For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியாவில் பத்தில் ஒருவருக்கு மனநல பாதிப்பு உண்டாகிறது, ஏன் தெரியுமா?

By Hemalatha
|

உலக மக்கள் தொகையில் 38 சதவீதம், இந்தியா மற்றும் சீனாவின் மக்களே ஆக்கிரமித்துள்ளனர். மக்கள் தொகை அதிகமுள்ள இந்த இரு நாடுகளிலுமே மக்கள் அதிகமாய் மன நல பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளனர் என்று சமீபத்திய ஆராய்ச்சி ஒன்று கூறுகின்றது.

இந்திய- சீன மக்களின் மன நலம் தொடர்பான ஆராய்ச்சி நீண்ட நாட்களாக நடந்து கொண்டிருக்கிறது. இதில் சீனாவில் ஆறு சதவீதத்திற்கும் குறைவாக, நரம்பு தளர்ச்சி, மன அழுத்தம் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

People with mental illness in india

அதேபோல் சைக்யாட்ரிக் நோயினால் பாதிப்புக்குள்ளானோர் 40 சதவீதம், அவர்களின் மன நோயை குணப்படுத்தாமலே இருக்கின்றனர். தகுந்த மன நல மருத்துவரிடம் பரிசோதிக்காமல், அப்படியே விட்டிருக்கிறார்கள்.

இந்தியாவில் பத்தில் ஒருவர் மன நோய்களுக்கு ஆளாகிறார்கள், மன அழுத்தம், பதட்டம் அதனால் உண்டாகும் நரம்பு தளர்ச்சி, ஆகியவ்ற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

சரியாக இந்த நோய்கள் கவனிக்கப்படாமல் இருப்பதற்கு காரணங்களையும் குறிப்பிடுகிறார்கள். தகுந்த மன நல மருத்துவங்கள் இல்லை, சிறந்த மருத்துவர்கள் இல்லை, போதிய அளவு வசதிகள் இல்லை என நிறைய காரணங்களை சாடியிருக்கிறார்கள்.

அரசாங்கத்தால் 1 சதவீதத்திற்கும் குறைவான முதலீடே மன நல மருத்துவமனைகளுக்கு அளிக்கப்படுகின்றன. இதனால்தான் போதுமான வசதி கொண்ட மன நல மருத்துவமனைகள் இந்தியாவில் அமையாததற்கு காரணம் என தெரிவிக்கின்றனர்.

மன நல மருத்துவ மனைகளில் போதுமான ஊழியர்களை நியமிக்க வெண்டும். இந்த மாதிரியான மருத்துவமனைகள் உருவாக சமூகத்தில் தொடர்ந்து ஆதரவு தர வேண்டும்.

நல்ல படித்த மன நல மருத்துவர்கள் சேவை செய்ய வர வெண்டும் என கூறுகின்றனர். இதனால் இன்னும் மனநலக் காப்பகங்கள் அதிகப்படுத்தலாம். இந்த நோய் உள்ளவர்களுக்கு தீர்வு அளிக்கலாம் என்றும் ஆய்வாலர் கூறுகிறார்.

மன அழுத்தம், பதட்டம், தூக்கமின்மை, எபிலெப்ஸி, ஆகியவை இந்தியாவில் வர நம் சமூக கட்டமைப்பு மற்றும் வாழும் சூழ் நிலைகளும் ஒரு விதத்தில் காரணம் என்கின்றனர்.

இதன் தொடர்பான ஆய்வு இன்னும் மேற்கொண்டு வருகிறார்கள். இதனைப் பற்றி லேன்சட் அண்ட் லேன்சட் சைக்யாட்ரி என்ற இதழில் காணலாம்.

English summary

People with mental illness in india

People with mental illness in india
Desktop Bottom Promotion