For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வாழ்நாளின் அளவை நீட்டிக்க உதவும் அற்புத உணவுப் பொருட்கள்!

|

ஒவ்வொருவருக்கும் நீண்ட நாட்கள் ஆரோக்கியமாக நோய்களின்றி வாழ வேண்டுமென்ற ஆசை இருக்கும். அதற்காக உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் உணவுகளைத் தெரிந்து கொண்டு, அவற்றை அன்றாட உணவில் சேர்த்து வருவோம்.

ஒருவர் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமானால் ஆரோக்கியமான உணவுப் பொருட்களுடன், வாழ்க்கை முறை மற்றும் பழக்கவழக்கங்களும் நல்லதாக இருக்க வேண்டியது அவசியம். இதனால் நோயெதிர்ப்பு மண்டலம் வலிமையடைந்து, பூமியில் வாழும் நாட்களின் எண்ணிக்கையை அதிகரிக்கலாம்.

இப்போது வாழ்நாளின் அளவை நீட்டிக்க உதவும் உணவுப் பொருட்கள் என்னவென்று பார்ப்போம். அதைப் படித்து அவற்றை அன்றாட உணவில் சேர்த்து வாழ்நாளை நீட்டித்துக் கொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
அவகேடோ/வெண்ணெய் பழம்

அவகேடோ/வெண்ணெய் பழம்

வாழ்நாளின் அளவை நீட்டிக்க நினைத்தால், அவகேடோ பழத்தை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ளுங்கள். ஏனெனில் அவகேடோ பழத்தில் நோயெதிர்ப்பு மண்டலத்தின் வலிமையை மேம்படுத்தும், ஒமேகா-3 ஃபேட்டி அமிலம், பொட்டாசியம் மற்றும் வைட்டமின் கே போன்றவை ஏராளமாக உள்ளது.

முந்தரிப்பழம்

முந்தரிப்பழம்

உலர்ந்த முந்திரிப்பழத்தில் வைட்டமின்களும், கனிமச்சத்துக்களும் அதிகம் உள்ளது. இது இதயத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்தி, மாரடைப்பு, இதய நோய் போன்றவை வரும் அபாயத்தைக் குறைக்கும்.

பூண்டு

பூண்டு

மருத்துவ குணம் நிறைந்த ஓர் பொருள் தான் பூண்டு. இதை தினமும் உணவில் சேர்த்து வந்தால், அதில் உள்ள வைட்டமின் பி6, வைட்டமின் சி போன்றவை நோயெதிர்ப்பு மண்டலத்தை வலிமைப்படுத்தி, நோய்கள் அண்டாமல் தடுக்கும். முக்கியமாக புற்றுநோய் தாக்காமல் தடுக்கும்.

பார்லி

பார்லி

பார்லியும் ஒருவரது உடலை பலவீனமாக்கும் பல்வேறு பிரச்சனைகளைத் தடுக்கும். குறிப்பாக குடல் புற்றுநோய், செரிமான பிரச்சனைகள், கொலஸ்ட்ரால் பிரச்சனைகள் போன்றவற்றை பார்லி உட்கொள்வதால் தடுக்கலாம்.

ஆலிவ் ஆயில்

ஆலிவ் ஆயில்

சமைக்கும் போது வெஜிடேபிள் ஆயில் பயன்படுத்துவதற்கு பதிலாக, ஆலிவ் ஆயில் பயன்படுத்தி வந்தால், நோயெதிர்ப்பு மண்டலத்தின் ஆரோக்கியம் மேம்படும். இதற்கு ஆலிவ் ஆயிலில் உள்ள நல்ல கொழுப்புக்களும், வைட்டமின் கே சத்தும் தான் காரணம். மேலும் ஆலிவ் ஆயில் மூட்டு வலி மற்றும் ஆர்த்ரிடிஸ் போன்றவற்றையும் தடுக்கும்.

முந்திரி

முந்திரி

முந்திரியில் இரும்புச்சத்து மற்றும் ஜிங்க் ஏராளமான அளவில் உள்ளது. இது நோயெதிர்ப்பு மண்டலத்தை வலிமையாக்கும் மற்றும் பார்வையை மேம்படுத்தும்.

டார்க் சாக்லேட்

டார்க் சாக்லேட்

டார்க் சாக்லேட்டில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் புற்றுநோய் வரும் அபாயத்தைத் தடுக்கும். மேலும் இது சரும செல்கள் முதுமை அடைவதைத் தடுத்து, நீண்ட நாட்கள் இளமையாகவும், ஆரோக்கியமாகவும் இருக்க உதவும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Seven Natural Ingredients That Can Help You Live Longer!

If you are looking for natural ingredients for a longer life, then try out these home remedies to improve your immune system..
Story first published: Thursday, September 1, 2016, 10:55 [IST]
Desktop Bottom Promotion