தூங்கப் போகுமுன் நீங்கள் செய்ய வேண்டிய விஷயங்கள் இவைதான்!!

இரவில் தூக்கமில்லாமல் அவதிப்படுபவர்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகிறார்கள். நமது வாழ்க்கை முறைதான் முழுக்க காரணம் என்றாலும் கவலைகளை மறந்து தூங்கச் செல்லுங்கள். உங்களுக்கான சில டிப்ஸ்.

Written By:
Subscribe to Boldsky

தூங்கும் அந்த 8 மணி நேரம்தான் நீங்கள் நிம்மதியாக இருக்கப் போகிறீர்கள். ஆனால் அதிலும் ஒரு நிம்மதியற்ற தூக்கம் இருந்தால் ஒரு சோர்வு தொற்றிக் கொள்கிறது. அது இன்னும் அதிக பாரத்தைதானே தரும்.

mistakes that not to do before go to bed

மன அழுத்தம் இல்லை. மகிழ்ச்சியாகத்தான் இருக்கிறேன். உடலும் அசதியாக இருக்கிறது ஆனால் தூக்கமில்லை என்று சொல்கிறீர்களா? அப்படியென்றால் நீங்கள் படுக்கும் சூழ் நிலையை மாற்றுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
உங்கள் அறை எப்படி இருக்கிறது?

உங்கள் அறை எப்படி இருக்கிறது?

உங்கள் அறை சூடாகவும் மிகவும் குளிராகவும் இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள். இரண்டுமே தூக்கத்தை கெடுப்பவை.

அதிக சூடு தெரிந்தால் ஜன்னல் அறையை இரவுகளில் சில நேரம் திறந்து வைத்து குளிர்ந்தவுடன் மூடிக் கொள்ளலாம். ஏசியை விட இயற்கை காற்று உள்ளே இருந்தால் தூக்கம் வரும் வாய்ப்புகள் அதிகம்.

தலையணை :

தலையணை :

சிலருக்கு தலையணை மாற்றினால் தலைவலி வரும் அல்லது தூக்கம் வராது. இதில் உண்மையும் இருக்கிறது.

நேராக படுப்பவர்கள் சன்னமான தலையணையும் ஒருக்களித்து படுப்பவர்கள் சற்று குஷன் அதிகமுள்ள தலையணையும் வைத்தால் கழுத்து மற்றும் தலைக்கு வசதியாக இருக்கும். தூக்கம் தடைபடாது.

பெட்ஷீட் துவைத்தீர்களா?

பெட்ஷீட் துவைத்தீர்களா?

பெட்ஷீட் துவைக்காமல் மாதக் கணக்கில் உபயோகித்தால் தூக்கம் தடைபடும்.

ஒரு மாதம் துவைக்காமல் படுக்கை விரிப்பை உபயோகித்தால், அதில் 11 மில்லியன் நுண் கிருமிகள் பெருகுகின்றன என ஒரு ஆய்வு சொல்கிறது.

இதனால் நோய்கள் மட்டுமல்லாது தூக்கமும் பாதிக்கின்றன என கூறுகிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.

 அலைபேசியை படுக்கறையில் வைக்கிறீர்களா?

அலைபேசியை படுக்கறையில் வைக்கிறீர்களா?

யாரெல்லாம் மொபைல் டேப்லெட் ஆகியவை படுக்கையறையில் வைக்கிறார்களோ அவர்கள் எல்லாம் மின்னணு சாதனங்களிலிருந்து வெளிப்படும் நீலக்கதிர்களால் பாதிக்கப்படுவார்கள்.

அலைபேசிலிருந்து வெளிவரும் நீலக் கதிர் மூளையை தாக்குகிறது. இதனால் தூக்கமின்மை உண்டாகும் . அதோடு மத்திய நரம்பு மண்டலமும் பாதிக்கப்படும் என்று கூறப்படுகிறது

அலாரத்தை ஸ்னூஸ் செய்கிறீர்களா?

அலாரத்தை ஸ்னூஸ் செய்கிறீர்களா?

அலாரத்தை நீட்டிக்கச் செய்வது மோசமான பழக்கம் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். எக்ஸ்ட்ரா தூக்கம் உங்கள் உடல் நிலை பாதிப்பினை காட்டுகிறதாம்.

மது அருந்துதல் :

மது அருந்துதல் :

மது அருந்தியவுன் தூக்கம் வருவது போலத்தான் இருக்கும். ஆனால் அவை நிம்மதியான ஆழ்ந்த தூக்கத்தை தராது. அதனால்தான் மறு நாள் சோர்வாகி இருப்பீர்கள்.

ஆகவே தூங்குவதற்கு 2 மணி நேரம் முன்பாகவே ஒயின் போன்ற குறைவான ஆல்கஹால் கொண்ட பானங்கள் மட்டும் அளவு குறைவாக அருந்துவது நல்லது என்கிறார்கள்.

 செல்லப் பிராணிகளை அனுமதிக்காதீர்கள் :

செல்லப் பிராணிகளை அனுமதிக்காதீர்கள் :

நாய் பூனை ஆகியவ்ற்றுடன் பிரியமாக தூங்க நினைத்தாலும் அவையும் உங்கள் தூக்கத்தை கெடுப்பவை.

40 % மக்களின் தூக்கமின்மை நோய்க்கு செல்லப் பிராணிகளுடன் படுக்கையில் தூங்குவதே காரணம் என வல்லுநர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

சாக்ஸ் போடுகிறீர்களா?

சாக்ஸ் போடுகிறீர்களா?

சாக்ஸ் போட்டு தூங்குவதால் உங்கள் ரத்த ஓட்டம் அதிகப்படும். இதனால் தூக்கம் இயல்பாக இருக்கும். ஆகவே சாக்ஸ் போட்டு தூங்குங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

mistakes that not to do before go to bed

Common mistakes you are making before going to bed
Please Wait while comments are loading...
Subscribe Newsletter