ஒரே மாதத்தில் பாதிக்கப்பட்ட கல்லீரலை இயற்கை முறையில் சரிசெய்வது எப்படி?

உண்ணும் உணவுகள் முதல் சுவாசிக்கும் காற்று என அனைத்தின் வழியாகவும் உடலில் சேரும் நச்சுக்களை கல்லீரல் தான் சுத்தம் செய்கிறது. இத்தகைய கல்லீரலை சுத்தம் செய்வது எப்படி என்று கொடுக்கப்பட்டுள்ளது.

Subscribe to Boldsky

கல்லீரலின் பணி காலப்போக்கில் மாறிவிட்டது. கல்லீரல் டாக்ஸின்களை உடலில் இருந்து வேகமாக வெளியேற்றும் பணியை செய்து வருகிறது. இது ஒரு மிகப்பெரிய கடினமான பணி. ஆனால் நாம் டாக்ஸின்கள் நிறைந்த சூழலில் வாழ்ந்து வருவதால், கல்லீரல் மிகவும் கடினமாக வேலை செய்கிறது.

How to Heal Damaged Liver Naturally Within a Month

அதுவும் உண்ணும் உணவுகள் முதல் சுவாசிக்கும் காற்று என அனைத்தின் வழியாகவும் உடலில் சேரும் நச்சுக்களை கல்லீரல் தான் சுத்தம் செய்கிறது. இப்படி ஒரே சமயத்தில் டாக்ஸின்கள் உடலில் அதிகரிக்கும் போது, நாளடைவில் அது கல்லீரலை கடுமையாக பாதிப்படையச் செய்யும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

கல்லீரல் பாதிக்கப்பட்டுள்ளதை உணர்த்தும் அறிகுறிகள்

ஒருவருக்கு கல்லீரல் பாதிக்கப்பட்டிருந்தால், குறிப்பிட்ட அறிகுறிகள் தென்படும். அவையாவன:

* மலம் அல்லது சிறுநீரின் நிறம், வெளியேறும் நேரம் மற்றும் அளவில் அசாதாரண மாற்றம்

* சருமத்தின் நிறம் மஞ்சளாக இருப்பது

* கண்களின் வெள்ளைப்பகுதி மஞ்சளாக இருப்பது

* வயிற்று உப்புசம் அல்லது செரிமான பிரச்சனைகள்

 

கல்லீரல் நொதி பரிசோதனை

வேறொரு சிறப்பான வழி கல்லீரல் நொதி பரிசோதனையை செய்து பார்ப்பது. இதனால் கல்லீரலில் உள்ள நொதியின் அளவு சீரான அளவில் உள்ளதா இல்லையா என்பதைக் கொண்டு தெரிந்து கொள்ளலாம்.

காரணம் #1

கல்லீரல் பாதிப்படுவதற்கு அதிகப்படியான அளவில் மது அருந்துதல் முக்கிய காரணம். மதுவை ஒருவர் அளவுக்கு அதிகமாக குடித்தால், அதனால் உடலில் சேரும் டாக்ஸின்களை கல்லீரலால் வெளியேற்ற முடியாமல் போய், கல்லீரல் பாதிக்கப்படும்.

காரணம் #2

மோசமான உணவு பழக்கமும் கல்லீரலை பழுதடையச் செய்யும். குறிப்பாக எண்ணெயில் பொரிக்கப்பட்ட உணவுகள், பதப்படுத்தப்பட்ட உணவுகள் போன்றவை கல்லீரலின் பணியை கடுமையாக்கி, நாளடைவில் பழுதடையச் செய்யும்.

காரணம் #3

உங்கள் பரம்பரையில் யாருக்கேனும் கல்லீரல் நோய் இருந்தால், மரபணுக்களின் காரணமாகவும் கல்லீரல் நோய் வரும் வாய்ப்புள்ளது. எனவே எப்போதும் கவனமாக இருங்கள்.

பழச்சாறுகள்

கல்லீரலில் சேரும் டாக்ஸின்களை தண்ணீர் மற்றும் நற்பதமான காய்கறிகள் மற்றும் பழங்களால் ஆன ஜூஸ்கள் மூலம் வெளியேற்ற முடியும். எனவே தினமும் ஏதேனும் ஒரு பழம் அல்லது காய்கறி ஜூஸைக் குடித்து வாருங்கள்.

கற்பூரவள்ளி

கற்பூரவள்ளியில் உள்ள மருத்துவ குணங்கள், கல்லீரலில் இருக்கும் நொதிகளின் உற்பத்தியைத் தூண்டி, கல்லீரலில் உள்ள நோய்த்தொற்றுக்களை எதிர்த்துப் போராடி, கல்லீரலை ஆரோக்கியமாக செயல்பட செய்யும். எனவே கற்பூரவள்ளி இலையை தினமும் வாயில் போட்டு மென்று சாப்பிடுங்கள்.

தண்ணீர்

உடலிலேயே டாக்ஸின்களை வெளியேற்றும் பணி தான் மிகவும் பெரிய வேலை. இதற்கு நீர் மிகவும் உதவி புரியும். ஆகவே தினமும் தவறாமல் 4 லிட்டர் நீரைக் குடியுங்கள்.

 

கிரான்பெர்ரி ஜூஸ்

கிரான்பெர்ரி ஜூஸ் உடலுறுப்புக்களுக்கு மிகவும் சிறப்பானது. இந்த ஜூஸ் டாக்ஸின்களை வெளியேற்றும் கல்லீரலையே சுத்தம் செய்யும். ஆகவே சர்க்கரை சேர்க்காத கிரான்பெர்ரி ஜூஸைக் குடித்து வாருங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

சிறந்த ஹெல்த் இன்சூரன்ஸ் எதுவென, ஒப்பிட்டு பார்த்து தேர்வு செய்யுங்கள்!

English summary

How to Heal Damaged Liver Naturally Within a Month

Want to know how to heal damaged liver naturally within a month? Check out...
Please Wait while comments are loading...
Subscribe Newsletter