For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உடலில் போதுமான அளவில் புரோட்டீன் இல்லை என்பதை வெளிப்படுத்தும் அறிகுறிகள்!

|

தசைகளின் வளர்ச்சிக்கு புரோட்டீன் மிகவும் இன்றியமையாதது. இத்தகைய புரோட்டீன் உடலில் குறைவாக இருந்தால், அதனால் பல்வேறு பக்கவிளைவுகளை சந்திக்க நேரிடும். ஆனால் பலரும் புரோட்டீன் குறைபாட்டை வெளிப்படுத்தும் சில அறிகுறிகளை சாதாரணமாக நினைத்துவிடுகின்றனர்.

இது அப்படியே முற்றினால், அதனால் கடுமையான விளைவை சந்திக்க நேரிடும். இங்கு புரோட்டீன் குறைவாக இருந்தால் வெளிப்படும் அறிகுறிகள் கொடுக்கப்பட்டுள்ளன. அதைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மிகுதியான பசி

மிகுதியான பசி

உடலில் புரோட்டீன் குறைவாக இருந்தால், பசி அதிகம் இருக்கும். எந்நேரமும் எதையாவது நொறுக்கிக் கொண்டே இருக்க வேண்டுமென்று தோன்றும்.

காயம்

காயம்

உடலில் ஏதேனும் காயங்கள் ஏற்பட்டால், அது விரைவில் குணமாகாது. பொதுவாக காயங்கள் விரைவில் குணமாவதற்கு புரோட்டின் சத்து உடலில் போதுமான அளவில் இருக்க வேண்டும். ஆகவே உங்களுக்கு காயங்கள் ஏற்பட்டு, அது குணமாக தாமதமானால் உங்கள் உடலில் புரோட்டீன் குறைவாக உள்ளதென்று அர்த்தம்.

தோல் உரியும், முடி மெலியும்

தோல் உரியும், முடி மெலியும்

தோல், நகம் போன்றவை உரிய ஆரம்பித்தாலோ, முடி உதிர்ந்து மெலிய ஆரம்பித்தாலோ, அதுவும் புரோட்டீன் குறைபாட்டைத் தான் வெளிக்காட்டுகிறது.

தசை மற்றும் மூட்டு வலி

தசை மற்றும் மூட்டு வலி

உடலில் புரோட்டீன் குறைவாக இருந்தால், தசை வலி, மூட்டு வலி போன்றவை அடிக்கடி ஏற்படும். அதேப்போல் பதப்படுத்தப்பட்ட உணவுகளை அதிகம் சாப்பிடுபவராக இருந்தால், மீன், சிக்கன், முட்டை, பால் பொருட்களை அதிகம் டயட்டில் சேர்க்கப் பாருங்கள்.

உடலில் நீர் வீக்கம்

உடலில் நீர் வீக்கம்

திசுக்களில் சீரான அளவில் நீரைப் பராமரிப்பதில் புரோட்டீன் முக்கிய பங்கை வகிக்கிறது. ஒருவேளை உங்களுக்கு உடலில் ஆங்காங்கு நீர் வீக்கம் ஏற்பட்டால், அது புரோட்டீன் குறைபாட்டிற்கான அறிகுறிகளுள் ஒன்றாகும்.

நோயெதிர்ப்பு சக்தி குறைவு

நோயெதிர்ப்பு சக்தி குறைவு

அடிக்கடி சளி, இருமல், காய்ச்சல் போன்றவற்றால் அவஸ்தைப்பட்டு வந்தால், நோயெதிர்ப்பு சக்தி பலவீனமாக உள்ளது என்று அர்த்தம். பொதுவாக நோயெதிர்ப்பு செல்கள் புரோட்டீன்களால் ஆனது. புரோட்டீன் அளவு குறையும் போது, நோயெதிர்ப்பு சக்தியும் குறைவாக இருக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Signs You Are Not Getting Enough Protein

Here are some signs you are not getting enough protein. Read on to know more...
Story first published: Friday, September 30, 2016, 16:22 [IST]
Desktop Bottom Promotion