வெள்ளைப்படுதல் பழுப்பு நிறமாக இருந்தால் காரணம் என்னவாக இருக்கும்?

பெண்களுக்கு வெள்ளைப்படுதல் சாதரண நிகழ்வுதான். ஆனல் அடிக்கடி நடந்தாலோ அல்லது, வெள்ளைப்படுதலின் நிறம் வேறுபட்டிருந்தாலோ கீழ்கண்ட காரணங்கள் இருக்கலாம். அதனை என்னெவென்று தெரிந்துகொள்ளுங்கள்.

Subscribe to Boldsky

வெள்ளைப்படுதல் மாதவிலக்கிற்கு சில நாட்களுக்கு முன் வரும். இதனால் பிரச்சனையில்லை. நமது கர்ப்பப்பையில் இருக்கும் இறந்த செல்கள் மற்றும் பேக்டீரியாக்களை கர்ப்பப்பையே வெஜைனா மூலம் வெளியேற்றும். இது சாதரணமானதுதான்.

What does brown discharge indicate

ஆனால் வெள்ளைப்படுதல் அதிகமாக இருந்தால், கிருமித் தொற்று அதிகமாக இருக்கு என்று அர்த்தம் உடனேயே சரிப்படுத்திவிடலாம். இதுவும் பெரிய பாதிப்பை தராது.

ஆனால் வெள்ளைபடுதல் அடர் பழுப்பு நிறமாக இருந்தால் அதனை சாதரணாமாக எடுத்துக் கொள்ள வேண்டாம். உடனடியாக மருத்துவரை நாடவும். இதர்கு பல்வேறு காரணங்கள் இருக்கலாம். அவை என்னவென்று பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

மாதவிலக்கிற்கு பின்பு :

மாதவிலக்கு முடியும் நேரத்தில் வந்தால், அது இறந்த ரத்த செல்கள் கலந்து பழுப்பு நிறமாக வெள்ளைப்படுதல் வெளிப்படும்.

மாதவிலக்கு முன்பு :

மாதவிலக்கு ஆரம்பிப்பதற்கு முன் உண்டானால், உங்கள் உடலில் பொரோஜஸ்டிரான் அளவு குறைவாக இருக்கிறது என அர்த்தம்.

இடையில் வந்தால் :

மாதவிலக்கிற்கு இடைப்பட்ட நாட்களில் வந்தால் உங்கள் கர்ப்பப்பையில் ஏதேனும் பாதிப்பு உண்டாகியிருக்கலாம் அல்லது ஹார்மோன் பிரச்சனையாக இருக்கலாம்.

கர்ப்பத்தின் போது :

கர்ப்பத்தின் போது அவ்வாறு வந்தால் உடனடியாக மருத்துவரிடம் பரிசோதியுங்கள். இம்ப்ளேன்டேஷன் முறையினால் கூட அவ்வாறு பழுப்பு நிற வெள்ளைப்படுதல் நிகழும்.

சீரற்ற மாதிவிடாய் :

உங்கள் மாதவிடாய் சீரில்லாமல் இருந்தாலும் பழுப்பு நிற வெள்ளைப்படுதல் நிகழும்.

கர்ப்பத்தடை மாத்திரைகள் :

கர்ப்பத்தடை மாத்திரைகள் சாப்பிட்டால் இந்த மாதிரி பிரச்சனை உண்டாகும்.

மற்ற காரணங்கள் :

கர்ப்ப வாய் புற்று நோய், கர்ப்பப்பை புற்று நோய் காரணமாகவும் இவ்வாறு பழுப்பு நிற வெள்ளைப்படுதல் நிகழும். எதனையும் அசட்டையாக விட வேண்டாம். உடனடியாக மருத்துவரை நாடுவது எல்லாவ்ற்றிற்கும் உத்தமம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

சிறந்த ஹெல்த் இன்சூரன்ஸ் எதுவென, ஒப்பிட்டு பார்த்து தேர்வு செய்யுங்கள்!

English summary

What does brown discharge indicate

These reasons may cause for brown discharge.
Please Wait while comments are loading...
Subscribe Newsletter