For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உங்களுக்கு விட்டமின் டி குறைபாடு இருக்கா? எப்படி தெரிந்து கொள்ளலாம்?

|

நமது உடலில் செல்களுக்கும், உறுப்புக்களுக்கும் போஷாக்கு அளிக்க மட்டுமே விட்டமின் தேவைப்படுகிறது என்று நினைப்பது தவறு. அவை ஹார்மோன் சுரப்பிற்கும், கண்பார்வைக்கும், என்சைம் சுரப்பதற்கும் இன்னும் பலபல வேலைகளை செய்ய விட்டமின்கள் அவசியம்.

விட்டமின் டி இதன் முக்கியத்துவம் தெரிந்தால் இதன் அருமையை புரிந்து கொள்வீர்கள். விளம்பரங்களில் வருவது போல் கால்சியம் உடலில் அதிகமாவதற்கு மட்டும் விட்டமின் டி பயன்படவில்லை. ஹார்மோன் சுரப்பதற்கும் தசை வளர்ச்சிக்கு, புற்று நோயை வரவிடாமல் தடுக்க, என பலவகையில் இது தேவைப்படுகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
 விட்டமின் டி எவ்வாறு பெறப்படுகிறது?

விட்டமின் டி எவ்வாறு பெறப்படுகிறது?

சூரிய புற ஊதாக் கதிர்கள் நம் சருமத்தின் மீது படும்போது கொலஸ்ட்ரால் மூலமாக விட்டமின் டி பெறப்படுகிறது.

இந்த விட்டமின் டி இரைப்பை, மற்றும் இறுதியாக சிறு நீரகத்தை அடைந்து அங்கே கால்சிட்ரையால் என்னும் ஹார்மோனாக மாறுகிறது.

இங்குதான் விட்டமின் டி யின் உயிர்பெறுகிறது. இந்த கால்சிட்ரையால் ஹார்மோனாக மாறி கால்சியம் உறிதலுக்கு தூண்டுகிறது.

 அதிகமாக வியர்க்கிறதா?

அதிகமாக வியர்க்கிறதா?

எந்த வித வேலையும் செய்யாமல் அதிகமாக வியர்க்கிறதா? அப்படியென்றால் இது விட்டமின் டி குறைப்பாட்டின் அறிகுறியே. உங்கள் டயட்டில் சாலமன் மீன், முட்டை, ஆகியவ்ற்றை சேர்த்துக் கொள்ளுங்கள். உங்கள் விட்டமின் டி தேவை நிவர்த்தியாகும்.

 தூக்கம் இல்லையா?

தூக்கம் இல்லையா?

காஃபியும் குடிப்பதில்லை. மொபைலும் பார்ப்பதில்லை. இருந்தாலும் தூக்கம் வரலையே என்று புலம்புகிறீர்களா? விட்டமின் டி குறைபாட்டினால் தூக்கம் வருவது குறையும் என ஆய்வு கூறுகின்றது.

எலும்பு எளிதில் உடைகிறதா?

எலும்பு எளிதில் உடைகிறதா?

தடுக்கி விழுந்ததும் எலும்பு விரிசல்அல்லது முறிதல் ஏற்படுகிறதா? அப்படியென்றால் விட்டமின் டி குறைப்பாட்டினால் கால்சியம் போதிய அளவு எலும்பில் சேர்க்க முடியாமல் போகும். இதனால் எலும்பு பலவீனமடைந்து எளிதில் உடைய நேரிடும்.

அடிக்கடி நோய்வாய்படுகிறீர்களா?

அடிக்கடி நோய்வாய்படுகிறீர்களா?

சமீபத்திய ஆராய்ச்சி ஒன்றில் விட்டமின் டி குறைவால் எங்கு சென்றாலும் எளிதில் சளி, காய்ச்சல் என அவதிக்குள்ளாவர்கள். சுவாச பிரச்சனைகளும் உண்டாகும். விட்டமின் டி குறைபாட்டினால் நோய் எதிர்ப்பு செல்களும் குறைவாகவே இருக்கும்.

எப்போதும் டென்ஷன் உண்டாகிறதா?

எப்போதும் டென்ஷன் உண்டாகிறதா?

விட்டமின் டி குறைந்தால் செரடோனின் போன்ற ஸ்ட்ரெஸ் ஹார்மோன் அதிகமாக சுரக்கும். இதனால் பதட்டம், டென்ஷன் ஆகியவை உண்டாகும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Symptoms of vitamin D deficiency

These symptoms may indicate that you have Vitamin D deficiency
Story first published: Thursday, September 29, 2016, 7:15 [IST]
Desktop Bottom Promotion