரணிகள் போன்றவை தான் நம் உயரத்தை நிர்ணயிக்கிறது. மேலும் ஒருவரது உயரம் அவர்களது ஆரோக்கியத்தைப் பற்றியும் கூறும் என்பது தெரியுமா?

ஆம், சில ஆய்வுகளில் ஒருவரது உயரத்தைக் கொண்டு, அவர்களுக்கு வரக்கூடிய உடல்நல பிரச்சனைகளைக் கூற முடிவதாக சொல்கிறது. ஆம், சில உடல் நல கோளாறுகள் குட்டையானவர்களுக்கும், இன்னும் சில பிரச்சனைகள் உயரமானவர்களுக்கும் அதிகம் ஏற்படும்.

சரி, இப்போது ஒருவரது உயரம் ஆரோக்கியத்தைப் பற்றி என்ன சொல்கிறது என்று காண்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

இதய பிரச்சனைகள்

சமீபத்திய ஆய்வில் குட்டையானவர்களை விட உயரமானவர்களுக்கு 25% தான் இதய பிரச்சனைகள் வரும் வாய்ப்புள்ளதாக தெரிய வந்துள்ளது. அதாவது, உயரமானவர்களது இதய ஆரோக்கியம், குட்டையானவர்களை விட சற்று சிறந்ததாக இருக்குமாம்.

புற்றுநோய்

புற்றுநோய் என்று வரும் போது, குட்டையானவர்களுக்கு இந்நோயின் அபாயம் மிகவும் குறைவு. ஆனால் உயரமானவர்களுக்கு குடல் புற்றுநோய், மார்பக புற்றுநோய், சிறுநீரக புற்றுநோய் போன்றவை வரும் அபாயம் அதிகம் உள்ளதாம்.

இரத்தம் உறைதல்

குட்டையாக இருப்பதன் மற்றொரு நன்மை, இத்தகையவர்களுக்கு இரத்தம் உறையும் வாய்ப்பு மிகவும் குறைவு. இதனால் பக்கவாதம் வரும் அபாயம் இல்லை. ஆனால் உயரமானவர்களுக்கு இரத்த உறைவு காரணமாக பக்கவாதம் வரும் வாய்ப்பு அதிகம் உள்ளது.

கர்ப்பம்

உயரமான பெண்கள் கர்ப்ப காலத்தில் அதிக அசௌகரியத்தை உணரமாட்டார்கள். மேலும், உயரமான பெண்களுக்கு கர்ப்ப கால சர்க்கரை நோய் வரும் அபாயமும் குறைவு. ஆய்வின் படி, குட்டையான பெண்கள் கர்ப்ப காலத்தில் அதிக மன அழுத்தத்திற்கு உள்ளாவார்களாம்.

 

 

டிமென்ஷியா

டிமென்ஷியா என்பது ஒருவித ஞாபக மறதி நோய். இந்நோய் உயரமானவர்களை விட, குட்டையானவர்களை தாக்கும் வாய்ப்பு அதிகம் உள்ளதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

சிறந்த ஹெல்த் இன்சூரன்ஸ் எதுவென, ஒப்பிட்டு பார்த்து தேர்வு செய்யுங்கள்!

English summary

What Your Height Says About Your Health

Do you know what your height says about your health? Well, read on to know about the health problems associated with height…
Please Wait while comments are loading...
Subscribe Newsletter