மூன்றே நாட்களில் உடலில் உள்ள நச்சுக்கள் அனைத்தையும் வெளியேற்ற வேண்டுமா?

Subscribe to Boldsky

நமது உடலில் நாம் நினைப்பதை விட அதிகளவில் நுரையீரல், கல்லீரல், குடல், சிறுநீரகம் போன்ற உடல் பாகங்களில் நச்சுக்கள் தேங்கியிருக்கின்றன. இவற்றின் காரணத்தால் அடிக்கடி உடல் உபாதைகள், சிறுசிறு உடல்நலப் பிரச்சனைகள் உண்டாகின்றன.

12 நாட்கள் வாழைப்பழத்தை மட்டும் சாப்பிட்டு நம்ப முடியாத வகையில் மாறிய அதிசய பெண்!

உடலில் இருக்கும் நச்சுக்களை மூன்றே நாட்களில் வெளியேற்ற எளிய முறை இருக்கிறது. ஆனால், இம்முறையை கடைப்பிடிக்கும் போது நீங்கள் கண்டிப்பாக பதப்படுத்தப்பட்ட உணவுகள் மற்றும் துரித உணவுகளை முற்றிலுமாக தவிர்த்துவிட வேண்டும்....

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

பால் உணவுகள்

இம்முறையை கடைப்பிடிக்கும் இரண்டு நாட்களுக்கு முன்னரே பால் உணவுகளை உட்கொள்வதை குறைத்துக் கொள்ளுங்கள். ஏனெனில், பால் உணவுகள் செரிமானமாக நீண்ட நேரம் எடுத்துக் கொள்ளும். இதனால் நச்சுக்களை நீக்கும் இந்த சுத்திகரிப்பு முறை தடைப்பட வாய்ப்புகள் இருக்கின்றன.

முந்தைய நாள் இரவு

உடல் சுத்திகரிப்பு முறையை துவங்குவதற்கு முந்தைய நாள் இரவு ஒரு கப் மூலிகை மலமிளக்கி தேநீர் பருகுங்கள். இது குடல்களில் தேங்கியிருக்கும் நச்சுக்களை போக்க உதவும். இந்த மூலிகை மலமிளக்கி தேநீர் பவுடர் மூலிகை பொருள் கடைகளிலேயே கிடைக்கின்றன.

முதல் நாள் காலை

முதல் நாள் காலை அரை கப் நீரில் இரண்டு எலுமிச்சை பழச்சாறு பிழிந்து கலந்து குடிக்கவும். இந்த ஜூஸை காலை உணவிற்கு முன்னரே பருகிவிட வேண்டும். இது செரிமானத்தை ஊக்குவிக்கும் மற்றும் நுரையீரலை மீளுருவாக்கம் அடைய செய்கிறது.

கிரேப் ஜூஸ்

காலை உணவுடன் சேர்த்து ஒன்னரை கப் கிரேப் ஃப்ரூட் ஜூஸ் குடியுங்கள். கிரேப் ஜூஸ் இல்லையெனில் இதற்கு மாற்றாக அன்னாசிப்பழம் ஜூஸ் பருகலாம். இந்த ஜூஸ்களில் ஆண்டி-ஆக்ஸிடன்ட்ஸ் அதிகம் இது உங்களது சுவாச மண்டலத்தை வலுவடையவும், ஆரோக்கியமடையவும் செய்கிறது.

கேரட் ஜூஸ்

காலை உணவு மற்றும் மதிய உணவிற்கு மத்தியில் ஒன்று அல்லது ஒன்னரை கப் தூய்மையான கேரட் ஜூஸ் பருகுங்கள். இது இரத்தத்தை சுத்திகரிக்க உதவுகிறது. மேலும், இது சுவாச குழாய்களையும் சுத்திகரிப்பு செய்கிறது. இதிலிருக்கும் வைட்டமின் எ உடலுக்கு அத்தியாவசியமான ஊட்டச்சத்து ஆகும்.

பொட்டாசியம்

பொட்டாசியம் சத்து நிறைந்துள்ள செலரி, பார்ஸ்லே (parsley), கேரட் மற்றும் கீரை போன்றவற்றை பிழிந்து நீரில் கலந்து மதிய உணவிற்கு முன்னர் ஒன்னரை கப் பருக வேண்டும். பொட்டாசியத்தில் இருக்கும் சக்திவாய்ந்த ஆண்டி-ஆக்ஸிடன்ட் உடலில் உள்ள நச்சுக்களை போக்கவல்லது.

மாலை

மாலை அல்லது இரவு உணவிற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்னர் இஞ்சி, மிளகு, கலந்து டீ பருகுங்கள். இது உடலில் உள்ள சளியை வெளியேற்ற வெகுவாக உதவும். மேலும், மூக்கடைப்பை சரி செய்யும்.

குருதிநெல்லி

நாளின் கடைசியில் உறங்குவதற்கு முன்னர் 340 மில்லி அளவு குருதிநெல்லி ஜூஸ் குடியுங்கள். இது நுரையீரலில் தேங்கியிருக்கும் நச்சுக்கிருமிகளை அழிக்க உதவுகிறது. மேலும், குருதிநெல்லியில் இருக்கும் ஆண்டி-ஆக்ஸிடன்ட் இரத்தத்தை சுத்திகரிப்பு செய்யவும், சிறுநீர் கோளாறை சரி செய்யவும் உதவுகிறது.

மூன்று நாட்கள்

இந்த முறையை தொடர்ந்து மூன்று நாட்கள் பின்பற்றி வந்தால் உடலில் நுரையீரல், சுவாச மண்டலம், இரத்தம், சிறுநீரகம் போன்ற பாகங்களில் தேங்கியிருக்கும் நச்சுக்களை எளிமையாக விரைவாக போக்கிவிட முடியும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

சிறந்த ஹெல்த் இன்சூரன்ஸ் எதுவென, ஒப்பிட்டு பார்த்து தேர்வு செய்யுங்கள்!

English summary

Remove All Toxins From The Body In Three Days

Do You Want To Remove All Toxins From The Body In Three Days? try this easy method.
Story first published: Friday, April 15, 2016, 10:04 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter