For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நீங்கள் புகைப்பிடிப்பவரா?! கொஞ்சம் இதை படிங்க..

|

ஒரு புதிய ஆய்வு புகைப்பிடிப்பது தொடர்பாக ஆஸ்திரேலுயாவிலுள்ள மெல்போர்ன் நகரத்தில் நடந்தது. இந்த ஆய்வில் புகைப்பிடிப்பவர்களில் உயிருக்கு போராடுபவர்களின் சதவீதம் அதிகமாக இருப்பது தெரிய வந்துள்ளது.

Smoking causes for the patients at emergency ward

மெல்போர்னிலுள்ள செயின்ட் வின்சென்ட் மருத்துவ மனை மற்றும் ஆஸ்டின் மருத்துவமனைகளிலுள்ள சுமார் 340 எமர்ஜென்ஸி வார்டுகளில் உள்ளவர்களை கணக்கிட்டு ஆய்வு செய்ததில், புகைப்பிடிப்பதால் உயிருக்கு போராடுபவர்களே அங்கு அதிகம் உள்ளனர் என தெரிய வந்துள்ளது.

இதில் புகைப் பிடிப்பவர்கள் வெளியே சாதாரணமாக நடமாடுபவர்கள் 15 % தான். ஆனால் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவ மனைகளில் சேர்க்கப்பட்டவர்கள் 23.3% அதிகம்.

எமர்ஜென்ஸி வார்டுகளில் சேர்க்கப்பட்டவர்களில் 78 சதவீதம் புகைப்பிடிப்பதனால் என்று ஆய்வில் கூறியிருக்கிறார்கள்.

அவ்வாறு புகையினால் ஆபத்தான நிலையில் இருப்போர்களின் சராசரி வயது 42. இவர்களில் 64 சதவீதம் ஆண்கள் என்று மெல்போன் நகர கணக்கெடுப்பு கூறுகின்றது.

உயிருக்கு உலை வைக்கும் ஆபத்தான நோய்களில் உலகளவில் புகையிலையின் பங்கு உண்டு. பத்தில் ஒருவர் புகையிலையால் இறக்கிறார் என்று ஆய்வு சொல்கிறது.

English summary

Smoking causes for the patients at emergency ward

Smoking causes for the patients at emergency ward
Desktop Bottom Promotion