மாதவிடாய் பிரச்சனைகளுக்கான சில கிராமத்து வைத்தியங்கள்!

By:
Subscribe to Boldsky

ஒவ்வொரு மாதமும் பெண்கள் சந்திக்கும் பிரச்சனை தான் மாதவிடாய் சுழற்சி. இக்காலத்தில் பெண்கள் பல பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும். அதிலும் இன்றைய காலத்தில் சில பெண்களுக்கு சீரான மாதவிடாய் சுழற்சி நடைபெறுவதில்லை.

இன்னும் சிலருக்கு அளவுக்கு அதிகமான இரத்தப்போக்கு மற்றும் கடுமையான வயிற்று வலி போன்றவை ஏற்படும். இந்த மாதிரியான சூழ்நிலையில் பெண்கள் கண்ட மாத்திரைகளைப் போடுவார்கள். ஆனால் இப்படி கண்ட மாத்திரைகளை அதிகம் எடுத்துக் கொண்டால் அதனால் பிற்காலத்தில் கருவுறுதலில் பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும்.

எனவே தமிழ் போல்ட்ஸ்கை மாதவிடாய் பிரச்சனைகளுக்கான சில கிராமத்து வைத்தியங்களைக் கொடுத்துள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

வெற்றிலை

இரத்தப்போக்கு அதிகமாக இருக்கும் போது, சிறிது வெற்றிலையை அரைத்து பேஸ்ட் செய்து, நீரில் கலந்து குடித்து வர அப்பிரச்சனை குணமாகும்.

மல்லி விதை

2 கப் நீரில் 1 டீஸ்பூன் மல்லியை சேர்த்து தண்ணீர் பாதியாக குறையும் வரை நன்கு கொதிக்க விட்டு இறக்கி வடிகட்டி, அதில் தேன் கலந்து குடிக்க வேண்டும். இப்படி ஒரு நாளைக்கு 2-3 முறை குடித்து வர அதிகமாக இரத்தப்போக்கு ஏற்படுவது குறையும்.

இஞ்சி

வயிற்று வலி மற்றும் சீரான மாதவிடாய் சுழற்சி இல்லாதவர்கள், 1 துண்டு இஞ்சியை ஒரு கப் நீரில் போட்டு கொதிக்க வைத்து இறக்கி, தேன் கலந்து, உணவு உண்ட பின் பருக குணமாகும்.

பட்டைத் தூள்

பட்டைத் தூளை எலுமிச்சை சாற்றுடன் சேர்த்து கலந்து தினமும் குடித்து வர, மாதவிடாய் சுழற்சி சீராகும்.

முளைக்கட்டிய வெந்தயம்

சிறிது வெந்தயத்தை முளைக்கட்ட வைத்து, சாலட் உடன் சேர்த்து உட்கொண்டு வர, மாதவிடாய் காலத்தில் ஏற்படும் வயிற்று வலி தடுக்கப்படுவதோடு, மாதவிடாய் சுழற்சியும் சீராகும்.

எள்

மாதவிடாய் பிரச்சனை உள்ளவர்கள், 1 டீஸ்பூன் எள்ளை தினமும் இரண்டு முறை உட்கொண்டு வர, அனைத்தும் குணமாகும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

சிறந்த ஹெல்த் இன்சூரன்ஸ் எதுவென, ஒப்பிட்டு பார்த்து தேர்வு செய்யுங்கள்!

English summary

Home Remedies For Menstruation Problems

Here are some home remedies for menstruation problems. Read on to know more...
Please Wait while comments are loading...
Subscribe Newsletter