For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மாதவிடாய் பிரச்சனைகளை சீர்படுத்தும் யோகா!!

|

மாதம் தவறாமல் வரும் மாதவிடாய் உங்களின் உடல் சீராக இயங்குவதை காட்டுகிறது. ஏனெனில் மாதவிடாய் சமயத்தில் ஹார்மோன் சுரப்பிகள் நன்றாக இயங்கி, உடலின் பல பாகங்களுக்கு வலிமை தருகிறது. ரத்தத்தில் நோயெதிர்ப்பு செல்கள் அதிகமாய் கலக்கிறது. கர்ப்பப்பை வலுவாகும்.

மாத விடாய் சீரில்லாமல் வந்தால், அது ஆரோக்கியமில்லை. சரியான ஊட்டசத்து இல்லாததோ, ஹார்மோன் சுரப்பில் பாதிப்பிருந்தால், அல்லது கர்ப்பப்பை பாதிப்பு ஏற்பட்டிருந்தால் இம்மாதிரியான பிரச்சனைகள் உண்டாகியிருக்கும்.

padankushthasana to cure menstrual disorder

சீரற்ற மாதவிடாயை தகுந்த மருத்துவரிடம் சென்று பரிசோதித்துக் கொள்ள வேண்டும். பரிசோதனையில் ஏதும் பிரச்சனைகள் இல்லையென்றால், இந்த மாதவிடாயை நீங்கள் யோகாவின் மூலம் வீட்டிலேயே சரி செய்து கொள்ளலாம்.

பாதங்குஸ்தாசனா :

பாத என்றால் சமஸ்கிருதத்தில் பாதம், அங்குஸ்தா என்றால் பாத கட்டைவிரல், என்று பெயர். இந்த யோகாவை செய்வதனால், கர்ப்பப்பை வலுவடையும். ஹார்மோன் நன்றாக சுரக்கும். மாத விடாய் சீராகும்.

செய்முறை :

முதலில் தடாசனாவில் நில்லுங்கள். நேராக நிமிர்ந்து நிற்க வேண்டும். கைகள் இணைந்து இருக்கவேண்டும்.

பின்னர் மெதுவாக குனிந்து பாதங்களை நோக்கி கைகளை கொண்டு செல்லுங்கள். முகத்தை முட்டிகளில் படுமாறு முயற்சியுங்கள். கைகளால் கால் கட்டைவிரலைப் பிடித்துக் கொள்ளுங்கள்.

முழங்கை வளைக்காமல் நேராக இருக்க வேண்டும். கால்கள் விரைப்பாக இருக்க வேண்டும். ஆழ்ந்து மூச்சை விடுங்கள். அரை நிமிடம் இருந்துவிட்டு இயல்பு நிலைக்கு வரவேண்டும். இதனை சில முறை மீண்டும் செய்யுங்கள். விரைவில் பலன் தெரியும்.

நன்மைகள் :

ஜீரண சக்தியை அதிகப்படுத்தும். மன அழுத்தத்தை குறைக்கும். சிறு நீரகத்தை பலப்படுத்தும். கர்ப்பப்பை வலுவாகும். மாதவிடாய் சீராகும். இனப்பெருக்க மண்டலத்தை தூண்டும்.

English summary

padankushthasana to cure menstrual disorder

padankushthasana to cure menstrual disorder
Story first published: Tuesday, July 26, 2016, 12:15 [IST]
Desktop Bottom Promotion