உங்க முதுகெலும்பு S-ஆ? J-வா? உங்க ஆரோக்கியத்தை பற்றி தெரிஞ்சுக்க இதப்படிங்க!

கிராமப்புற மக்களுக்கு, நகர்புற மக்களுக்கு ஏற்படும் அளவு முதுகுவலி ஏற்படுவதில்லை. இது போன்ற பிரச்சனையை அவர்கள் எப்போதும் எதிர்கொண்டதும் இல்லை.

Subscribe to Boldsky

நகர்புறத்தில் 80% மேலான இளைஞர்களுக்கு முதுகு வலி பிரச்சனை இருக்கிறது. ஆனால், இதை கிராமப்புற மக்களிடம் போய் கூறினால், முதுகுவலி என்பது ஒரு பிரச்சனையா? என்பது போல ஆச்சரியாமாக கேட்பார்கள். ஏனெனில், அவர்கள் அடி ஏதும் படாமல் முதுகுவலி என்பதை உணர்ந்திருக்கவே மாட்டார்கள்.

This is Why Most Indigenous Cultures Don’t Have Back Pain

அதெப்படி, கிராமப்புறங்களில் வாழ்பவர்களும் நம்மளை போல தானே, அவர்களுக்கு ஏன் முதுகுவலி, இடுப்பு வலி அதிகம் எடுப்பதில்லை என சிலர் எண்ணலாம். அதற்கும் சில காரணங்கள் இருக்கின்றன...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

உலகெங்கிலும்!

இந்தியாவில் மட்டுமல்ல, உலகளவில் நடுவயதை எட்டும் முன்னரே பலரும் இந்த நாள்பட்ட முதுகு வலியால் அவதிப்படுகின்றனர். ஆனால், பெரும்பாலும் நகர்ப்புறங்களில், அதிக வளர்ச்சி அடைந்த பகுதிகளில் வசிக்கும் பகுதிகளில் மட்டும் தான் காணப்படுகிறது.

ஏன்? எதனால்?

கலிபோர்னியாவை சேர்ந்த எஸ்தர் கோகலே எனும் அக்குபஞ்சர் நிபுணர் இதுகுறித்து ஆய்வு செய்ய துவங்கினார். இதில், கிராமப்புற மக்கள் மத்தியில் இல்லாத ஒரு பிரச்சனை, நகர்ப்புறங்களில் மட்டும் ஏன் என ஆய்வு நடத்தினார்.

வாழ்வியல் தான் காரணம்!

மாடர்ன் கலாச்சாரம் தான் முதுகுவலிக்கு காரணம் என பலர் கூறியிருக்கின்றனர். ஆனால், மாடர்ன் கலாச்சாரத்தில் நாம் கண்ட எந்த மாற்றம் முதுகு வலியை அதிகரிக்கிறது என ஆய்வு செய்தார் எஸ்தர் கோகலே.

நடந்து, உட்கார்ந்து, நின்று!

இந்த ஆய்வில் எஸ்தர் கோகலே பெரிய வேறுபாடு. கிராமப்புற மக்கள் வேலை செய்யும் போது, நடந்து, உட்கார்ந்து நின்று என நிலை மாறி மாறி, ஒரு நாளுக்கு நிமிர்ந்து, குனிந்து 9 மணி நேரங்கள் வேலை செய்கிறார்கள். இது தான் நகர்புற மக்களிடம் வேறுபடுகிறது. இதுதான் முதுகு வலி அதிகரிக்க காரணமாக இருக்கிறது.

Image Source

S - J வடிவிலான முதுகு எலும்பு!

பொதுவாக S வடிவில் இருக்கும் முதுகெலும்பு, எஸ்தர் கோகலே ஆய்வு செய்த கிராமப்புற மக்கள் மத்தியில் J வடிவில் இருந்தது. இந்த J வடிவ முதுகெலும்பு கிரேக்க சிலைகளில் காணப்படும் வடிவம் ஆகும்.

எஸ்தர் கோகலே பயிற்சி!

இதை அறிந்த பிறகு எஸ்தர் கோகலேவும் அவர்கள் வேலை செய்வது போல பயிற்சிகள் எடுக்க துவங்கினார். இது எஸ்தர் கோகலேவுக்கும் பலனளித்தது. இதனால் அவருக்கு நீண்ட நாட்கள் இருந்து வந்த முதுகு வலி மறைந்து போனது என அவர் கூறுகிறார்.

குனிந்து, நிமிர்ந்து வேலை!

நகர்ப்புறங்களில் வாழும் மக்கள் பெரும்பாலும் உட்கார்ந்தே வேலை செய்வதை பழக்கமாக கொண்டிருக்கிறார்கள். இதற்கு காரணம் நகர்புறத்தில் அதிகரித்து காணப்படும் தொழில்நுட்ப வளர்ச்சி தான்.

குனிந்து, நிமிர்ந்து வேலை செய்வதால் முதுகெலும்பு நல்ல வலுப்பெறும். இந்த வலு இல்லாததால் தான் இளம் வயதிலேயே பலரும் முதுகுவலி பிரச்சனையால் அவதிப்படுகிறார்கள் என எஸ்தர் கோகலே தெரிவிக்கிறார்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

சிறந்த ஹெல்த் இன்சூரன்ஸ் எதுவென, ஒப்பிட்டு பார்த்து தேர்வு செய்யுங்கள்!

English summary

This is Why Most Indigenous Cultures Don’t Have Back Pain

This is Why Most Indigenous Cultures Don’t Have Back Pain
Please Wait while comments are loading...
Subscribe Newsletter