குடலில் தேங்கியிருக்கும் நச்சுக்களை போக்க இந்த ஜூஸை மூன்று வாரம் குடிங்க!

Subscribe to Boldsky

சராசரியாக ஒரு மனிதன் 70 வயது வரை வாழ்ந்தால். அவன் 100 டன் அளவு உணவும், 40 ஆயிரம் லிட்டர் தண்ணீரும் உட்கொள்கிறான். இதனால் நமது வாழ்நாளில் நமது குடலில் ஏறத்தாழ குறைந்தது 15 கிலோ வரை நச்சுக்கள் தங்குகின்றன. இவற்றை மொத்தமாக நாம் வெளியேற்றுவதே கிடையாது.

நுரையீரலில் உள்ள அழுக்குகளை வெளியேற்றி, அதன் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் உணவுகள்!

இவ்வாறு முழுமையாக வெளியேற்றப்படாத நச்சுக்களால் உடலில் முதலில் சேதமடைவது இரத்தம் தான். உடலில் இரத்தத்தில் நச்சுக் கலந்துவிட்டால் அது ஏனைய உடல் பாகங்கள் முழுவதும் சேதத்தை உண்டாக்க வாய்ப்புகள் அதிகம் இருக்கின்றன.

இரத்தத்தில் உள்ள அழுக்குகளை வெளியேற்ற உதவும் உணவுப் பொருட்கள்!

இதனால் தான் நமது குடலை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டியது மிகவும் அவசியம் எனக் கூறப்படுகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

ஆளிவிதைகள்

ஒரு நாளுக்கு மூன்று ஸ்பூன் அளவு அரைத்த ஆளிவிதைகள் உட்கொண்டு வந்தால் உங்கள் குடலை முற்றிலுமாக சுத்தம் செய்துவிட முடியும். மேலும் சிறுகுடலில் தேங்கும் சளி, மல தகடு, ஒட்டுண்ணிகள் போன்றவற்றை அகற்றவும் இது உதவுகிறது.

கொழுப்பைக் கரைக்க

மேலும் இது உடல் எடையை சீரான முறையில் குறைக்கவும், கொழுப்பை கரைக்கவும் கூட வெகுவாக உதவுகிறது. இதை நீங்கள் பின்பற்றி வருவதால் உடலில் நேர்மறை விளைவுகள் நிறைய உண்டாகும்.

இரத்தம்

ஆளிவிதைகள் நச்சுக்களை உடலில் இருந்து போக்குவது மட்டுமின்றி, இரத்தத்தின் கொலஸ்ட்ரால் அளவையும் குறைக்க பயனளிக்கிறது. மேலும் இது சுவாசக் குழாய், வாயுக் குழாய், சிறுநீர் குழாய் போன்றவற்றை சுத்தம் செய்து உடல்நலத்தை ஊக்குவிக்கிறது.

முதல் வாரம்

முதல் வாரம் காலை உணவில் நொதித்த 100 மில்லி மோரில் ஒரு டேபிள்ஸ்பூன் அளவு அரைத்த ஆளிவிதைகள் கலந்து குடித்து வாருங்கள்.

இரண்டாம் வாரம்

இரண்டாம் வாரம் காலை உணவில் நொதித்த 100 மில்லி மோரில் இரண்டு டேபிள்ஸ்பூன் அளவு அரைத்த ஆளிவிதைகள் கலந்து குடித்து வாருங்கள்.

மூன்றாம் வாரம்

மூன்றாம் வாரம் காலை உணவில் நொதித்த 150 மில்லி மோரில் மூன்று டேபிள்ஸ்பூன் அளவு அரைத்த ஆளிவிதைகள் கலந்து குடித்து வாருங்கள்.

குறிப்பு

அரைத்த ஆளிவிதைகள் கிடைக்கவில்லை எனில், முழு ஆளிவிதைகளை வாங்கி நீங்களே கூட அரைத்துக் கொள்ளலாம். மூன்று வாரம் தொடர்து காலை வேளையில் இதை உண்டு வந்தால் உடலில் நல்ல மாற்றத்தை காண முடியும்.

தண்ணீர்

மறவாமால் தினமும் 2-3 லிட்டர் தண்ணீர் குடித்து வாரங்கள். மேலும் இந்த முறையை நீங்கள் வருடத்திற்கு ஒரு முறை பின்பற்றி வந்தால் குடல் சார்ந்த எந்த பிரச்சனையும் வராது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

சிறந்த ஹெல்த் இன்சூரன்ஸ் எதுவென, ஒப்பிட்டு பார்த்து தேர்வு செய்யுங்கள்!

English summary

Miraculous Juice That Eliminates Toxins From Your Intestines

Miraculous Juice That Eliminates Toxins From Your Intestines, read here in tamil.
Story first published: Wednesday, March 30, 2016, 9:34 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter