வேகமாக பல் துலக்கும் போது நீங்கள் செய்யும் தவறுகள்!

Subscribe to Boldsky

பல் துலக்க குச்சிகளை பயன்படுத்திய போது கூட நாம் இவ்வளவு பல் சார்ந்த பிரச்சனைகளை சந்தித்தது இல்லை. இன்று பேஸ்ட், மவுத் ஃப்ரஷ்னர், குழந்தைகளுக்கு, பெரியவர்களுக்கு என வகைவகையான டூத் பிரஷ், ஒவ்வொரு பற்களுக்கு ஒவ்வொரு வகை டூத் பேஸ்ட் என இத்தனை இருக்கும் போது தான் பிரச்சனைகள் அதிகரித்து காணப்படுகின்றன.

அதிலும், இன்றைய அவசரகதி வாழ்க்கையில் தாமதமாக உறங்கி, தாமதமாக எழும் வாடிக்கை கொண்டுள்ளவர்கள் பற்களை சில நொடிகளில் பளபளவென மின்ன வைக்கிறோம் என்ற பெயரில் படாதபாடு படுத்தி பல் துலக்குகின்றனர். இதனால், அவர்களது பற்களுக்கும், ஈறுகளுக்கும் ஏன் டூத் பிரஷ்களுக்கும் கூட பக்கவிளைவு தான் உண்டாகின்றன....

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

வெண்மை பற்கள்!

வேகமாக பல் துலக்குவது நல்லது அழுக்கு போகும் என சிலர் எண்ணுகின்றனர். ஆனால், இந்த பழக்கம் பற்கள், ஈறுகள் மட்டுமின்றி உங்களது டூத் பிரஷுகும் கூட கேடு தான் விளைவிக்கும்.

ஈறு மந்தம்!

நீங்கள் தொடர்ந்து தினமும் பற்களை வேகமாக துலக்குவதால், ஈறுகள் வலுவிழந்து போகும். மேலும், நாள்பட ஈறு மந்தமாகிவிடும்.

கிறிஸ் வெலண்டி!

வெளிநாட்டில் கிறிஸ் வெலண்டி எனும் நபர் இதே போல தினமும் வேகமாக பல் துலக்கும் பழக்கத்தை பின்பற்றியதால் ஒருநாள் பற்கள் மற்றும் ஈறுகள் மொத்தமாக வலுவிழந்து, 1,13,000 ரூபாய் செலவு செய்து அறுவை சிகிச்சை மேற்கொண்டு ஈறுகளை சரி செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டார்.

டூத் பிரஷ் சிராய்ப்பு!

வேகமாக பல் துலக்குவதால் பற்கள், ஈறுகளுக்கு உண்டாகும் இந்த பிரச்சனையை டூத் பிரஷ் சிராய்ப்பு என கூறுகின்றனர்.

இதனால், நன்றாக இருக்கும் உங்கள பற்கள் சென்சிடிவ் பற்களாக மாறுகின்றன. இதற்கு எனாமல் தேய்மானம் ஆவது தான் காரணம்.

இரண்டு முறை போதுமானது!

சிலர் அதிகமாக பல் துலக்குவது பற்களின் வலிமையை அதிகப்படுத்தும் என எண்ணுகின்றனர். உலகில் 10 - 20% மக்கள் இந்த எண்ணத்துடன் தான் வாழ்கின்றனர்.

ஆனால், இது தவறு. மேலும், இவர்கள் இதன் காரணமாக கடுமையான முட்கள் (bristles) கொண்ட பிரஷ் பயன்படுதுக்கின்றனர். இது மேலும் உங்கள் பற்களை, ஈறுகளை சேதம் தான் செய்யும்.

வேகம், விவேகம்!

எனவே, உங்கள் வேலையில் மட்டுமல்ல, பல் துலக்குவதிலும் வேகத்தைவிட, விவேகம் தான் வேண்டும் என்பதை புரிந்துக் கொள்ளுங்கள். மென்மையான ப்ரிஸ்ட்சல்ஸ் கொண்ட பிரஷ் பயன்படுத்துங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

சிறந்த ஹெல்த் இன்சூரன்ஸ் எதுவென, ஒப்பிட்டு பார்த்து தேர்வு செய்யுங்கள்!

English summary

This Is What Will Happen If You Brush Your Teeth Very Fast

This Is What Will Happen If You Brush Your Teeth Very Fast
Please Wait while comments are loading...
Subscribe Newsletter