For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தினமும் காலையில் சுடுநீரில் மஞ்சள் தூள் கலந்து குடிப்பதால் பெறும் நன்மை பற்றி தெரியுமா?

By Maha
|

மஞ்சள் உலகம் முழுவதும் பிரபலமான ஓர் அற்புதமான மசாலாப் பொருள். இதில் ஆன்டி-ஆக்ஸிடனட்டுகள், ஆன்டி- ஏஜிங் பொருட்கள் போன்றவை ஏராளமாக உள்ளது. மேலும் இதில் குர்குமின் என்னும் பொருளும் உள்ளது.

இவை உடலில் ஏற்படும் பல பிரச்சனைகளுக்கு தீர்வளிப்பதாக பல ஆய்வுகளில் நிரூபிக்கப்பட்டுள்ளது. நீங்கள் உங்கள் உடலில் உள்ள பிரச்சனைகளுக்கு உடனடி தீர்வு காண நினைத்தால், தினமும் காலையில் வெதுவெதுப்பான நீரில் மஞ்சள் தூள் சேர்த்து கலந்து குடித்து வாருங்கள்.

இங்கு வெதுவெதுப்பான நீரில் மஞ்சள் தூள் கலந்து குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் என்னவென்று பட்டியலிடப்பட்டுள்ளது. அதைக் கொஞ்சம் படித்துப் பாருங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஆர்த்ரிடிஸ்

ஆர்த்ரிடிஸ்

2012 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், மஞ்சளில் உள்ள குர்குமின் ஆர்த்ரிடிஸ் நோயாளிகளுக்கு நல்ல தீர்வை வழங்குவது தெரிய வந்தது. குறிப்பாக இந்த மஞ்சள் தூளை தினமும் காலையில் வெதுவெதுப்பான நீரில் கலந்து வெறும் வயிற்றில் குடித்து வர மூட்டுகளில் உள்ள வீக்கம், வலி போன்றவை வேகமாக குறைந்தது கண்டறியப்பட்டது.

டைப்-2 நீரிழிவு

டைப்-2 நீரிழிவு

2009 ஆம் ஆண்டு ஆபர்ன் பல்கலைக்கழகத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், மஞ்சள் தூள் டைப்-2 நீரிழிவை தடுப்பது தெரிய வந்தது. ஆகவே உங்களுக்கு நீரிழிவு பிரச்சனை வராமல் இருக்க வேண்டுமானால், தினமும் நீரில் மஞ்சள் தூள் கலந்து குடியுங்கள்.

அழற்சி

அழற்சி

நாள்பட்ட அழற்சிகள் ஏராளமான நோய்களுக்கு வழிவகுக்கும். இப்படி நமக்கு தெரியமலேயே நம் உடலினுள் உள்ள அழற்சிகளை மஞ்சள் தடுக்கும். எனவே உங்கள் உடலில் எப்பிரச்சனையும் வராமல் இருக்க வேண்டுமானால், தினமும் காலையில் வெறும் வயிற்றில் சுடுநீரில் மஞ்சள் தூள் கலந்து குடியுங்கள்.

செரிமானம் மேம்படும்

செரிமானம் மேம்படும்

தினமும் வெதுவெதுப்பான நீரில் மஞ்சள் தூள் கலந்து கூடித்து வந்தால், செரிமான பிரச்சனைகள் வருவதைத் தடுக்கலாம்.

கல்லீரல் பாதுகாக்கப்படும்

கல்லீரல் பாதுகாக்கப்படும்

மஞ்சள் தூள் கல்லீரலில் உள்ள நச்சுமிக்க டாக்ஸின்களை வெளியேற்றி, கல்லீரலில் உள்ள பாதிக்கப்பட்ட செல்களைப் புதுப்பித்து, கல்லீரலை பாதுகாப்புடன் வைத்துக் கொள்ளும். மேலும் மஞ்சள் தூள் பித்த ஓட்டத்தைத் தூண்டி, பித்தப்பையின் வேகத்தை அதிகரித்து, விரிவுபட்ட ஹெபாடிக் நாளங்களைக் குறைக்கும். எனவே உங்கள் கல்லீரல் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமானால் வெறும் வயிற்றில் மஞ்சள் கலந்த நீரைக் குடியுங்கள்.

மூளை ஆரோக்கியம்

மூளை ஆரோக்கியம்

புலனுணர்வு சார்ந்த கோளாறுகளான டிமென்ஷியா மற்றும் அல்சைமர் போன்றவற்றிற்கும், ஒருவகையான வளர்ச்சி ஹார்மோன்களின் குறைபாட்டிற்கும் தொடர்புள்ளது பல ஆய்வுகளில் கண்டுபிடிக்கப்பட்டது. அதே சமயம் மற்றொரு ஆய்வில் மஞ்சளில் உள்ள குர்குமின் வளர்ச்சி ஹார்மோன்களின் மீது நல்ல தாக்கத்தை ஏற்படுத்தி, மூளையில் எவ்வித பிரச்சனைகளும் வராமல் தடுப்பது தெரிய வந்தது.

இதய ஆரோக்கியம்

இதய ஆரோக்கியம்

மஞ்சளில் உள்ள குர்குமின் இதய இரத்த நாளமான தமனிகளில் கொழுப்புக்கள் படிவதைத் தடுத்து, தமனிகளை சுத்தமாக வைத்துக் கொள்ள உதவும். மேலும் 2011 ஆம் ஆண்டு ஜப்பானில் மேற்கொள்ளப்பட்ட ஆய்விலும் மஞ்சள் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தி, இதய நோய்களைத் தடுக்க உதவுவது கண்டறியப்பட்டது. ஆகவே இதய பிரச்சனை உள்ளவர்கள் தினமும் வெறும் வயிற்றில் வெதுவெதுப்பான நீரில் மஞ்சள் தூள் கலந்து குடித்தால் நல்ல பலன் கிடைக்கும்.

முதுமையைத் தடுக்கும்

முதுமையைத் தடுக்கும்

மஞ்சளில் உள்ள நோயெதிர்ப்பு அழற்சித் தன்மை, ப்ரீ ராடிக்கல்களை வெளியேற்றி, முதுமையைத் தள்ளிப் போடும். எனவே நீங்கள் இளமையுடன் இருக்க நினைத்தால், காலையில் தினமும் வெதுவெதுப்பான நீரில் மஞ்சள் தூளைக் கலந்து குடித்து வாருங்கள்.

புற்றுநோய் எதிர்ப்பு பொருள்

புற்றுநோய் எதிர்ப்பு பொருள்

மஞ்சளில் உள்ள குர்குமின் என்னும் சக்தி வாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட் புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை எதிர்த்துப் போராடி, செல்கள் பாதிக்கப்படுவதைத் தடுக்கும். ஆகவே உங்கள் உடலை புற்றுநோயில் இருந்து பாதுகாக்க விரும்பினால், தினமும் வெறும் வயிற்றில் வெதுவெதுப்பான நீரில் மஞ்சள் தூள் கலந்து குடியுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Reasons to Drink Warm Turmeric Water Every Morning

Here are some reasons to drink warm turmeric water every morning. Read on to know more...
Story first published: Thursday, March 10, 2016, 10:49 [IST]
Desktop Bottom Promotion