For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நீங்க சிக்கன் அதிகம் சாப்பிடுவீங்களா? அப்ப கட்டாயம் இத படிச்சு பாருங்க...

By Maha
|

இன்றைய காலத்தில் சைவ உணவை விட, அசைவ உணவுகளைத் தான் ஏராளமானோர் விரும்பி சாப்பிடுகின்றனர். குறிப்பாக சிக்கனைத் தான் அனேக மக்கள் சாப்பிடுகிறார்கள். அதற்கேற்றாற் போல் எந்த ஒரு ஹோட்டல்களிலும் சிக்கன் வெரைட்டிகளே அதிகம் இருக்கிறது.

அக்காலத்தில் வீட்டிலேயே வளர்க்கும் நாட்டுக் கோழியைத் தான் மக்கள் சமைத்து சாப்பிட்டு வந்தனர். ஆனால் இக்காலத்திலோ இறைச்சி அதிகம் வேண்டுமென்றும், கோழி சீக்கிரம் வளர வேண்டுமென்றும் கண்ட கெமிக்கல்கள் கோழி ஊசியின் வழியே கொடுக்கப்படுகிறது.

சிக்கன் விங்ஸை மட்டும் தயவு செய்து சாப்பிடாதிங்க!! ஏன்னா அதுல...

இதனால் தற்போது ஒவ்வொரு கோழியும் அசுர வளர்ச்சியுடன் அதிக இறைச்சியைக் கொண்டிருக்கின்றன. இப்படி கெமிக்கல் ஊசிகள் போடப்பட்ட சிக்கன் தான் எங்கும் விற்கப்படுகிறது. இந்த சிக்கனை தினமும் அல்லது அடிக்கடி உட்கொண்டால், உடல் பருமன், சிறுநீரக பாதிப்பு மற்றும் உடலின் பிற உறுப்புக்களும் பாதிப்பிற்குள்ளாகும்.

மேலும் சிக்கனை பெண்கள் அதிகமாக உட்கொண்டு கருவுறுதலில் பிரச்சனை கூட ஏற்படும் வாய்ப்புள்ளது. சரி, இப்போது சிக்கனைப் பற்றிய சில பயங்கரமான உண்மைகளைக் காண்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஆன்டி-பயாடிக்ஸ்

ஆன்டி-பயாடிக்ஸ்

கோழிகள் வேகமாகவும், பெரியதாகவும் வளர்ச்சி அடைய மனிதர்களுக்கான ஆன்டி-பயாடிக்ஸ் கொடுக்கப்படுகிறது. ஆனால் இப்படி ஆன்டி-பயாடிக்ஸ் கொடுத்து வளர்க்கப்படும் சிக்கனை நாம் உட்கொண்டால், அதனால் பல்வேறு பக்க விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும்.

ஹார்மோன் ஊசி

ஹார்மோன் ஊசி

தற்போதைய கோழிகள் முன்பு போல் ஒல்லியாக இல்லாமல், நன்கு கொழுகொழுவென்று இருப்பதற்கு காரணம், அதன் வளர்ச்சியைத் தூண்டும் ஹார்மோன் ஊசிகளைப் போடுவதால் தான். இப்படி வளர்ச்சியைத் தூண்டும் ஹார்மோன் ஊசிகள் போடப்பட்ட சிக்கன், மனித உயிருக்கே உலை வைக்கும். எனவே முடிந்த அளவில் சிக்கன் சாப்பிடுவதைத் தவிர்த்திடுங்கள்.

பாக்டீரியா தாக்கப்பட்ட கோழிகள்

பாக்டீரியா தாக்கப்பட்ட கோழிகள்

ஆய்வு ஒன்றில் 97 சதவீத கோழிகள் பாக்டீரியாக்களின் தாக்குதல்களுக்கு உட்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. இதற்கு கோழியின் வளர்ச்சியைத் தூண்டும் ஆன்டி-பயாடிக்குகள் மற்றும் இதர ஊக்க மருந்துகள் ஓர் காரணம். ஆனால் இது தெரிந்தும் பல இடங்களில் நோய்த்தொற்று ஏற்பட்ட சிக்கனை விற்று வருகின்றனர். எனவே கவனமாக இருங்கள்.

ரோக்ஸர்சோன் மருந்து

ரோக்ஸர்சோன் மருந்து

இன்னும் சில கோழி பண்ணைத் தொழிலாளர்கள், கோழியின் வளர்ச்சியை அதிகரிக்கவும், எடை அதிகமாக இருக்கவும் ரோக்ஸர்சோன் என்னும் ஊக்க மருந்தைக் கொடுக்கின்றனர். ஆனால் 2011 ஆம் ஆண்டு உணவு மற்றும் மருந்து நிர்வாகம், கோழிகளுக்கு இந்த மருந்தைக் கொடுக்க தடை விதித்தது. இருப்பினும், இன்னும் பல கோழிப் பண்ணைகளில் இம்மருந்து கொடுக்கப்பட்டு தான் வருகிறது.

நச்சுமிக்க ஆர்சனிக்

நச்சுமிக்க ஆர்சனிக்

சில ஆய்வுகளில் சிக்கனில் நச்சுமிக்க உலோகமான ஆர்சனிக் இருப்பது தெரிய வந்துள்ளது. இந்த ஆர்சனிக் மனிதருக்கு மிகவும் ஆபத்தை ஏற்படுத்தும் நச்சு வகையைச் சேர்ந்தது. சிக்கனில் இந்த ஆர்சனிக் இருப்பதற்கு காரணம், சிக்கனுக்கு கொடுக்கப்படும் ஹார்மோன் ஊசிகள், ஆன்டி-பயாடிக்குகள் மற்றும் இதர மருந்துகள் தான்.

சுமார் 7 மில்லியன் கோழிகள் கொல்லப்படுகிறது

சுமார் 7 மில்லியன் கோழிகள் கொல்லப்படுகிறது

கோழிப் பண்ணையில் சுமார் 7 மில்லியன் சேவல்கள் கொல்லப்படுகின்றன. அதுவும் அவற்றைக் கொல்லும் முறை மிகவும் மோசமாக இருக்கும். எப்படியெனில் காற்றோட்டமில்லாத இடத்தில் கார்பன்டைஆக்ஸைடை நிரப்பி சேவல்களைக் கொல்வார்களாம். சில சமயங்களில் நேரத்தை சேமிக்க உயிருடன் இருக்கும் போதே அவற்றை கிரைண்டரில் போடுவார்களாம். இப்போது தெரிகிறதா உங்களுக்கு எங்கிருந்து இவ்வளவு சிக்கன் லெக் பீஸ் எல்லாம் கிடைக்கிறது என்று.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Horrifying Facts About Chicken Meat

Chicken meat is harmful for health as it has hormones and other drugs. Know these scary facts about the chicken meat. Read on the article to know.
Desktop Bottom Promotion