ஹைப்பர் தைராய்டு பிரச்சனையைக் கட்டுப்படுத்த சில எளிய இயற்கை வழிகள்!

By:
Subscribe to Boldsky

இன்றைய மக்கள் அதிகம் அவஸ்தைப்படும் பிரச்சனைகளில் ஒன்று தான் தைராய்டு பிரச்சனை. இதில் இரண்டு வகைகள் உள்ளன. அதில் ஒன்று ஹைப்போ தைராய்டு, மற்றொன்று ஹைப்பர் தைராய்டு. இப்போது இதில் நாம் பார்க்கப்போவது ஹைப்பர் தைராய்டு பிரச்சனையை இயற்கை வழியில் கட்டுப்படுத்துவது எப்படி என்று தான்.

இங்கு ஹைப்பர் தைராய்டு பிரச்சனை ஏற்படுவதற்கான காரணம், அதற்கான அறிகுறிகள் மற்றும் இயற்கை வழியில் எப்படி கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்வது என்று கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து தெரிந்து பயன் பெறுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

காரணம்

ஹைப்பர் தைராய்டு பிரச்சனை ஏற்படுவதற்கு காரணம், கண்ட மருந்து மாத்திரைகளை எடுப்பது, உப்பை உணவில் அதிகம் சேர்ப்பது, புகைப்பிடித்தல், மன அழுத்தம் போன்றவைகளும் காரணம்.

அறிகுறிகள்

ஹைப்பர் தைராய்டு ஒருவருக்கு இருந்தால், அவர்களுக்கு முடி உதிர்தல், கண்கள் பெரிதாவது, கழுத்தில் வீக்கம், தூக்கமின்மை, திடீர் எடை குறைவு, மூச்சு விடுவதில் சிரமம், வயிற்றுப்போக்கு, பசியின்மை அதிகம் இருப்பது, சீரற்ற மாதவிடாய் சுழற்சி, பலவீனமான தசை, அதிகமாக வியர்வை வெளியேறுவது, படபடப்பு, மிகுதியான சோர்வு, மனநிலையில் ஏற்ற இறக்கம் போன்ற அறிகுறிகள் தென்படும்.

பதப்படுத்தப்பட்ட உணவுகளை தவிர்ப்பது

பதப்படுத்தப்பட்ட உணவுகளில் சேர்க்கப்படும் பொருட்களால் முதலில் கழுத்தில் உள்ள தைராய்டு சுரப்பி பாதிக்கப்பட்டு, அதில் அழற்சி ஏற்பட்டு, ஹைப்பர் தைராய்டு பிரச்சனைக்கு வழிவகுக்கிறது. எனவே இப்பிரச்சனை உள்ளவர்கள் கேன்களில் அடைக்கப்பட்ட உணவுகள், ஜாம், பதப்படுத்தப்பட்ட இறைச்சிகள், மாவுப் பொருட்கள் போன்றவற்றை தங்களின் உணவில் சேர்ப்பது முற்றிலும் தவிர்க்க வேண்டும்.

சர்க்கரை உணவுகளைத் தவிர்க்கவும்

ஹைப்பர் தைராய்டு உள்ளவர்கள், சர்க்கரை மற்றும் மாவுப் பொருட்களைத் தவிர்க்க வேண்டியது அவசியம். இதனால் இரத்த சர்க்கரை அளவு சீராக பராமரிக்கப்பட்டு, நிலைமை மோசமாவது தடுக்கப்படும். உங்களுக்கு உணவில் இனிப்புச்சுவை வேண்டுமானால், தேனை சேர்த்துக் கொள்ளுங்கள். மேலும் தானியங்களில் இருந்து தயாரிக்கப்படும் மாவைத் தவிர்த்து, தானியங்களை உட்கொள்ள ஆரம்பியுங்கள்.

அலர்ஜி உண்டாக்கும் உணவுகளைத் தவிர்க்கவும்

க்ளூட்டன் நிறைந்த உணவுகள் தான் தைராய்டு சுரப்பியில் அலர்ஜியை ஏற்படுத்தி, ஹைப்பர் தைராய்டு பிரச்சனைக்கு காரணமாகிறது. எனவே க்ளூட்டன் நிறைந்த உணவுப் பொருட்களான கோதுமை, பார்லி, சோயா போன்றவற்றை தவிர்ப்பதோடு, உங்களுக்கு நட்ஸ் அலர்ஜியை ஏற்படுத்துமானால் அவற்றையும் தவிர்க்க வேண்டும்.

