For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியாவில் அதிகரித்து வரும் நோய்களில் இதுவும் ஒன்று !! எது தெரியுமா?

|

சர்க்கரை வியாதி போலவே, மற்றொரு நோயும் இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அது சிறு நீரக் நோய்தான்.

கடந்த 15 வருடங்களில் மலைக்கத்தக்க வகையில் சிறு நீரக நோய் அதிகரித்து வருகிறது. 100ல் 17 பேருக்கு சிறு நீரக நோய் தாக்குகிறது என கணக்கெடுப்பு கூறுகின்றது.

Kidney Disorder Doubled in India Over 15 years

ஒவ்வொரு கோடி மக்களில் 150- 230 பேர் சிறு நீரக நோயின் இறுதி நிலையில் இருப்பதாகவும், 2,20,000-2,75,000 நோயாளிகள் சிறு நீரக மாற்று சிகிச்சைக்கு இருப்பதாகவும் கூறுகின்றனர்.

வருடத்திற்கு வருடம் 15 % டயாலிஸிஸ் செய்துவருவது அதிகரித்து வருகிறது. குழந்தைகளும் இதில் உள்ளடக்கம் என்பது கவலைகுரிய விஷயம். இதயம் போல், சிறு நீரகத்தின் நோய்களைப் பற்றி போதிய விழிப்புணர்வு மக்களிடம் இல்லாததே காரணம் என மேக்ஸ் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையின் மருத்துவர் சுதீப் கூறுகிறார்.

காரணம் என்ன?

அதிகமான உடல் எடை, குறைந்த நீர்சத்து கொண்ட உணவுகளை சாப்பிடுவது, நீர் சரியாக குடிக்காமல் இருப்பது, அதே போல் மிக முக்கியமான விஷயம் சோடியம் கலந்த உணவுகளை அதிகம் உண்பது சிறு நீரகத்தை பாதிக்கும். ஒரு நாளைக்கே 1-5- 2.3 கிராம் அளவே உப்பு சேர்த்துக் கொள்ள வேண்டும். ஆனால் நாம் க்டைகளில் சாப்பிடும் விகிதம் இது போல் இரண்டு மடங்கு அமைகிறது.

தடுப்பது எவ்வாறு ?

இந்திய உடல் நலத்துறை அடுத்த 2 வருடத்திற்குள் மாவட்ட அளவில் 2000 டயாலிஸிஸ் சென்டர் அமைக்கப்படும் என கூறியுள்ளது.

இதனை தடுக்க போதிய விழிப்புணர்வு மக்களிடம் உருவாக வேண்டும். குறிப்பாக குழந்தைகளுக்கு நல்ல ஒழுங்கான வாழ்க்கை முறையை கடைப்பிடிக்க சொல்லித் தர வேண்டும். வாழ்க்கை முறை என்பது நேரத்திற்கு உண்பது. அதுவும் ஆரோக்கியமான உணவுகளையும், பழங்களையும் சாப்பிட சொல்வது, நிறைய நீர் அருந்தச் சொல்ல வேண்டும்.

இந்தியாவில் 300- 400 டயாலிஸிஸ் சென்டர்கள் தற்போது உள்ளன. 60 % நோயாளிகள் சிறுநீரக நோய் சரிவர கவனிக்கப்படாமல் இருக்கின்றனர். இந்தியாவின் பெரும் நகரங்களில் சிறு நீரக நோய்க்கான சிறப்பு மருத்துவர்கள் சுமார் 1500 சிறந்த மருத்துவர்கள் இருக்கின்றனர். வெறும் 4 % நோயாளிகளுக்கே மாற்று சிறு நீரகம் கிடைக்கின்றன. இதெல்லாம் கணக்கெடுப்பில் தெரிய வந்துள்ளது.

சிறு நீரகம் அதி முக்கியமான வேலையை செய்கிறது. மற்ற உறுப்புகளைக் காட்டிலும் அதிக பாரங்களை தாங்குவது சிறு நீரகம்தான். அதனால்தான் இரு சிறு நீரகங்கள் இயற்கை நமக்கு கொடுத்துள்ளது. ஆகவே அதனை பாதுகாப்பது நம் கையில் உள்ளது.

English summary

Kidney Disorder Doubled in India Over 15 years

Did you know the Disease Which substantially Increases ever year ?
Story first published: Monday, August 22, 2016, 14:59 [IST]
Desktop Bottom Promotion