இவைகள் உங்கள் ஆரோக்கியத்தைப் பற்றி தான் சொல்கிறது என்று தெரியுமா?

By:
Subscribe to Boldsky

நம் உடலில் ஒரு நிமிடத்தில் ஏன் ஒரு நொடியில் பல மில்லியன் செயல்பாடுகள் நடைபெறுகின்றன. ஒவ்வொரு நிமிடமும் நம் உடல் நமக்கு ஒருசில சமிக்கைகளை அனுப்பும். அப்படி அனுப்பும் சில சமிக்கைகளை நாம் பொருட்படுத்தாமல் அசாதாரணமாக நினைத்துக் கொண்டு, சரியான நேரத்தில் சரிசெய்யாமல் தள்ளிப் போடுவோம்.

ஆனால் நம் உடல் நமக்கு அனுப்பும் சமிக்கைகளை ஆரம்பத்திலேயே கவனித்து, அதைத் தடுக்கும் முயற்சியில் ஈடுபட்டால் பல தீவிர பிரச்சனைகளைத் தடுக்கலாம். இங்கு நாம் ஒவ்வொருவரும் அசாதாரணமாக எடுத்துக் கொள்ளக்கூடாத சில முக்கியமான சமிக்கைகள் கொடுக்கப்பட்டுள்ளது. அதைக் கொஞ்சம் விரிவாக படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

கால் தசைப்பிடிப்பு, மோசமான தூக்கம் மற்றும் எரிச்சல்

இவை அனைத்தும் உங்கள் உடலில் பொட்டாசியம் மற்றும் மக்னீசியம் குறைபாடு இருப்பதற்கான அறிகுறியாகும். எனவே மக்னீசியம் அதிகம் நிறைந்த உணவுப் பொருட்களான நட்ஸ், சூரியகாந்தி விதை, பாதாம் போன்றவற்றை அதிகம் உட்கொள்ள வேண்டும். பொட்டாசியத்தின் அளவை அதிகரிக்க தினமும் பச்சை இலைக்காய்கறிகளான பசலைக்கீரை, கேல் போன்றவற்றை உட்கொள்ள வேண்டும். மேலும் ஆப்ரிக்காட், ப்ளம்ஸ், பீட்ரூட் போன்றவற்றிலும் இச்சத்துக்கள் உள்ளது.

உப்பு உணவுகளின் மீது ஆவல்

உங்களுக்கு உப்புமிக்க உணவுகளின் மீதான ஆவல் அதிகம் இருந்தால், அதற்கு உங்கள் சிறுநீர்பிறப்புறுப்பு அமைப்பில் நோய்த்தொற்றுகள் அல்லது அழற்சி உள்ளது என்று அர்த்தம்.

சரும வறட்சி

சரும வறட்சி, வைட்டமின் ஈ குறைபாட்டினைக் குறிக்கிறது. எனவே வைட்டமின் ஈ நிறைந்த உணவுப் பொருக்டளான நட்ஸ், காய்கறி எண்ணெய் மற்றும் மீன் எண்ணெய் மாத்திரைகளை உட்கொண்டு வருவதன் மூலம் இக்குறைபாட்டினைத் தடுக்கலாம்.

இனிப்புக்களின் மீதான ஆவல்

உங்களுக்கு இனிப்பு பதார்த்தங்களின் மீது ஆவல் அதிகம் இருந்தால், அது நரம்பு சோர்வு உங்களுக்கு இருப்பதைக் குறிக்கிறது. உடலுக்கு ஆற்றல் வேண்டும் என்பதை உங்களுக்கு இனிப்பு உணவுகளின் மீதான ஆவலை அதிகரித்து உடல் வெளிக்காட்டுகிறது. ஆகவே, டார்க் சாக்லேட் மற்றும் தேன் போன்றவற்றை உட்கொள்ளுங்கள். இதனால் இரைப்பை பிரச்சனைகளும் தடுக்கப்படும்.

ஈறுகளில் இரத்தக்கசிவு

ஈறுகளில் இரத்தக்கசிவு ஏற்படுமாயின், உங்களுக்கு வைட்டமின் சி குறைபாடு இருப்பதாக அர்த்தம். எனவே தினமும் டீ பருகுவதோடு, ஆரஞ்சு, எலுமிச்சை, பூண்டு, காய்கறிகள் போன்றவற்றை உட்கொள்ளுங்கள்.

பச்சை உணவுகளின் மீதான ஆவல்

பச்சை உணவுகளின் மீது ஆவல் அதிகம் இருந்தால், உங்களுக்கு இரைப்பை அழற்சி அல்லது கல்லீரல் பிரச்சனைகள் இருப்பதற்கான அறிகுறி. இருப்பினும் பச்சை உணவுகள் தசைப்பிடிப்புகள் மற்றும் வயிற்று பிரச்சனைகளை குறைக்கும்.

முழங்கைகளில் வறட்சி

முழங்கைகளில் வறட்சி அதிகம் இருப்பின், அதற்கு வைட்டமின் சி மற்றும் ஏ குறைபாடு தான் காரணம். எனவே காய்கறிகள் மற்றும் பழங்களான கேரட், ஆரஞ்சு, பூசணிக்காய் மற்றும் ஆப்ரிக்காட் போன்றவற்றை அதிகம் உட்கொள்ளுங்கள்.

கடல் உணவுகளின் மீதான ஆவல்

இந்த ஆவல் உங்களுக்கு அயோடின் குறைபாடு இருப்பதற்கான அறிகுறியாக இருக்கலாம்.

புளிப்பு உணவுகளின் மீதான ஆவல்

புளிப்பு உணவுகள் கல்லீரல் மற்றும் பித்தப்பையில் சுரக்கும் அமிலங்களின் சுரப்பை தூண்டும். எனவே எலுமிச்சை மற்றும் க்ரான்பெர்ரி பழங்களை அதிகம் உட்கொள்ளுங்கள்.

உடையும் நகங்கள் மற்றும் முடி

உங்களது நகங்கள் மற்றும் முடி உடையுமாயின், அதற்கு வைட்டமின் பி அல்லது கால்சியம் உடலில் குறைவாக உள்ளது என்பதற்கான அறிகுறியாகும். ஆகவே பருப்பு வகைகள், பால், உருளைக்கிழங்கு, தானியங்கள் போன்றவற்றை உணவில் அதிகம் சேர்த்து வாருங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

தித்திக்கும் தேன் மிட்டாய் இப்போது ஆன்லைனில்..

சிறந்த ஹெல்த் இன்சூரன்ஸ் எதுவென, ஒப்பிட்டு பார்த்து தேர்வு செய்யுங்கள்!

English summary

Important Signals About Your Health You Must Never Ignore

Here are some important signals about your health you must never ignore. Read on to know more...
Story first published: Wednesday, May 25, 2016, 10:38 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter