For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தினமும் இந்த 6 அழுத்தப் புள்ளிகளை அழுத்தினால் உடல் எடையைக் குறைக்கலாம் என்பது தெரியுமா?

By Maha
|

உலகில் ஆயுர்வேத, அக்குபிரஷர், அக்குபஞ்சர் போன்றவை மிகவும் பிரபலமான பல்வேறு மருத்துவ முறைகள் இருப்பது அனைவருக்கும் தெரியும். அதில் அக்குபஞ்சர் என்பது ஊசியைக் கொண்டு சிகிச்சை அளிக்கும் முறை. ஆனால் அக்குபிரஷரோ உடலின் சில பகுதியில் கை விரலால் அழுத்தம் கொடுத்து சிகிச்சை அளிக்கப்படும்.

பாதங்களில் உள்ள ஏழு அழுத்தப் புள்ளிகளை தூண்டுவதனால் பெறும் நன்மைகள்!!!

அக்குபிரஷரைக் கொண்டு பல்வேறு பிரச்சனைகளுக்கு தீர்வு காணலாம். அதில் தற்போது நிறைய பேர் அனுபவித்து வரும் உடல் பருமனும் ஒன்று. ஆம், உண்மையிலேயே அக்குபிரஷர் முறையைக் கொண்டு உடல் எடையைக் குறைக்கலாம். ஆனால் இந்த முறையால் உடனடியாக தீர்வு கிடைக்காவிட்டாலும், நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும்.

கழுத்துக்கு பின் ஐஸ் கட்டியை 20 நிமிடம் வைப்பதால் உடலில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து தெரியுமா?

இங்கு உடல் எடை வேகமாக குறைக்க உதவும் 6 அழுத்தப்புள்ளிகள் குறித்து கொடுக்கப்பட்டுள்ளது. அந்த பகுதியில் அழுத்தத்தை தினமும் கொடுத்து வந்தால், நல்ல மாற்றத்தைக் காணலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
அக்குபிரஷர் நன்மைகள்

அக்குபிரஷர் நன்மைகள்

உடல் எடையைக் குறைக்க மேற்கொள்ளப்படும் அக்குபிரஷர் முறையினால், உடல் எடை குறைவது மட்டுமின்றி, செரிமான மண்டலத்தின் செயல்பாடு மேம்பட்டு, உடல் ஆரோக்கியமாகவும் ஃபிட்டாகவும் இருக்கும்.

மெட்டபாலிசத்தை அதிகரிக்கவும்

மெட்டபாலிசத்தை அதிகரிக்கவும்

அக்குபிரஷர் முறையினால் உடல் எடையைக் குறைக்க முயற்சிக்கும் போது, கொழுப்புக்களைக் குறைப்பதில் மட்டும் ஆர்வம் காட்டாமல், உடலின் மெட்டபாலிசத்தை அதிகரிக்கவும், உடலின் உள்ளுறுப்புக்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் நினைக்க வேண்டும்.

இதர நன்மைகள்

இதர நன்மைகள்

இங்கு கொடுக்கப்பட்டுள்ள அழுத்தப் புள்ளிகளை அழுத்தினால், உடல் எடை குறைவது மட்டுமல்லாமல், மன அழுத்தம் நீங்கும் மற்றும் நரம்பு மண்டலம் ரிலாக்ஸ் ஆகும்.

காது

காது

அக்குபிரஷர் முறையின் படி, பசியைக் கட்டுப்படுத்துவது காது தான். ஆகவே படத்தில் காட்டியவாறு காதின் அருகே 1 நிமிடம் அழுத்த வேண்டும். இப்படி 5 முறை ஒரு நாளைக்கு 3 தடவை செய்ய வேண்டும்.

Image Courtesy

தொப்புளுக்கு மேல்

தொப்புளுக்கு மேல்

உடல் எடையைக் குறைக்க முயலும் போது, இப்பகுதியில் உள்ள கொழுப்புக்களைக் குறைக்க நிறைய நேரம் ஜிம்மில் உடற்பயிற்சி செய்வோம். ஆனால் அக்குபிரஷர் முறையின் படி, படத்தில் காட்டியவாறு தொப்புளுக்கு மேலே உள்ள இடத்தில் 5 நிமிடம் அழுத்தம் கொடுக்க வேண்டும். இப்படி ஒரு நாளைக்கு 3 முறை செய்ய வேண்டும். இதனால் செரிமான பிரச்சனைகள், அல்சர், பசியின்மை போன்ற அனைத்தில் இருந்தும் விடுதலைக் கிடைக்கும்.

அடிவயிற்று பகுதி

அடிவயிற்று பகுதி

தொப்புளுக்கு 3 செ.மீ-க்கு கீழே உள்ள இடத்தில் இரு விரல்களையும் வைத்து, 5 நிமிடம் அழுத்தம் கொடுக்க வேண்டும். இப்படி ஒரு நாளைக்கு 2 முறை செய்ய வேண்டும். இதனால் செரிமானம் மேம்படும். செரிமானம் சீரானால், வயிற்றில் தேவையற்ற கழிவுகள் தங்குவது தடுக்கப்படும். உடலும் வலிமைப் பெறும்.

முழங்கை

முழங்கை

முழங்கையின் மடிப்பு பகுதியில் கொடுக்கப்படும் அழுத்தத்தினால் பெருங்குடலின் செயல்பாடு மேம்படும் என்பது உங்களுக்குத் தெரியுமா? முழங்கையில் அழுத்தம் கொடுக்கும் போது, அது குடலின் செயல்பாட்டை மேம்படுத்தி, குடலில் உள்ள அதிகப்படியான கழிவுகள் மற்றும் தேவையற்ற பொருட்களை வெளியேற்றும். அதிலும் இப்பகுதியில் அழுத்தம் கொடுக்கும் போது பெருவிரலைத் தான் பயன்படுத்த வேண்டும். இச்செயலை ஒரு நாளைக்கு பலமுறை செய்து வந்தால், குடலியக்கம் மேம்பட்டு நல்ல பலன் கிடைக்கும்.

முழங்கால்

முழங்கால்

முழுங்காலில் கொடுத்தால், எப்படி உடல் எடை குறையும் என்று நீங்கள் கேட்கலாம். முழங்காலுக்கு 2 இன்ச்சிற்கு கீழே ஆள்காட்டி விரல் கொண்டு 1 நிமிடம் அழுத்தம் கொடுப்பதாலும் உடல் எடையைக் குறைக்கலாம். இந்த செயலை ஒரு நாளைக்கு பல முறை நேரம் கிடைக்கும் போதெல்லாம் செய்து வந்தால், நன்மை விளையும்.

கணுக்கால்

கணுக்கால்

கணுக்காலில் கொடுக்கப்படும் அழுத்தத்தால் மண்ணீரல் நன்கு வேலை செய்யும். மேலும் இப்பகுதியில் கொடுக்கப்படும் அழுத்தம் செரிமான மண்டலத்தை வலிமைப்படுத்தி, மனதை ரிலாக்ஸ் அடையச் செய்யும். அதற்கு படத்தில் காட்டியவாறு கணுக்காலுக்கு உட்புறத்தில் 2 இன்ச் மேலே ஆள்காட்டி விரலால் அழுத்தம் கொடுக்க வேண்டும்.

Image Courtesy

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

உடலுக்கு ஆரோக்கியம் தரும் கருப்பட்டி மிட்டாய்..

English summary

Pressing These Six Acupressure Points In Your Body For Weight Loss

Here are 6 acupressure points in your body for weight loss. Read on to know more...
Desktop Bottom Promotion