கண்கள் சிவப்பதற்கான உண்மையான காரணம் என்னவென்று தெரியுமா?

Subscribe to Boldsky

உங்களுக்கு கண்கள் அடிக்கடி சிவப்பாகிறதா? அதற்கு என்ன காரணம் என்றே தெரியவில்லையா? அப்படியெனில் இக்கட்டுரை உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஏனெனில் இக்கட்டுரையில் கண்கள் சிவப்பாவதற்கான காரணங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

மேலும் உங்களுக்கு கண்கள் அடிக்கடி சிவந்தால், சற்றும் தாமதிக்காமல் மருத்துவரை அணுகி சோதித்துக் கொள்ளுங்கள். நிபுணர்களும், கண்கள் சிவப்பதோடு, அரிப்புக்களும் ஏற்பட்டால், அது கண் கோளாறுக்கான ஓர் அறிகுறியாக கூறுகின்றனர்.

இங்கு கண்கள் சிவப்பாவதற்கான உண்மையான காரணங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

விழிவெண்படல சீழ் புண்

முறையற்ற காண்டாக்ட் லென்ஸ் அல்லது நோய்த்தொற்றுகளால் விழிவெண்படலத்தில் சீழ் புண் உருவாகும் வாய்ப்புக்கள் உள்ளது. இப்படி விழிவெண்படலத்தில் புண் இருந்தால், அதனால் கண்களில் இருந்து தண்ணீர் வழிவதோடு, கண்கள் சிவந்து, வீக்கத்துடனும், வலியுடனும் இருக்கும்.

உலர்ந்த கண்கள்

கண்களால் போதிய அளவில் கண்ணீர் உற்பத்தி செய்யப்படாவிட்டால், கண்கள் வறட்சியுடன் இருப்பதோடு, கண்கள் எப்போதும் சிவப்புடனும் இருக்கும்.

காண்டாக்ட் லென்ஸ்

காண்டாக்ட் லென்ஸை நீண்ட நேரம் அணிந்திருந்தால், அதன் காரணமாக கண்கள் சிவப்பதோடு, கண்களில் அரிப்புடன் நோய்த்தொற்றுகளும் தாக்கும் வாய்ப்புள்ளது. எனவே காண்டாக்ட் லென்ஸ் அணிபவர்கள் எப்போதும் கவனமாக இருக்க வேண்டும்.

லேப்டாப்/கம்ப்யூட்டர்/மொபைல் திரை

ஒருவர் லேப்டாப்/கம்ப்யூட்டர்/மொபைல் திரைகளை நீண்ட நேரம் பார்த்தவாறு இருந்தால், அதனாலும் கண்கள் சிவக்கும். ஆகவே எப்போதும் இவற்றைப் பயன்படுத்தும் போது, கண்களுக்கு சிறிது ஓய்வு கொடுங்கள் மற்றும் கண்களை அடிக்கடி சிமிட்டுங்கள்.

கண்களைத் தொடுவது

கண்களை அடிக்கடி கையால் தொடுவதனாலும், கண்கள் சிவக்கும். மேலும் கண்களில் மேக்கப் போட்டால், அதன் காரணமாகவும் கண்களில் நோய்த்தொற்றுகள் பரவி கண்கள் சிவந்து காணப்படும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

உங்களுக்கான சிறந்த ஹெல்த் இன்சூரன்ஸ் எது, ஒப்பிட்டு பார்த்து தேர்வு செய்யுங்கள்!

சிறந்த ஹெல்த் இன்சூரன்ஸ் எதுவென, ஒப்பிட்டு பார்த்து தேர்வு செய்யுங்கள்!

English summary

Know The Common Causes Of Red Or Bloodshot Eyes!

Here are some common causes of red or bloodshot eyes. Read on to know more...
Please Wait while comments are loading...
Subscribe Newsletter