அடிக்கடி தாகம் எடுப்பது உடல் உறுப்புகளை எப்படி எல்லாம் பாதிக்கிறது என தெரியுமா?

உடலில் நீர் வறட்சி ஏற்படுவதால், நாம் அதீத உடல்நல, உடல் உறுப்பு கோளாறுகளை எதிர்கொள்ள வேண்டிய நிலை உண்டாகலாம். முக்கியமாக, மூளை மற்றும் சிறுநீரகங்களில்...

Subscribe to Boldsky

நம் உடல் எடையில் 70% க்கும் மேலாக நீரின் பங்கு தான் இருக்கிறது. நமது ஆரோக்கியத்தை மேம்படுத்த, சீரான நிலையில் வைத்துக் கொள்ள நாம் அவசியமாக எடுத்துக் கொள்ள வேண்டிய உணவு வகை நீர் தான்.

உடலில் நீர் வறட்சி ஏற்படுவதால், நாம் அதீத உடல்நல, உடல் உறுப்பு கோளாறுகளை எதிர்கொள்ள வேண்டிய நிலை உண்டாகலாம். முக்கியமாக, மூளை மற்றும் சிறுநீரகங்களில்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

எனர்ஜி!

நீங்கள் சீரான அளவில் தண்ணீர் உட்கொண்டால் தான் உடலுக்கு தேவையான எனர்ஜி கிடைக்கும். இது தான் உங்கள் உடல் உறுப்புகளை சீராக இயங்க உதவும்.

சிறுநீரகம்!

சிறுநீரகம் சீராக இயங்க வேண்டும் என்றால் நீங்கள் நீர் உணவுகளை சரியான இடைவேளையில், சரியான அளவில் எடுத்துக் கொள்ள வேண்டும். அது நீராக இருக்கலாம், நீர் பானங்களாக இருக்கலாம்.

சிறுநீர்!

உங்கள் சிறுநீரை வைத்தே உங்கள் சிறுநீரகம் சரியாக இயங்கி வருகிறதா என்பதை சரிபார்க்க முடியும். உங்கள் சிறுநீர் வெளிர் நிறத்தில் வெளிப்படும் வரை அது ஆரோக்கியமாக இருக்கிறது என்பதை நாம் அறிந்துக் கொள்ள முடியும்.

நீர் அவசியம் என்ற அறிகுறி!

மங்கிய நிறத்தில் சிறுநீர் வருகிறது எனில், உங்கள் சிறுநீரகம் சீராக இயங்க நீர் அளவு இல்லாமல் சிரமப்படுகிறது என்பதை அறியலாம். இதனால், நீங்கள் உடனே சீரான அளவில் நீர் அருந்த வேண்டும் என்பதை புரிந்துக் கொள்ள வேண்டும்.

நீர்வறட்சி!

உடலில் நீர் வறட்சி ஆவதால் சிறுநீரகம், மூளை மட்டுமின்றி, உங்கள் இதர உடல் உறுப்புகளிலும் செயற்திறன் குறைபாடு உண்டாகும். இதை மனதில் வைத்துக் கொள்ள வேண்டியது அவசியம்.

குறைபாடுகள்!

நீர்வறட்சி காரணமாக, மயக்கம், அறிவாற்றல் மந்தம், மனநிலை சமநிலை இழத்தல், குறைந்த இரத்த அழுத்தம் உண்டாவது, சரும வறட்சி, தலை வலி, ஏன் நீர் வறட்சி நீடித்திருந்தால் மரணம் கூட ஏற்படலாம்.

நீரின் முக்கியத்துவம்!

நீங்கள் சரியான அளவு (ஒருநாளுக்கு 2 - 4 லிட்டர் அளவு நீர்) குடித்து வருவதால் உடல் எடையை கட்டுப்படுத்த முடியும். ஆரோக்கியத்தை சீராக பராமரிக்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

சிறந்த ஹெல்த் இன்சூரன்ஸ் எதுவென, ஒப்பிட்டு பார்த்து தேர்வு செய்யுங்கள்!

English summary

How Dehydration Affects Your Brain and Kidney?

How Dehydration Affects Your Brain and Kidney? read here in tamil.
Story first published: Monday, November 14, 2016, 12:35 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter