சக்கரைவள்ளிக்கிழங்கு உடலுக்கு நல்லது என்பதற்கான காரணங்கள்

சக்கரைவள்ளிக்கிழங்கு உடலுக்கு நல்லது என்பதற்கான காரணங்கள்

Posted By: Super Admin
Subscribe to Boldsky

உணவே மருந்து, மருந்தே உணவு என வாழ்ந்தனர் நம் முன்னோர்கள். அவர்களின் ஆரோக்கியத்திற்கு அதுவே காரணம். பண்டைய உணவு வகைகள் சுவையோடு ஆரோக்கியத்தையும் பேணிக் காத்தன. அதில் மிகவும் முக்கியமானது சர்க்கரைவள்ளிக்கிழங்கு ஆகும்.

Reasons Sweet Potato is Good For Health

இது நமது உணவிற்கு மிகப்பெரிய மதிப்பு சேர்க்கிறது. மேழும் இது ஒரு சிறந்த ஊட்டச்சத்து மிகுந்த காய்கறி ஆகும். இது உடலுக்கு மிகவும் நல்லது ஆகையால், மக்கள் உருளைக்கிழங்கிற்கு பதிலாக இதை எடுத்துக் கொள்ள அறிவுருத்தப்படுகின்றது. ஏனெனில் உருளைக்கிழங்கை அதிகம் எடுத்துக்கொள்வது உடம்பிற்கு நல்லதில்லை.

சர்க்கரைவள்ளிக்கிழங்கு சொன்வௌலசி குடும்பத்தைச் சேர்ந்தது. இதில் மாவுச் சத்துடன், இனிப்பு சுவை நிறைந்து உள்ளது. நீங்கள் இந்த சூப்பர் உணவை சாப்பிட காரணங்கள் தேடுகின்றீர்கள் என்றால், நாங்கள் இங்கே உங்களுக்காக இதை ஏன் சாப்பிட வேண்டும் என்பதற்கான 10 காரணங்களைப் பட்டியலிட்டுள்ளோம்.

நீங்கள் இன்னும் எதற்காகக் காத்திருக்கிறார்கள்? சக்கரைவள்ளிக் கிழங்கு உங்களுக்கு வழங்கக் கூடிய என்னற்ற நன்மைகளைத் தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.

1. ஊட்டச் சத்தின் உறைவிடம்: சர்க்கரைவள்ளிக்கிழங்கை, ஒரே வார்த்தையில் விவரிக்க வேண்டுமெனில், அது ஊட்டச்சத்தின் உறைவிடம் எனக் கூறலாம். அதில் நார்ச்சத்துடன், வைட்டமின் ஏ, பி மற்றும் சி, இரும்பு மற்றும் பொட்டாசியம் போன்றவை இருக்கின்றது. சக்கரைவள்ளிக்கிழங்கில் உள்ள வைட்டமின் ஏ (பீட்டா கரோட்டின் வடிவில்) உடல் ஆரோக்கியம், தோல் ஆரோக்கியம், எலும்பு உருவாதல், செல் வளர்ச்சி மற்றும் சரியான நோய் எதிர்ப்பு அமைப்பு போன்றவற்றிற்கு உதவுகின்றது. மேழும் இது ஒரு சிறந்த ஆண்டி ஆக்ஸிடென்டாக செயல்படுகின்றது. விட்டமின் சி, நோய் எதிர்ப்பு அமைப்பை வழுவாக்கி நோய்கள் வராமல் தடுக்கிறது. பொட்டாசியம் தசைப்பிடிப்பை தடுக்கிறது மற்றும் சிறுநீரகங்களின் நடவடிக்கைகளை ஒழுங்கு படுத்துகின்றது. சக்கரைவள்ளிக்கிழங்கில் உள்ள மெக்னீசியம், நரம்புகள், தமனிகள் மற்றும் எலும்புகளை பாதுகாக்கின்றது.

Reasons Sweet Potato is Good For Health

2. கொழுப்பு இல்லை:சக்கரைவள்ளிக்கிழங்கின் ஒரு பெரிய நன்மை என்னவெனில், இதில் கொழுப்புச் சத்து இல்லை என்றாலும், இதை உட்கொண்ட பிறகு வயிறு நிறைந்ததாக உணர்வீர்கள். ஏனெனில் இதில் நார்ச்சத்து அதிகம் இருக்கின்றது.

3. எதிர்ப்பு அழற்சி: சக்கரைவள்ளிக்கிழங்கு ஒரு சிறந்த எதிர்ப்பு அழற்சி காய்கறியாகும். இதில் மிகவும் சிக்கலான கார்போஹைட்ரேட், மாங்கனீசு, வைட்டமின்கள் பி6 மற்றும் சி, நார்ச்சத்து, பீட்டா கரோட்டின், முதலியன உள்ளன. இதில் உள்ள சக்தி வாய்ந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் வீக்கத்தை குறைக்க உதவும்.

4. தாயாகப்போகும் பெண்களுக்கு மிகவும் நல்லது: சக்கரை வள்ளிக் கிழங்கில் உள்ள ஃபோலேட் ஒரு தாயின் கருப்பையில் உள்ள கருவின் வளர்ச்சிக்கு உதவுகிறது.

Reasons Sweet Potato is Good For Health

5. குறைந்த க்ளைசிமிக் அளவு (ஜி.ஐ): சக்கரை வள்ளிக் கிழங்கின் க்ளைசிமிக் அளவு மிகவும் குறைவு. இதனால் இதை உட்கொண்ட பிறகு ரத்தத்தில் சக்கரையின் அளவு உடனடியாக அதிகரிக்காமல், மெதுவாக அதிகரிக்கும். எனவே சாப்பாட்டிற்கு பிறகு ரத்தத்தில் உள்ள சக்கரையின் அளவு அதிகரிக்காது. எனினும், நீங்கள் கவனிக்க வேண்டிய மிக முக்கியமான விஷயம் என்னெவெனில் சக்கரைவள்ளிக்கிழங்கின் ஜி.ஐ அளவு, அதை நீங்கள் எவ்வாறு தயாரிக்கின்றீர்கள் என்பதைப் பொருத்தது. சக்கரைவள்ளிக்கிழங்கை தோழுடன் அரை மணி நேரம் வேகவைத்தால் அதில் உள்ள ஜி.ஐ யின் அளவு 15 கிராமிற்கு 46 என்கிற அளவில் உள்ளது. அதே சக்கரைவள்ளிக்கிழங்கை அரை மணி நேரம் சுட்டு எடுத்தால் ஜி.ஐ யின் அளவு 94.

6. எளிதாக எடுத்துக்கொள்ளலாம்: சக்கரைவள்ளிக்கிழங்கை நீங்கள் விரும்பும் எந்த வடிவத்திலும் சாப்பிட முடியும். நீங்கள் இதை சுட்டு, வேக வைத்து, வறுத்து, வாட்டி அல்லது சூப் வடிவத்தில் எடுத்துக் கொள்ளலாம். இதை நீங்கள் எந்த வடிவத்தில் எடுத்துக் கொண்டாலும், அதில் உள்ள சத்துக்கள் கண்டிப்பாக குறையாது.

7. செரிமானத்தை அதிகரிக்கிறது: சக்கரைவள்ளிக்கிழங்கில் அதிகம் உள்ள நார்ச்சத்துகள், உங்களின் செரிமானம் மற்றும் குடல் இயக்கத்திற்கு உதவுகின்றது.

8. எம்பிசிமா நோயை குணப்படுத்துகின்றது: எம்பிசிமா என்பது ஒரு நுரையீரல் சார்ந்த நோய். இந்த நோய் நுரையீரலில் உள்ள காற்றுப் பைகளை படிப்படியாக அழித்து சுவாச சிக்கலை ஏற்படுத்துகின்றது. இந்த நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் சக்கரைவள்ளிக்கிழங்கை எடுத்துக் கொள்ளலாம். இதிலுள்ள வைட்டமின் ஏ இந்த நோயை குணப்படுத்துகின்றது.

Reasons Sweet Potato is Good For Health

9. வயிற்று புண்களுக்கான தீர்வு: நீங்கள் தீராத வயிற்று புண்களால் அவதியுற்று இருந்தால், சக்கரைவள்ளிக்கிழங்கை உங்கள் உணவில் கண்டிப்பாக சேர்த்துக் கொள்ள வேண்டும். இதிலுள்ள வைட்டமின்கள் மற்றும் கனிமங்கள் வயிற்றுப் புண்களை திறம்பட குணப்படுத்துகின்றது.

10. இதயத்துடிப்பை சீராக்குகின்றது: சக்கரைவள்ளிக்கிழங்கில் உள்ள பொட்டாசியம் இதயத் துடிப்பை சீராக்கி நரம்பு சமிக்ஞைகளை வலுப்படுத்துகின்றது.

English summary

Reasons Sweet Potato is Good For Health

Reasons Sweet Potato is Good For Health
Please Wait while comments are loading...
Subscribe Newsletter