For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஈறுகளில் இருந்து இரத்தம் கசிவதற்கான வேறுசில காரணங்கள்!

By Maha
|

ஆரோக்கியமான ஈறுகள் தான் நல்ல வாய் சுகாதாரத்தின் அடையாளம். சில நேரங்களில் ஈறுகளில் நோய்க்கிருமிகள் தொற்றி காயங்கள் ஏற்பட்டு, அதனால் பல வாய் பிரச்சனைகளை சந்திக்க நேரிடுகிறது. அதில் ஒன்று ஈறுகளில் ஏற்படும் இரத்தக்கசிவு.

ஆனால் ஈறுகளில் இரத்தக்கசிவு ஏற்படுவது என்பது வேறு பல பிரச்சனைகளுக்கும் அறிகுறியாகும். அதிலும் நீங்கள் நினைத்திராத அளவிலான சில மோசமான பிரச்சனைக்கும் இது அறிகுறியாகவும் உள்ளது.

இங்கு உடலில் எந்த பிரச்சனைகள் இருந்தால் ஈறுகளில் இருந்து இரத்தக்கசிவு ஏற்படும் என்று கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து இனிமேல் ஈறுகளில் இருந்து இரத்தக்கசிவு ஏற்பட்டால் சாதாரணமாக விட்டுவிடாதீங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
நீரிழிவு

நீரிழிவு

நீரிழிவிற்கும், ஈறு வீக்க அழற்சிக்கும் இடையே வலுவான தொடர்புள்ளது. எப்படியெனில் ஈறுகளில் இருந்து இரத்தம் கசிவது தான் நீரிழிவு நோயின் முதல் அறிகுறி. இரத்த சர்க்கரை அளவு சரியான அளவில் பராமரிக்கப்படாமல் இருந்தால், ஈறுகளில் இரத்தக்கசிவு ஏற்படும். எனவே தான் நீரிழிவு நோயாளிகள் வாய் சுகாதாரத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்று சொல்கிறார்கள் மருத்துவர்கள்.

குருதித் தட்டுக்குறை (Thrombocytopenia)

குருதித் தட்டுக்குறை (Thrombocytopenia)

இரத்தத்தில் இரத்தத்தட்டுக்களின் அளவு குறைவாக இருக்கும் போது ஈறுகளில் இரத்தக்கசிவு ஏற்படும். ஆரம்பத்திலேயே இதை கவனிக்காமல் விட்டால், அதனால் ஈறுகள் சிதைவடையவும் கூடும். மேலும் உங்களுக்கு குருதித் தட்டுக்குறை இருந்தால், லேசான மோதல் கூட ஈறுகளில் இரத்தக்கசிவை உண்டாக்கும். எனவே கவனமாக இருங்கள்.

இரத்த புற்றுநோய்

இரத்த புற்றுநோய்

ஈறுகளில் இருந்து இரத்தக்கசிவு ஏற்படுவது இரத்த புற்றுநோய்க்கும் அறிகுறியாகும். இரத்தப் புற்றுநோய் அணுக்கள் ஈறுகளில் ஊடுருவி, பல் ஈறுகளை வீங்கச் செய்து, ஈறுகளில் இரத்தப்பெருக்கை உண்டாக்கும். இந்த நிலை மிகவும் மோசமானது. எனவே நீங்கள் நல்ல வாய் சுகாதாரத்தை மேற்கொண்டும், ஈறுகளில் இரத்தக்கசிவு ஏற்பட்டால், தாமதிக்காமல் உடனே மருத்துவரை அணுகுங்கள்.

எச்.ஐ.வி

எச்.ஐ.வி

90 சதவீத எச்.ஐ.வி நோயாளிகள் ஏதாவது ஒரு வாய் பிரச்சனையை சந்திக்க வேண்டியிருக்கும். அதில் ஈறு சம்பந்தப்பட்ட நோய்கள் மற்றும் ஈறுகளில் இரத்தக்கசிவு போன்றவை அடங்கும். ஈறுகளில் இருந்து இரத்தக்கசிவு ஏற்படுவது என்பது எச்.ஐ.வி-க்கான எச்சரிக்கை அறிகுறியாக இல்லாவிட்டாலும், ஈறுகளில் ஏற்படும் இரத்தக்கசிவை சாதாரணமாக எண்ணாமல் அதை குணமாக்குவதில் தீவிரமாக இருக்க வேண்டும்.

கர்ப்ப காலம்

கர்ப்ப காலம்

கர்ப்ப காலத்திலும் ஈறுகளில் இரத்தக்கசிவு ஏற்படும். இதற்கு கர்ப்ப கால ஹார்மோன்கள் ஈறுகளில் வீங்கச் செய்து, காயங்களை உண்டாக்கி, இரத்தக்கசிவை ஏற்படுத்தும். எனவே கர்ப்ப காலத்தில் வாய் சுகாதாரம் என்பது மிகவும் அவசியம். இல்லாவிட்டால், வாயில் உள்ள நோய்க்கிருமிகள் சிசுவை பாதிக்கும். ஆகவே கர்ப்பிணிகள் வாயில் பிரச்சனை இருந்தால் உடனே பல் மருத்துவரை சந்திக்க வேண்டியது அவசியம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Reasons To Take Bleeding Gums Seriously!

Bleeding gums don't necessarily mean oral infection or cavities, it could also indicate something as serious as HIV.
Desktop Bottom Promotion