மசாலா/மூலிகைகளைப் பொருட்களை சேர்க்கவும்

ஹைப்பர் தைராய்டு இருப்பவர்கள், உணவில் இஞ்சி, மஞ்சள், பட்டை போன்றவற்றை அதிகம் சேர்த்து வர, அதில் உள்ள நோயெதிர்ப்பு அழற்சி தன்மையால் தைராய்டு சுரப்பிக்கு நல்ல பாதுகாப்பு கிடைக்கும். அதே சமயம் ஹைப்பர் தைராய்டு பிரச்சனை உள்ளவர்கள், வெங்காயம் மற்றும் பூண்டை அதிகமாக உட்கொள்ளாமல் இருப்பது நிலைமையை மோசமாக்காது.

புரோபயோடிக்ஸ்

புரோபயோடிக்ஸ் குடலில் நல்ல பாக்டீரியாக்களின் வளர்ச்சியை வலிமைப்படுத்தி, செரிமானத்தை சீராக வைத்துக் கொள்ள உதவும். அதற்கு தயிரை தினமும் உட்கொள்ள வேண்டியது அவசியம். மேலும் தயிரில் உள்ள புரோபயோடிக்ஸ் உடலினுள் ஏற்படும் அழற்சிகளைக் குறைக்கும்.

டாக்ஸிக் கெமிக்கல்கள்

ஹைப்பர் தைராய்டு உள்ளவர்கள், டாக்ஸிக் கெமிக்கல்கள் நிறைந்த சூழலில் இருந்து விலகி இருக்க வேண்டும். உதாரணமாக வீட்டை சுத்தம் செய்ய உதவும் கெமிக்கல் கலந்த பொருட்கள், பூச்சிக்கொல்லிகள், முலாம் பூசப்பட்ட பாத்திரங்களில் சமைத்து சாப்பிடுவது, நச்சுமிக்க வாயுக்களை சுவாசிப்பது போன்றவை ஹைப்பர் தைராய்டு பிரச்சனையை மோசமாக்கும்.

புரோட்டீனை அதிகம் எடுக்கவும்

பாதிக்கப்பட்ட திசுக்களை புதுப்பிக்க புரோட்டீன் மிகவும் இன்றியமையாதது. எனவே ஹைப்பர் தைராய்டு இருப்பவர்கள், புரோட்டீன் நிறைந்த உணவுகளை அதிகம் உட்கொள்வது நல்லது.

பச்சை இலைக் காய்கறிகள்

பச்சை இலைக் காய்கறிகளான ப்ராக்கோலி, கேல், முட்டைக்கோஸ் போன்றவற்றில் கொய்ட்ரஜன் இயற்கை வடிவில் உள்ளது. எனவே இவற்றை உணவில் அதிகம் சேர்க்கும் போது, தைராய்டு சுரப்பியில் சுரக்கப்படும் ஹார்மோன்களின் அளவைக் குறைக்கும்.

வைட்டமின் டி அவசியம்

வைட்டமின் டி சத்து நிறைந்த உணவுகளை உட்கொள்வதோடு, அதிகாலையில் சிறிது நேரம் சூரியக்கதிர்கள் சருமத்தின் மேல் படும்படி வாக்கிங் மேற்கொள்வது ஹைப்பர் தைராய்டு பிரச்சனை உள்ளவர்களுக்கு நல்லது.

மன அழுத்தத்தைக் குறைக்கவும்

மன அழுத்தமும் ஹைப்பர் தைராய்டு பிரச்சனைக்கு முக்கிய காரணம் என்பதால், அவற்றைக் கட்டுப்படுத்தும் வழியில் ஒவ்வொருவரும் தினமும் முயற்சிக்க வேண்டும். அதற்கு தியானம், நல்ல பாட்டுக்களை கேட்பது, நண்பர் அல்லது குடும்பத்தினருடன் சந்தோஷமாக நேரத்தைக் கழிப்பது என்று ஈடுபட வேண்டும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

சிறந்த ஹெல்த் இன்சூரன்ஸ் எதுவென, ஒப்பிட்டு பார்த்து தேர்வு செய்யுங்கள்!

English summary

Natural Ways To Treat Hyperthyroidism

Here are some natural ways to treat hyperthyroidism. Read on to know more...
Please Wait while comments are loading...
Subscribe Newsletter