For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஆண்களுக்கு கவட்டியில் வலி உண்டாவதன் காரணங்கள் என்ன?

|

சில ஆண்களுக்கு திடீர் திடீர் என கவட்டி (இடுப்பு மற்றும் தொடைக்கு இடைப்பட்ட பகுதி) பகுதியில் வலி உண்டாகும். இதற்கான காரணம் என்ன என்று பலரும் அறிந்திருக்க வாய்ப்புகள் இல்லை.

சில சமயங்களில் வேகமாக ஓடும் போதோ, குதிக்கும் போதோ, பயிற்சி / விளையாட்டின் போதோ கால்களை அதிகமாக ஸ்ட்ரெச் செய்து விட்டால் கூட இந்த கவட்டி வலி உண்டாகும்.

ஆனால், சில மருத்துவ நிலைகள் அல்லது உடல்நல கோளாறுகள் உண்டானாலும் கூட இந்த கவட்டி வலி அடிக்கடி ஏற்படும். சிறு சிறு பிரச்சனைகளில் இருந்தும், பெரும் அபாயங்கள் ஏற்படுத்தும் பிரச்சனைகள் வரை பலவற்றுக்கு இந்த கவட்டி வலி அறிகுறியாக இருக்கின்றன...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பிம்பிள்!

பிம்பிள்!

கவட்டி பகுதியில் பிம்பிள் இருந்தால், சரும தொற்றால் உண்டாகியிருக்கிறது என அர்த்தம்.இது கூட வலி ஏற்படுத்தலாம். அந்த நேரத்தில் அதற்கான க்ரீம் மருந்துகளை பயன்படுத்தினால் பலன் எதிர்பார்க்கலாம்.

மேக வெட்டை அல்லது காசநோய்!

மேக வெட்டை அல்லது காசநோய்!

மேக வெட்டை அல்லது காசநோய் இருந்தால் அவ்விடத்தில் வலி உண்டாகலாம். அல்லது வெறும் குடலில் உண்டான தொற்று பாக்டீரியாக்களால் கூட வலி உண்டாக வாய்ப்புகள் இருக்கின்றன. இதற்கு ஆண்டி-பயாடிக் எடுத்துக் கொள்வது நல்லது எனிலும், மருத்துவரிடம் பரிசோதனை செய்துக் கொள்வது சிறந்தது.

விதை (testicles) கட்டி!

விதை (testicles) கட்டி!

ஆண்களின் விதைப்பையில் கட்டிகள் உண்டாகியிருந்தாலும் கவட்டி பகுதியில் வலி உண்டாகலாம். இது அதிக வலியை உண்டாக்கும். இது ஹார்மோன் சம்மந்தப்பட்டது. எனவே, மருத்துவரை சந்தித்து பரிசோதனை செய்துக் கொள்வது நல்லது.

விளையாட்டு!

விளையாட்டு!

விளையாட்டு வீரர்கள் தசை பயிற்சிகளில் ஈடுபடும் போது, ஸ்ட்ரெச்சிங் செய்யும் போது வேகமாக அல்லது தவறாக கால்களை அசைத்து விட்டாலும் கூட இந்த வலி ஏற்படும். இதற்கு சிறிது நேரம் ஓய்வெடுத்தால் போதும்.

வாந்தி!

வாந்தி!

தீவிரமாக கவட்டி பகுதியில் வலி உண்டாவது, வாந்தி வருவது போன்றவை விதை முறுக்கு ஏற்பட்டுள்ளதை வெளிகாட்டும் அறிகுறி. இதற்கு அறுவை சிகிச்சை செய்தாக வேண்டும்.

சிறுநீரக கற்கள்!

சிறுநீரக கற்கள்!

சிறுநீரக கற்கள் பிரச்சனை இருந்தாலும் கூட கவட்டி பகுதியில் வலி உண்டாகும். எனவே, தொடர்ந்து இந்த வலி இருந்தால் உடனே மருத்துவரிடம் பரிசோதனை செய்துக் கொள்ளுங்கள்.

தொற்றுகள்!

தொற்றுகள்!

உடலில் சில தீவிரமான தொற்று உண்டாகியிருந்தால் கூட இந்த வலி வரலாம். விதைப்பை வீங்குதல், குமட்டல், கவட்டி பகுதியில் வலி போன்றவை கிளமீடியா பாதிப்பு உண்டாகியிருப்பதை வெளிகாட்டும் அறிகுறி.

குடலிறக்கம்!

குடலிறக்கம்!

குடலிறக்கம் உண்டாகியிருந்தால் கூட இந்த வலி வரும். இதற்கு அறுவை சிகிச்சை செய்து தான் தீர்வுக் காண வேண்டும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

What Causes Groin Pain In Men

What Causes Groin Pain In Men , read here in tamil.
Desktop Bottom Promotion