For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நீங்க டயட்ல இருக்கீங்களா? அப்ப உடனே இத படிங்க...

|

உடல் பருமன் காரணமாக ஏராளமான மக்கள் தற்போது டயட்டில் உள்ளார்கள். சிலர் வேகமாக உடல் எடையைக் குறைக்கிறேன் என்று பல கடுமையான டயட்டை மேற்கொள்வார்கள். இதன் காரணமாக உடல் எடை வேகமாக குறைந்திருக்கும், அதே சமயம் உடலில் பல பிரச்சனைகளும் வந்திருக்கும்.

பெரும்பாலான மக்கள் உணவு தான் உடல் எடையை அதிகரிக்கிறது என்று நினைத்து, உண்ணும் உணவை முற்றிலும் தவிர்க்கும் படியான டயட்டை மேற்கொள்கிறார்கள். மேலும் நாள் முழுவதும் உணவை உட்கொள்ளாமல் வெறும் பழம் மற்றும் நீரைப் பருகி வருவார்கள்.

ஆனால் இப்படி கடுமையான டயட்டை அதிகமாக பின்பற்றினால் நம் உடலினுள் ஏற்படும் அபாயகரமான விளைவுகள் என்னவென்று தெரியுமா? அதைத் தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஊட்டச்சத்து குறைபாடு

ஊட்டச்சத்து குறைபாடு

உடலின் சீரான செயல்பாட்டிற்கு அன்றாடம் போதிய ஊட்டச்சத்துக்கள் உடலுக்கு கிடைக்க வேண்டும். இல்லாவிட்டால், ஊட்டச்சத்து குறைபாடு ஏற்பட்டு, அதனால் நோயெதிர்ப்பு மண்டலம் பலவீனமாகி, ஏராளமான உடல்நல கோளாறுகளை சந்திக்க வேண்டியிருக்கும். ஊட்டச்சத்து குறைபாடு நீடித்தால், அதனால் உயிரிழப்பு கூட ஏற்படும் அபாயம் உள்ளது.

தசை இழப்பு

தசை இழப்பு

கடுமையான டயட்டை மேற்கொண்டு, உணவு உட்கொள்வதைத் தவிர்த்தால், கொழுப்புடன், தசைகளின் அடர்த்தி குறைந்து, உடலை பலவீனமாகவும், உடல் முழுவதும் உள்ள சருமம் சுருக்கமடைந்து முதுமையானவர் போன்ற தோற்றத்தையும் கொடுக்கும்.

மன இறுக்கம்

மன இறுக்கம்

அன்றாடம் உடலுக்கு போதிய ஊட்டச்சத்துக்கள் கிடைக்காமல் போனால், மூளையால் போதிய அளவு ஆக்ஸிஜனைப் பெற முடியாமல் போய், அதன் காரணமாக மன இறுக்கத்தால் அதிகம் கஷ்டப்பட வேண்டியிருக்கும்.

உடல் வறட்சி

உடல் வறட்சி

என்ன தான் தண்ணீரை அதிகம் பருகி வந்தாலும், உடலுக்கு உணவு கிடைக்காத போது, உடலில் உள்ள செல்கள் சத்துக்களின்றி வறட்சியடைந்து, சரும வறட்சி, மயக்கம் போன்றவற்றை உண்டாக்கும்.

அதிகப்படியான சோர்வு

அதிகப்படியான சோர்வு

கண்டிப்பாக, உடலுக்கு சத்துக்கள் கிடைக்காமல் இருக்கும் போது, ஊட்டச்சத்துக் குறைபாடுகளுடன், அதிகப்படியான சோர்வை உணரக் கூடும். எனவே எடையைக் குறைக்கிறேன் என்று டயட்டை அதிகம் பின்பற்றுவதைத் தவிர்த்து, தினமும் தவறாமல் சரியான உணவுகளை உட்கொண்டு, உடற்பயிற்சியில் ஈடுபட்டு வாருங்கள்.

எரிச்சல்

எரிச்சல்

டயட்டில் இருக்கும் போது, பசி உணர்வை தொடர்ந்து அனுபவிப்பதோடு, ஒரு கட்டத்தில் அந்த பசி உணர்வால் மனதில் ஒருவித எரிச்சல் எழும். இதனால் மற்றவர்களிடம் மிகுந்த கோபத்துடன் நடந்து கொள்ளவும் கூடும்.

குறைவான மெட்டபாலிசம்

குறைவான மெட்டபாலிசம்

டயட் மேற்கொள்வதால் உடலின் மெட்டபாலிசம் குறைய ஆரம்பிக்கும். உடலின் மெட்டபாலிசம் குறைந்தால், அதனால் ஏராளமான ஆரோக்கிய பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும்.

குறிப்பு

குறிப்பு

உடல் எடையைக் குறைக்க டயட் அவசியம் தான். ஆனால் அந்த டயட் என்பது உடலுக்கு தினமும் போதிய ஊட்டச்சத்துக்கள் கிடைக்குமாறு இருக்க வேண்டுமே தவிர, உயிரைப் பறிக்கும் அளவில் கடுமையானதாக இருக்கக்கூடாது. முக்கியமாக உடல் எடையைக் குறைக்க வேண்டுமானால், தினமும் உடற்பயிற்சியை தவறாமல் செய்து வந்தாலே போதுமானது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

7 Shocking Side Effects Of Extreme Dieting!

Do you yearn to have a slimmer waist or a gap between your thighs, which seems to be the latest trend?..
Desktop Bottom Promotion