வாயில் துர் நாற்றமா? சிம்மாசனாவை செய்யுங்க!!

By: Hemalatha V
Subscribe to Boldsky

வாயில் துர் நாற்றம் ஏற்படுவது மிகவும் அசௌகரியமான நிலை. தன்னம்பிக்கை சீர்குலைக்க வைக்கும். யாரிடமும் பேச தயக்கமாக இருக்கும். மற்ற பிரச்சனைகளை விட இந்த பிரச்சனை எளிதில் மற்றவர்களுக்கு தெரிய வரும்.

இதனால் நெருக்கமாக நம்மிடம் பழக பலர் தயங்குவார்கள். வாய்துர் நாற்றம் சிலருக்கு சில சமயம் இருக்கும். சிலருக்கு எப்போதுமே இருக்கும். ஒருசிலருக்கு வாயை திறந்தாலே தாங்க முடியாத அளவிற்கு நாற்றம் உண்டாகும் இதற்கு காரணங்கள் என்ன?

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

காரணங்கள்:

வாய் துர்நாற்றத்திற்கு பல முக்கிய காரணங்கள் உள்ளன. சரியாக பல் துலக்காமல் இருப்பதால் கிருமிகள் தங்கி, வாய் துர் நாற்றத்தை ஏற்படுத்திவிடும். இதனை எளிதில் குணப்படுத்திவிடலாம். அல்லது ஈறு சம்பந்தபட்ட பிரச்சனைகளாலும் ஏற்படும்.

காரணங்கள்:

உள்ளுறுப்புகளில் ஏதாவது பாதிப்பு ஏற்பட்டிருந்தால் அவற்றின் அறிகுறிகளாகவும் வாய் துர்நாற்றம் ஏற்படும். அந்த பாதிப்புகளை சரிப்படுத்தும் வரை வாய்துர்நாற்றத்தை சரி செய்ய இயலாது. அதே போல் அதிக வீரியமிக்க மாத்திரைகள் எடுத்துக் கொள்வதால் பக்க விளைவால் வாய் துர் நாற்றம் உண்டாகும்.

யோகா :

யோகாவினால் தீர்க்க முடியாத அல்லது தடுக்க முடியாத நோய்கள் இல்லை எனக் கூறலாம். அவ்வகையில் வாய் துர் நாற்றத்தையும் குணப்படுத்தலாம். என்பது தெரியுமா?

சிம்மாசனம்:

சிம்மாசனம் என்றால் நமக்கு ராஜாதான் நினைவுக்கு வருவார். ஆனால் அந்த பெயருக்கு காரணமான சிங்கத்தைப் போன்று அமர்ந்து செய்வதால் இந்த ஆசனத்திற்கு சிம்மாசனம் என்று பெயர் பெற்றுள்ளது. இது வாய் துர் நாற்றத்தை போக்கிவிடும். ஈறுகளின் நரம்புகளை பலப்படுத்தி, அங்கே கிருமிகளை அழிக்கிறது. செய்வதற்கும் எளிது. முயன்று பாருங்கள்.

செய்முறை :

முதலில் முட்டி போட்டு அமருங்கள். உங்கள் பாதங்கள் இரண்டும் குறுக்கு வாட்டில் பெருக்கல் குறிபோல் ஒன்றோடொன்று இருக்கும்படி வைத்துக் கொள்ளுங்கள். பாதத்தின் மீது அமர வேண்டும். பின்னர் கைகளை முட்டிகளின் மீதி இறுக்கமாக வைத்துக் கொள்ளுங்கள்

செய்முறை :

இப்போது வாயை திறந்தபடி நாக்கை வெளி காண்பியுங்கள். மூச்சை மூக்கின் வழியாக ஆழ்ந்து இழுக்க வேண்டும். இப்போது குரல்வளையம் திறக்காமல் சில நொடிகளுக்கு தம் பிடியுங்கள். பின் மெதுவாக வாயின் வழியில் விட வேண்டும். அப்போது " ஹா" என்ற சப்தத்தை உருவாக்குங்கள். இது போல் 5 முறை செய்யலாம்.

பலன்கள் :

நரம்புகளை ஊக்கப்படுத்துகிறது. தொண்டையில் உண்டாகும் தொற்றுக்களை குணப்படுத்தும். நுரையீரலை பலப்படுத்தும். ரத்த ஓட்டத்தை அதிகப்படுத்தும். முகச் தசைகளுக்கு புத்துணர்வு தரும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

சிறந்த ஹெல்த் இன்சூரன்ஸ் எதுவென, ஒப்பிட்டு பார்த்து தேர்வு செய்யுங்கள்!

English summary

Simhasana to Stop Bad Breath

Yoga can help to prevent to Stop Mouth decay
Please Wait while comments are loading...
Subscribe Newsletter