அடிவயிறு உறுப்புக்களை பலப்படுத்தும் யோகாவின் அரசி !!

By: Hemalatha V
Subscribe to Boldsky

ஜீரண சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் இப்போடு அடிக்கடி பெரும்பாலோனோருக்கு ஏற்படுகிறது. இதற்கு காரணம் நமது உணவு மற்றும் வாழ்க்கை முறைதான். மிக முக்கியமான இன்னொரு காரணம் குனிந்து நிமிர்ந்து வேலை செய்யாமல் நாள் முழுவதும் அமர்ந்தபடியே நாம் இருப்பதால்தான்.

போதிய பயிற்சி அடிவயிறுப் பகுதிக்கு தராமல் போகும்போது, அடிவ்யிற்றிலுள்ல கல்லீரல், கணையம், சிறு நீரகம் போன்ற உறுப்புகளுக்கு போதிய ரத்த ஓட்டம் கிடைக்கப்பெருவதில்லை. இதனால் மெதுவாக பாதிப்புகள் உருவாகின்றன.

இந்த பாதிப்புகளை எப்படி சரிப்படுத்தலாம். உடல் உழைப்பின் மூலமாக, உடற்பயிற்சி மூலமாக, மிக அவசியமான இன்னொரு வழி யோகா. ஆமாம் ! எந்த ஆசனத்தால் அடிவயிற்று உறுப்புகளை பலப்படுத்தலாம்? தொடர்ந்து படியுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

சலம்ப சர்வாங்கசானா :

அனைத்து நாடி நரம்புகளும் பயிற்சி பெறும் வகையில் அமைந்ததால் இந்த ஆசனத்தை சமஸ்கிருதத்தில் சர்வாங்கசானா என அழைக்கப்படுகிறது. அலம்ப என்றால் "பற்றிய" சர்வ என்றால் அனைத்து " அங்க என்றால் ஒவ்வொரு நாடி நரம்பும் என பொருள் பெறுகிறது.

சலம்ப சர்வாங்கசானா :

இந்த ஆசனம் யோகாக்களின் அரசி என அழைக்கப்படுகிறது. இது எளிதான யோகாதான். இடுப்பிலிருந்து கால்வரை மேல் செங்குத்தாக தூக்கும்போது ரத்தம் விரைவாக அடிவயிற்றுப் பகுதிக்கு பாய்கிறது. அந்த பகுதிகளில் உண்டாகும் பாதிப்புகள் சரிசெய்யப்படுகின்றன. இந்த யோகாவை எப்படி செய்வது என பார்க்கலாம்.

செய்முறை :

முதலில் தரையில் படுத்துக் கொள்ள வேண்டும். கைகள் தரையில் பதித்து நேராக படுத்து ஆழ்ந்து மூச்சை விடுங்கள்.

செய்முறை :

பின்னர் மெதுவாக அடிவயிற்றை உந்தியவாறு கால்களை மேலே தூக்குங்கள். வளைக்காமல் மேலே தூக்க வேண்டும். பின் இடுப்பிற்கு கைகளை முட்டு கொடுத்து இடுப்பு பகுதியையும் மேலே தூக்க வேண்டும். இப்போது கழுத்து மெல் முதுகுப் பகுதி மட்டும் தரையில் இருக்க வேண்டும். இடுப்பிலிருந்து கால் வரை நேராக செங்குத்தாக நிற்க வேண்டும். ஆழ்ந்து மூச்சை விடுங்கள்.
சில நிமிடங்கள் அந்த நிலையிலேயே இருந்து விட்டு மெதுவாக கால்களை இறக்கி, தரையோடு வைக்க வேண்டும்.

பலன்கள் :

அடிவயிற்றில் தசைகள் நன்கு வேலை செய்யும். கல்லீரல், கணையம் பகுதிகள் பலம் பெறும். ஜீரண சக்தி அதிகரிக்கும். மன அழுத்தம் குறையும். தூக்கமின்மை, ஆஸ்துமா, சுவாச பிரச்சனைகள் குணமாகும். மனதை ஒருமுகப்படுத்தல் அதிகரிக்கும்.

குறிப்பு :

உயர் ரத்த அழுத்தம் இருப்பாவர்கள், தலை வலி இருப்பவர்கள், கழுத்து, முதுகு வலி இருப்பவர்கள் இந்த ஆசனத்தை தவிர்க்கவும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

சிறந்த ஹெல்த் இன்சூரன்ஸ் எதுவென, ஒப்பிட்டு பார்த்து தேர்வு செய்யுங்கள்!

English summary

salamba sarvangasana to Functioning Abdominal Organs

salamba sarvangasana to Functioning Abdominal Organs
Please Wait while comments are loading...
Subscribe Newsletter