For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உங்கள் சிறுநீரகங்கள் உங்களிடம் சொல்ல நினைக்கும் சில முக்கிய விஷயங்கள்!

|

உங்களுக்கு இரத்த அழுத்தம், நீரிழிவு மற்றும் இதய நோய்கள் போன்ற பிரச்சனைகள் இருந்தால், முதலில் இவற்றைக் கட்டுப்படுத்த நினைக்கும் முன் சிறுநீரகங்களை கவனமாக பார்த்துக் கொள்ளுங்கள். சிறுநீரகங்கள் தான் உடலில் உள்ள அனைத்து கழிவுகளையும் வெளியேற்றி, உடலுறுப்புக்களின் சீரான இயக்கத்திற்கு உதவுகிறது.

எனவே மற்ற உடல் உறுப்புக்களுக்கு கொடுக்கும் கவனிப்புக்களை விட, சிறுநீரகங்களின் மீது சற்று அதிகமாக கவனம் செலுத்துங்கள். இங்கு உங்கள் சிறுநீரகங்கள் ஆரோக்கியமாக இருக்க நினைவில் கொள்ள வேண்டிய சில முக்கியமான விஷயங்கள் கொடுக்கப்பட்டுள்ளது. அதைக் கொஞ்சம் படித்துப் பாருங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ரன்னிங் செல்லவும்

ரன்னிங் செல்லவும்

தினமும் ரன்னிங் மேற்கொள்வதால் உடல் எடை கட்டுப்பாட்டுடன் இருப்பதோடு, இரத்த சர்க்கரை அளவு, இரத்த அழுத்த அளவு சீராக இருந்து, இதயமும் ஆரோக்கியமாக இருக்கும். ஒருவர் ரன்னிங் மேற்கொண்டு இவற்றையெல்லாம் ஆரோக்கியமாக பராமரித்து வந்தால், சிறுநீரகங்கள் பாதுகாப்புடன் இருக்கும். இல்லாவிட்டால் அனைத்து பிரச்சனைகளும் சிறுநீரக நோய்களுக்கு வழிவகுத்துவிடும்.

MOST READ: சிவபெருமானுக்கு ஒரு சகோதரி இருந்தது உங்களுக்கு தெரியுமா?

சோடா பானங்களைத் தவிர்க்கவும்

சோடா பானங்களைத் தவிர்க்கவும்

சோடா பானங்கள் அனைத்திலும் பாஸ்பாரிக் அமிலம் ஏராளமான அளவில் இருக்கும். இந்த அமிலம் நேரடியாக சிறுநீரகங்களைப் பாதிக்கக்கூடியவை. எனவே தாகத்தின் போது சோடா பானங்களைப் பருகுவதற்கு பதிலாக இளநீர் அல்லது பழச்சாறுகளைப் பருகுங்கள்.

புகைப்பிடிப்பதைத் தவிர்க்கவும்

புகைப்பிடிப்பதைத் தவிர்க்கவும்

புகைப்பிடிப்பதால் அதில் உள்ள நிக்கோட்டின் நுரையீரலை மட்டும் பாதிப்பதில்லை, சிகரெட்டில் உள்ள இதர நச்சுமிக்க கெமிக்கல்கள் சிறுநீரக நோய்களையும், சிறுநீர்ப்பை புற்றுநோயையும் கூட ஏற்படுத்தும்.

அதிக தண்ணீர் குடிக்கவும்

அதிக தண்ணீர் குடிக்கவும்

சிறுநீரகங்களின் ஆரோக்கியமான செயல்பாட்டிற்கு குடிக்கும் நீரின் அளவை அதிகரிக்க வேண்டும். தண்ணீர் அதிகம் குடித்தால், உடலில் உள்ள டாக்ஸின்கள் சிறுநீரின் வழியே வெளியேற்றப்படும். எனவே சிறுநீரக நோய்கள் மற்றும் இதர பிரச்சனைகள் வராமல் இருக்க தினமும் 6 லிட்டர் தண்ணீர் பருக வேண்டும்.

மதுவைத் தவிர்க்கவும்

மதுவைத் தவிர்க்கவும்

மது கல்லீரல் மற்றும் இதயத்தைப் பாதிக்கும். கல்லீரல் மற்றும் இதயம் பாதிக்கப்பட்டால், அது சிறுநீரகங்களுக்கும் தீங்கை விளைவிக்கும். மேலும் மது சிறுநீரில் வழியே சோடியம் மற்றும் பொட்டாசியத்தை வெளியேற்றும் போது, அவை சிறுநீரகங்களில் தங்கி பிரச்சனைகளை உண்டாக்கும். எனவே மதுவிற்கு நோ சொல்ல வேண்டும்.

MOST READ: விந்தணு குறைபாட்டை குணப்படுத்தும் தொப்புள் கொடி முறை பற்றி தெரியுமா...?

எச்சரிக்கையுடன் இருக்கவும்

எச்சரிக்கையுடன் இருக்கவும்

சிறுநீரகங்களில் பிரச்சனை இருப்பது போல் உணர்ந்தால், உடனே மருத்துவரை அணுகி பரிசோதனை மேற்கொண்டு, ஆரம்பத்திலேயே பிரச்சனையை சரிசெய்துவிட்டால், சிறுநீரக நோய்கள் வளர்வதைத் தடுக்கலாம். இல்லாவிட்டால், நிலைமை மோசமாகி பெரும் பிரச்சனையை சந்திக்க வேண்டி வரும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Things Your Kidneys Want To Tell You

If you are hypertensive or diabetic or are suffering from minor heart problems, then besides controlling these conditions, kidneys are the organs that you must care for the most. Here are some things your kidneys want to tell you. Read on to know more...
Desktop Bottom Promotion