For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நீங்கள் உறங்கும் நிலை சரியா? தவறா? அதனால் உண்டாகும் நன்மைகள், தீமைகள் என்னென்ன?

|

சிலர் வடக்கு பக்கம் தலை வைத்து படுக்க வேண்டாம் என்பார்கள், கிழக்கு பக்கம் தலை வைத்து படுப்பது தான் நல்லது என்பார்கள். இதற்கு புவியின் காந்த சக்தி வைத்து சில ஆரோக்கிய தீமை / நன்மை உண்டாகும் என காரணங்கள் கூறப்படுகின்றன.

சரி இதை விட்டுவிடலாம், எந்த பக்கம் தலை வைத்து படுத்தாலும், ஒவ்வொருவரும் ஒவ்வொரு நிலையில் உறங்கும் பழக்கம் கொண்டிருப்பார்கள் அதில் எது நல்லது, எது கெட்டது என உங்களுக்கு தெரியுமா?

குறுக்கி படுப்பது, கால் மேல் கால் போட்டு படுப்பது, குப்புறப் படுப்பது, மல்லாந்து படுப்பது என பல நிலைகள் உள்ளன, இதில் எவை நல்லவை, எவை தீவை மற்றும் இவற்றால் உடலில் உண்டாகும் மாற்றங்கள் என்னென்ன என்று பாப்போம்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கீழ் முதுகு வலி!

கீழ் முதுகு வலி!

தலையணையை கால் குட்டிக்கு கீழ் வைத்து உறங்கினால் கீழ் முதுகு வலி குறையும்.

மல்லாந்து படுப்பது!

மல்லாந்து படுப்பது!

கழுத்தை நேராக வைத்து, மல்லாந்து படுத்து வந்தால் முதுகு வலி சரியாகும். மற்றும் ஆசிட் ரிஃப்ளக்ஸ் கோளாறுகள் குறையும்.

தாடை வலி!

தாடை வலி!

கைகள் கொண்டு தலையணையை அணைத்தது போல குப்புறப்படுத்து உறங்குவது தாடை வலி மற்றும் தலை வலி குறைய உதவும்.

கழுத்து வலி!

கழுத்து வலி!

கழுத்து வலி, தண்டுவடம் பிரச்சனை உள்ளவர்கள் குப்புறப்படுத்து உறங்குவதை தவிர்க்க வேண்டும். இது தண்டுவடத்தின் நேரான தன்மையில் தாக்கம் உண்டாக்கி வலியை அதிகப்படுத்தும்.

இடுப்பு வலி!

இடுப்பு வலி!

இடுப்பு வலி உள்ளவர்கள், கால் முட்டிகளுக்கு இடியே தலையணையை வைத்து உறங்கினால் இடுப்பு வலி குறையும்.

குழந்தை நிலை!

குழந்தை நிலை!

கருவில் இருக்கும் குழந்தையை போல கால்களை குறுக்கி வைத்துக் கொண்டு உறங்குவது, ஆரோக்கியத்திற்கு நல்ல முறை அல்ல. இது நாள்ப்பட உடல் வலி உண்டாக காரணியாகும்.

ஃபெதர் தலையணை!

ஃபெதர் தலையணை!

ஃபெதர் போன்ற பொருட்கள் கொண்டு தயாரிக்கப்படும் தலையணைகள் கழுத்தின் வளைவுக்கு எதுவாக இருக்கும், இதனால், கழுத்து வலி உண்டாவதை தடுக்க முடியும்.

தோள் வலி!

தோள் வலி!

தோள் வலி உள்ளவர்கள், கால்களுக்கு கீழ் மற்றும் தோள்களுக்கு தலையணை பயன்படுத்தி உறங்கினால், தோள் வலியை குறைக்க முடியும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Sleeping Positions You Must Follow From Today

தோள் வலி உள்ளவர்கள், கால்களுக்கு கீழ் மற்றும் தோள்களுக்கு தலையணை பயன்படுத்தி உறங்கினால், தோள் வலியை குறைக்க முடியும்.
Story first published: Monday, September 19, 2016, 10:20 [IST]
Desktop Bottom Promotion