For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பெண்களுக்கு வரும் புற்று நோய்களைப் பற்றி தெரியுமா?

|

பெண்களின் உடல் ஆண்களை காட்டிலும் சற்று சிக்கலானது. பூப்பெய்தல் தொடங்கி, முதிர்மை அடையும் வரை மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டேயிருக்கும். ஹார்மோன் சீரான நிலையில் இல்லாமல் மாறிக் கொண்டேயிருந்தால் அதனால் உடலளவிலும், மனதளவிலும் பெண்கள் பாதிக்கப்படுகிறார்கள்.

பெண்களுக்கு மெனோபாஸ் நிற்கும் வரை ஈஸ்ட்ரோஜன் சுரப்பு இருப்பதால், அவர்களுக்கு புற்று நோய்கள் வருவது தடுக்கப்படுகிறது. இது ஒரு நல்ல விஷயம் என பெண்கள் நிம்மதி கொள்ளலாம். ஆனால் மார்பக புற்று நோயும், கர்ப்பப்பை மற்றும் கர்ப்ப வாய் புற்று நோய் பரவலாக இப்போது அதிகரித்துள்ளது இதனால் பெண்கள் விழிப்புணர்வு கொள்ள வேண்டும்.

பொதுவாக பெண்களுக்கு வரும் புற்று நோய்கள் எவையென பார்க்கலாம்.

Most common types of cancer in Women

மார்பக புற்று நோய் :

மார்பக புற்று நோய் மிக அதிக அளவில் இந்தியாவில் பெண்களைத் தாக்கும் நோயாகும். ஆரம்ப காலகட்டத்தில் இதனை கண்டுபிடித்தால், விரைவில் குண்பப்படுத்திவிடலாம். ஆகவே பெண்கள் அடிக்கடி மார்பகத்தை வீட்டிலேயே பரிசோதித்துக் கொள்வது நல்லது. குறிப்பாக 30 வயது கடந்த பெண்கள் கட்டாயம் மார்பகத்தை பரிசோதித்துக் கொள்வது மிக அவசியம்.

இதற்கு மரபு ரீதியாக காரணங்களை சொல்லலாம். அது தவிர்த்து, சாப்பிடும் உணவு முறை, மார்பை இறுக்கும் உடைகள், தாய்ப்பால் கொடுக்காமல் இருப்பது, காலம் தாழ்த்தி மணம் செய்து கொள்வது, தாமதமாக குழந்தை பெற்றுக் கொள்வது என காரணங்கள் பல உள்ளன.

நுரையீரல் புற்று நோய் :

புகைப்பிடிப்பவர்கள், விடும் புகையை சுவாசிப்பது, புகைப்பிடித்தலை விட இன்னும் ஆபத்தானது. இதனால் வெளிவரும் அதிக ரசாயனம் மிகுந்த வாயுக்களை சுவாசிப்பதால் பெண்களுக்கு நுரையீரல் புற்று நோய் தாக்கும் ஆபத்து உள்ளது.

குடல் மற்றும் மலக்குடல் புற்று நோய் :

கடைகளில் விற்கும் மசாலா கலந்த உணவுகளை அடிக்கடி உண்பது, நல்ல ஆரோக்கியமான காய்கறிகளை உணவில் சேர்த்துக் கொள்ளாமலிருப்பது, ரசாயனங்கள் கலந்த உணவுகளை சாப்பிடுவது ஆகியவை உணவுக்குடல் மற்றும் மலக்குடலில் புற்று நோய் வருவதற்கு காரணங்கள். மரபு சார்ந்த நோய்களில் இதுவும் ஒன்று. மலத்தில் ரத்தம் கலது வருவது இதன் அறிகுறிகள்.

கர்ப்பப்பை புற்று நோய் :

கர்ப்பப்பை மற்றும் கர்ப்ப வாயில் வரும் புற்று நோய் பெருமளவு பெண்களைத் தாக்கும் நோயாகும். இதற்கு காரணங்கள் கர்ப்பப்பையில் உண்டாக்கும் கதிர்வீச்சு, மார்பக புற்று நோய்க்கு அளித்த சிகிச்சைகள், பல கருக்கலைப்புகள், மரபு, உடல் பருமன். ஆகியவை காரணமாக இருக்கலாம்.

நிண நீர் புற்று நோய் :

நோய் எதிர்ப்பு மண்டலத்தில் உண்டாகும் திடீர் மாற்றங்கள், தன்னிச்சையான நோய் எதிர்ப்பு செல்களின் செயல்பாடுகள், வயது ஆகியவற்றால் நிண நீர் புற்று நோய் உண்டாகும். அதேபோல் குறிப்பிட்ட ரசாயனத்தின் தாக்கம் உடலில் அதிகளவு ஏற்பட்டால் நிண நீர் புற்று நோய் ஏற்படும்.

English summary

Most common types of cancer in Women !!

Factors which cause for cancers in women
Story first published: Saturday, July 30, 2016, 9:13 [IST]
Desktop Bottom Promotion