For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியாவும், புற்றுநோயும் - திகைக்க வைக்கும் தகவல்கள்!

|

புற்றுநோய், நாம் எண்ணுவதை விட மிக வேகமாக உலகம் முழுவதும் காட்டுத்தீ போல பரவி வளர்ந்து வருகிறது. குறிப்பிட்டு கூறும் அளவு கடந்த சில வருடங்களாக இந்தியாவிலும் புற்றுநோய் பாதிப்பு விறுவிறுவென அதிகரித்து வருகிறது.

இந்தியாவில் ஒவ்வொரு நிமிடத்திற்கும் இரண்டு புற்றுநோயாளிகள் அதிகரிக்கின்றனர் என அதிர்ச்சிக்குரிய தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்தியாவில் ஒருநாளுக்கு 1,300 பேர் வீதம் புற்றுநோய் காரணத்தால் மட்டுமே உயிர் இழக்கின்றனர்....

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
11.2 லட்சம்

11.2 லட்சம்

கடந்த 2014-ம் ஆண்டு இந்தியாவில் புற்றுநோயாளிகள் எண்ணிக்கை 11.2 லட்சமாக அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

4.91 லட்சம்

4.91 லட்சம்

அதே 2014-ம் வருடம் மட்டுமே 4.91 லட்சம் பேர் புற்றுநோய் காரணமாக உயிரிழந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

2012 - 2014

2012 - 2014

2012-2014 இந்த இரண்டு ஆண்டுகளுக்குள் மட்டுமே புற்றுநோயாளிகள் எண்ணிக்கை ஏறத்தாழ 6% அதிகரித்துள்ளது.

30 - 70

30 - 70

இந்தியாவில் 70% மேலான புற்றுநோய் பாதிப்பு உள்ளவர்கள் 30 - 70 வயதுக்குட்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

2011 - 2014

2011 - 2014

  • 2011 - 10,28,503
  • 2012 - 10,57,204

  • 2013 - 10,86,783
  • 2014 - 11,17,269
  • என்ற எண்ணிக்கையில் இந்த நான்கு வருடங்களில் இந்தியாவில் புற்றுநோய் பாதிப்பு அதிகரித்துள்ளது.

    ஆண்களை பாதிக்கும் புற்றுநோய்

    ஆண்களை பாதிக்கும் புற்றுநோய்

    இந்தியாவில் ஆண்களை அதிகமாக பாதிக்கும் புற்றுநோய் தலை-கழுத்து மற்றும் நுரையீரல் புற்றுநோய் ஆகும். பெண்களை அதிகமாக பாதிக்கும் புற்றுநோய் மார்பகம் மற்றும் கர்ப்பப்பை வாய் புற்றுநோய் ஆகும்.

    ஒவ்வொரு நிமிடமும்

    ஒவ்வொரு நிமிடமும்

    இந்தியாவில் ஒவ்வொரு நிமிடத்திற்கும் இரண்டு புதிய புற்றுநோயாளிகள் அதிகரிக்கின்றனர்.

    ஒவ்வொரு நாளும்

    ஒவ்வொரு நாளும்

    இந்தியாவில் ஒவ்வொரு நாளும் புற்றுநோய் காரணமாக 1,300 பேர் இறக்கிறார்கள்.

    கர்ப்பப்பை வாய் புற்றுநோய்

    கர்ப்பப்பை வாய் புற்றுநோய்

    கர்ப்பப்பை வாய் புற்றுநோய் உண்டாவதற்கு முக்கிய காரணியாக இருப்பது சுகாதாரமற்ற உடலுறவு தான் என கூறப்படுகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Shocking Facts About Cancer In India

Shocking Facts About Cancer In India, read here in tamil.
Story first published: Thursday, March 17, 2016, 16:32 [IST]
Desktop Bottom Promotion